தெறிக்கவிடும் இந்தியன் 2 ப்ரமோஷன் – வானத்தில் பறக்கும் கொடி! …. (VIDEO)

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கமல் ஹாசன் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் இந்தியன் 2. அனிருத் இசையமைப்பில் இத் திரைப்படத்தின் பாடல்கள் அண்மையில் வெளியாகி வைரலாகியது.

இத் திரைப்படத்தில் சித்தார்த், ப்ரியா பவானி ஷங்கர், ரகுல் ப்ரீத் சிங், பொபி சிம்ஹா, காஜல் அகர்வால் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்நிலையில் எதிர்வரும் ஜூலை 12ஆம் திகதி இந்தியன் 2 வெளியாகவுள்ளது.

இப்படத்தினை பல வழிகளிலும் புரோமோஷன் செய்து வருகிறது படக்குழு.

அந்த வகையில் டுபாயில் ஸ்கை டைவிங் மூலம் படத்தினை புரமோஷன் செய்துள்ளது.

ஷங்கர் என்றால் பிரம்மாண்டம் என்று அர்த்தம் அதற்காக இவ்வளவு பிரம்மாண்டமாக ப்ரமோஷன் வேலைகள் நடக்கும் என்று யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.

ப்ரமோஷனே இவ்வளவு சூப்பராக இருக்கும்போது திரைப்படம் பட்டையைக் கிளப்பும் என்பதில் சந்தேகமில்லை.

குறித்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியாகியுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button