வரலட்சுமி – நிக்கோலாய் திருமணம்: திரண்டு வந்த கோலிவுட் பிரபலங்கள்; அனிதா விஜயகுமார் வைரல் க்ளிக்ஸ்!
வரலட்சுமி சரத்குமார் – நிலக்கோலாய் சச்தேவ் திருமணம் திருமணத்தில் பங்கேற்ற விஜயகுமாரின் மகள் அனிதா விஜயகுமார் புகைப்படங்கள்
வரலக்ஷ்மி சரத்குமார் நிலக்கோலாய் சச்தேவ் திருமணம் இன்று சென்னையில் நடைபெற்ற நிலையில், திருமணத்திற்கு தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் பலர் வந்து கலந்துகொண்டுள்ளனர்.
நடிகை ராதிகாவுடன் அனிதா விஜயகுமார்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிரான சரத்குமாரின் மகள் என்ற அடையாளத்துடன் தமிழ் சினிமாவில் அறிமுகமான வரலக்ஷ்மி சரத்குமார், தொடர்ந்து, பல வெற்றிப்படங்களில் நடித்திருந்தார்.
நடிகர் சரத்குமாருடன் அனிதா விஜயகுமார்
இவர் நாயகியாக நடித்ததை விட, வில்லி கேரக்டரில் நடித்து பலரின் பாராட்டுக்களை பெற்றிருந்தார். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார்.
நடிகை மீனாவுடன் அனிதா விஜயகுமார்
கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவருக்கும் இவரின் நீண்டநாள் காதலர் நிக்கோலாய் சச்தேவ் என்பவருக்கும் திடீர் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியானது.
இதனையடுத்து இன்று (ஜூலை 2) சென்னையில் இவர்களின் திருமணம் நடைபெற்றது. கடந்த இரு தினங்களாக திருமணத்திற்கு முந்தைய விழாக்கள் தொடர்பான புகைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது.
அந்த வகையில், திருமணத்திற்கு முந்தைய நாள் விழாவில், பழம்பெரும் நடிகர் விஜயகுமாரின் மகளும் மருத்துவருமான அனிதா விஜயகுமார் தனது மகள் ஸ்ரீஜெய்யுடன் கலந்துகொண்டுள்ளார்.
இந்த விழாவில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை அனிதா விஜயகுமார் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
நடிகர் பிரபுதேவாவுடன் அனிதா விஜயகுமார்.
நடிகர் பிரபுவுடன் அனிதா விஜயகுமார்
நடிகை த்ரிஷாவுடன் அனிதா விஜயகுமார்
![]()