ஷாருக்கானுக்கு ஜோடியாகும் சமந்தா?

பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான். இவர் தற்போது ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் மீண்டும் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும், இப்படத்தில் இவருக்கு ஜோடியாக சமந்தா நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.ஷாருக் கான் முன்னதாக, ஜவான் படத்தில் தென்னிந்திய நடிகையான நயன்தாராவுடன நடித்திருந்தார். தற்போது சமந்தா உடன் நடிக்க இருப்பது இருவரது ரசிகர்களையும் சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளது.

இப்படம் தேசபக்தி நிறைந்த படமாக உருவாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஷாருக்கான் ஏற்கனவே ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் ‘டங்கி’ படத்தில் நடித்தார். இந்த படம் ரூ.500 கோடிக்கு மேல் வசூல் செய்தது. இந்த நிலையில் இந்த கூட்டணி மீண்டும் புதுப்படம் மூலம் இணைய இருக்கிறது.

சமந்தா கடைசியாக விஜய் தேவரகொண்டாவிற்கு ஜோடியாக குஷி படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் வெப் சீரிஸ் மற்றும் படங்களில் நடித்து வருகிறார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button