லோகேஷ் தயாரிப்பில் வில்லனாக மிரட்ட வரும் எஸ்.ஜே.சூர்யா – பகத்பாசில்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் ராகவா லாரன்ஸ். இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் உருவாகும் ‘பென்ஸ்’ படத்தில் நடிக்க இருக்கிறார்.

லோகேஷ் கனகராஜ் இதற்கு முன்னதாக ‘பைட் கிளப்’ என்ற படத்தை தயாரித்திருந்தார்.’பென்ஸ்’ படத்தை பாக்யராஜ் கண்ணன் இயக்குகிறார். இந்த படம் குறித்த ‘அப்டேட்’ தற்போது வெளியாகி இருக்கிறது.

அதன்படி, ‘பென்ஸ்’ படத்தில் எஸ்.ஜே.சூர்யா வில்லனாக நடிக்கிறார். அவருடன் இன்னொரு வில்லனாக பகத் பாசிலும் நடிக்கிறாராம்.இருவரும் வில்லத்தனத்தில் மிரட்ட போகிறார்களாம். ஏற்கனவே ராகவா லாரன்ஸ் உடன் எஸ்.ஜே.சூர்யா ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ படத்தில் இணைந்து கலக்கி இருந்தார்.

அந்தவகையில் ராகவா லாரன்சுடன், பகத் பாசில் முதன் முறையாக நடிக்க உள்ளாராம். வில்லத்தனத்தில் மிரட்டி வரும் எஸ்.ஜே.சூர்யாவும், பகத் பாசிலும் ஒன்றாக இணைந்து நடிக்க இருப்பது ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

லோகேஷ் கனகராஜ், தற்போது ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகும் ‘கூலி’ படத்தை இயக்கி வருகிறார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button