வேட்டியில் ஆண்களின் கம்பீரம்! …. ஏலையா க.முருகதாசன்.
ஏலையா க.முருகதாசன்
ஊரில் ஆள் பாதி ஆடை பாதி என்ற மூதுரை உண்டு. ஆணாகிலும் பெண்ணாகிலும் அவர்கள் உடுத்தும் உடைகளில் தமது உடலுக்கும் உடல் வாகிற்கும் ஏற்றவாறு உடைகளை உடுத்தினால் அவர்கள் கம்பீரமாகத் தோற்றமளிப்பார்கள்.
தமது நிறத்துக்கு எந்த உடையின் நிறம் பொருத்தமாக இருக்கும் என்பதில் கவனம் செலுத்துதல் வேண்டும். நிறம் உடலின் பருமன்,உயரம் போன்றவற்றை கவனத்தில் எடுத்து உடைகளை உடுத்துதல் வேண்டும்.
தமிழர் தமது பண்பாட்டு உடையாக இன்னும் தொடர்ந்து இருப்பது பெண்களுக்கு சீலையும்,ஆண்களுக்கு வேட்டியுந்தான்.திருமணம் செய்யாத இளம் யுவதிகள் பெரும்பாலும் அரைத் தாவணியும் சட்டையும் அணிந்து கொள்வார்கள். தமிழ்ப் பண்பபாட்டு உடைக்குள் சுடிதாரும், சல்வார் கம்மீசுமகூட புகுந்து விட்டது.
வேட்டி ஆண்களுக்கு கம்பீரமான உடையேதான். வேட்டி உடுத்திருக்கம் ஆண்களுக்கு கம்பீரமான அழகைக் கொடுப்பது வெள்ளை வேட்டி அல்லது பட்டு வேட்டிகளே.
இப்பொழுது நிற வேட்டிகளை ஆண்கள் உடுக்கத் தொடங்கியுள்ளார்கள்.ஆனால் வெள்ளைவேட்டி அல்லது பட்டு வேட்டிகள் போல ஆண்களுக்கு கம்பீரத்தைக் கொடுக்காது.
வெளிநாடுகளில் ஏதாவது ஒரு விழாவென்றால் வேட்டி உடுத்திருக்க வேண்டும் என்பதற்காக ஆண்கள் அணிந்திருக்கும் நீளக் காற்சட்டைக்கு மேலாக இரண்டு மீற்றர் வேட்டியயான நாலு முழ வேட்டியை அல்லது எட்டு முழம் என்று சொல்லுகின்ற நாலு மீற்றர் வேட்டியை மடித்துக் கட்டுகிறார்கள்.
வேட்டிகளைச் சரியாக, வேட்டியின் கீழ்ப் பகுதி மேலே கீழே இறங்காமல் ஒழுங்காக கட்ட வேண்டுமென்றால் முதலில் நீளக்காற்சட்டைக்கு மேலாக வேட்டியை மடித்துக் கட்டுவதை நிறுத்த வேண்டும்.
வேட்டி கட்டுவது கலாச்சாரத்தை மேம்படுத்துவதாக நினைத்துக் கொண்டு ஏதோ வேட்டி கட்டினால் சரி என்பது போலவும் புகைப்படத்துக்காகவுமே வேட்டியைக் கட்டி வருகிறார்கள்
வேட்டிகளின் கரைகள் அகலமானதாயும் அகலம் குறைந்தனவாகவும் இருந்து வருகின்றன.
வேட்டி உடுத்துவதில் ஒரு அழகியல் இருக்கின்றது.தாயகத்தில் ஏதாவது குடும்ப நிகழ்வாக இருந்தாலென்ன,பொது விழாவாக இருந்தாலென்ன கோவில் திருவிழாக்களாக இருந்தாலென்ன,நிகழ்வு நடனக்கும் இடங்களுக்கு வேட்டி உடுத்துத்தான் போக வேண்டும் என்ற நிலை வரும் போது வீட்டிலிருந்தே வேட்டிகளை உடுத்துக் கொண்டுதான் போவார்கள்.
இரண்டு மீற்றர் வேட்டியாயின் உள்ளாடைக்கு மேலாக இடுப்பிலிருந்து இரண்டு சென்றிமீற்றர் கீழ் வயிற்றுப் பகுதியில் தொப்புளுக்கு கீழே வேட்டித் தலைப்பை பின்பக்கமாக வலது கையால் எடுத்து இடது பக்க தொடைக்கருகிலான பின்பக்க இடுப்பில் அழுத்திப்பிடித்தபடியே இடதுபக்கத் தலைப்பை தொப்புளுக்கு நேரே செருகுதல் வேண்டும்.
வேட்டியின் கீழ்க் கரைகள் ஒன்றுக்கொன்று ஏறி இறங்கி இருக்கக்;கக்கூடாது.வேட்டி உடுத்ததன் பின்பு கால்கள் இரண்டையம் அகலமாக வைத்து வேட்டியை தளர்நிலைக்குக் கொண்டு வருதல் வேண்டும் குறிப்பாக நடக்கும்: போது தொடை தெரியாதவண்ணம் பார்த்துக் கொள்ளுதல் வேண்டும்.தொடை தெரிகிறதே என்று அடிக்கடி வேட்டித் தலைப்பால் மறைத்துக் கொண்டிருந்தால் நடையில் உள்ள கம்பீரம் குறைந்துவிடும்.
இதுபோல நாலு மீற்றர் வேட்டியை இடுப்புக்கு மேலாக இரண்டு மீற்றர் உயரத்தில்,ஆரம்பத்தில் இரண்டு மீற்றர் வேட்டிபோல இடது இடுப்படியில் வேட்டியின் இடதுபக்கப் பகுதியை செருகிவிட்டு மிகுதி வேட்டியை தொப்புளுக்கு நேர் கீழாக கொண்டு வந்து மடித்துச் nசுருகிவிட்டு மிகுதி வேட்டியை வலது பக்கமாக கொண்டு போய் பின்பக்காக இடதுபுறம் சுற்றிக் கொண்டு வந்து தலைப்பை தொப்புளுக்கு நேரே வெருகுதல் வேண்டும்.
நாலுமீற்றர் வேட்டியை இடுப்பைச் சற்றி அதிக சுற்றுக்கள் சுற்றுவதால் கீழ்க்கரைகள் ஒரே உயரத்தில் இருக்கத்தக்கதாக பார்த்துக் கொள்ளுதல் வேண்டும்.
வேட்டியின் கீழ்ப்பக்கம் கணுக்காலை மூடியும் பாதத்தைத் தழுவியும் குதிக்காலுக்குக் கீழ் தரையோடு இழுபடாமலும் கட்டுதல் வேண்டும்.
வேட்டியை உடுத்துக் கொண்டு நடக்கும் போது வேட்டி தடக்குப்படுகிறதே என்று கையால் வேட்டியின் முன்பக்கத்தைத் தூக்கிக் கொண்டு நடப்பது கம்பீரத்தைத் தராது.
இரண்டு சென்ரிமீற்றர் வயிற்றுப் பகுதியையும் சேர்த்துக் கட்டுவதால் வேட்டி இறுக்கமாக நிற்பதற்காகவேயாகும். வேட்டியை உடுத்ததன் பின்பு பிட்டப் பகுதியிலிருந்து கீழ் நோக்னகி தொடைவரை அழுத்திவிடுதல் பிட்டப்பகுதி வேட்டியில் சுரக்கங்களை ஏற்படுத்தாது.
வேட்டி ஆண்களுக்கு அழகானது.அதை ஒழுங்காக,தான் கம்பீரமாக தெரிய வேணும் என்ற இரசிப்புத்தன்மையுடன் கட்ட வேண்டும். வேட்டிக்கு புஸ்சேர்ட்டே பொருத்தமானது. சட்டையின் கீழ்பகுதி பிட்டத்தின் அரைப்பகுதியை மட்டுமே சுற்றிநிற்றல் வேண்டும்.
உடை எதுவாக இருந்தாலும் உடுத்துவதில் இரசிப்புத்தன்மை இல்லாமலும் ஏதோ இருந்துவிட்டுப் போகட்டும் என்ற சலிப்புடன் கட்டுவதைத் தவிர்க்க வேண்டும். அழகைக் கம்பீரத்தை இரசிக்காதவர்கள் யாருமே இல்லை.
ஒவ்வொருவரும் அவர்கள் ஆணாக இருந்தாலென்ன பெண்ணாக இருந்தாலென்ன தனது உருவத்தை இன்னொருவருடன் ஒப்பிடவே கூடாது.அது மனதில் தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்திவிடும்.
இந்த தாழ்வு மனப்பான்மை மனதில் ஏக்கத்தையும் நிம்மதி இன்மையையும் ஏற்படுத்திவிடும்.
ஒப்பீடு செய்த இந்த உணர்வு அது மனக் குழப்பமாக மாறி மற்றவர்கள் மீது காழ்ப்புணர்ச்சியை ஏற்படுத்திவிடும்.இந்தக் காழ்ப்புணர்ச்சி வேறு எதனையும் சிந்திக்கவிடாது எந்நேரமும் மன உளைச்சலை ஏற்படுத்தும்.
ஒவ்வொருவரும் தமக்குக் கிடைத்த உடல் அருமையானது அற்புதமானது அழகானது இயற்கை எனக்களித்த வரம் எனத் தன்னம்பிக்கை கொள்வதன் மூலம் முகப்பொலிவை ஏற்படுத்தும்.
முகத்தை மெலிதான புன்னகையுடன் வைத்திருப்பதும்,நிமிர்ந்த தோற்றமும் நேர்கொண்ட பார்வையுடன் வைத்திருப்புதே கம்பீரத்தையம் அழகையும் கொடுக்கும்.
வேட்டியும் நவநாகரீக உடையேதான். அழகாக சீராக அதனைக் கட்டுவதன் மூலம் உங்களை நினைத்து நீங்களே மகிழ முடியும். உங்கள் உடலை நீங்கள் இரசியுங்கள், வேட்டி உடுத்ததன் பின் ஆகா அருமையாக இருக்கின்றதே மனதில் சொல்லிக் கொள்ளுங்கள்.