சிங்கப்பூர் சென்ற ‘இந்தியன் 2’ படக்குழு: பிரமாண்ட வரவேற்பு

பிரமாண்ட இயக்குநர் சங்கரின் இயகத்தில் உருவாகியுள்ள படம் ‘இந்தியன் 2’. ரசிகர்கள் மத்தியில் இந்தப்படத்துக்கான எதிர்பார்ப்பு உச்சமடைந்துள்ளது.

இந்த நிலையில் படத்தை விளம்பரப்படுத்த சிங்கப்பூர் சென்றுள்ள ‘இந்தியன் 2’ திரைப்படத்தின் நாயகன் கமல்ஹாசனை ஆரவாரத்துடன் வரவேற்றுள்ளனர் சிங்கப்பூரில் உள்ள தமிழ் ரசிகர்கள்.

கமலுடன் நடிகர்கள் சித்தார்த், எஸ். ஜே சூர்யா ஆகியோரும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

மலேசியாவில் அந்நாட்டுப் பிரதமர் அன்வார் இப்ராகிமையும் ரசிகர்களையும் சந்தித்தபின், தம் படக்குழுவினரோடு சிங்கப்பூருக்கு சென்றுள்ளார் கமல்.

‘இந்தியன் 3’ படம் வெளிவர இருப்பதே ‘இந்தியன் 2’ படத்தைத் தூக்கி நிறுத்துவதாகக் கூறிய கமல், மூன்றாம் பாகத்துக்கும் மக்களின் ஆதரவை நாடினார்.

‘இந்தியன்’ படத்தயாரிப்பின்போது மக்களுக்கு அதன் வெற்றி குறித்து இருந்த ஐயம், ‘இந்தியன் 2’ தயாரிப்பின்போது இல்லை என்றும் அதுவே படத்தரத்தை உறுதிப்படுத்துவதை முன்னுரிமை ஆக்கியுள்ளது என்றும் அவர் சொன்னார்.

கடந்த ஜூன் 25ஆம் திகதி வெளியான ‘இந்தியன் 2’ முன்னோட்டக் காட்சி, இதுவரை 10 மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வைகளைப் பெற்றுள்ளது.

‘இந்தியன் 2’ படம் எதிர்வரும் 12ஆம் திகதி உலகம் முழுவதும் வெளியாக உள்ள நிலையில் படத்தை விளம்பரப்படுத்தும் பணியும் தீவிரமடைந்துள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button