AI இனப்படுகொலை குறித்து தவறான தகவல்களை பரப்பக்கூடும்: எச்சரிக்கும் யுனெஸ்கோ

செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சி இனப்படுகொலை மறுப்பில் ஒரு புதிய எழுச்சியை ஏற்படுத்தக்கூடும் என யுனெஸ்கோ எச்சரிக்கை விடுத்துள்ளது.

யுனெஸ்கோ அறிக்கையொன்றை வெளியிட்டு இந்த விடயத்தை தெரிவித்துள்ளது.

இணையத்தில் பரவும் இனப்படுகொலை (Holocaust) பற்றிய தவறான கூற்றுகளை AI விளைவிக்கலாமென தீர்மானிக்கப்பட்டுள்ளது.

திட்டங்களில் உள்ள குறைபாடுகள் காரணமாக வெறுப்புக் குழுக்கள் மற்றும் இனப்படுகொலை மறுப்பாளர்கள் வேண்டுமென்றே AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி யூதர்கள் மற்றும் ஏனைய குழுக்களின் கொலையை தவறாகக் கேள்விக்குள்ளாக்கும் உள்ளடக்கத்தை உருவாக்குவார்கள் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் மூலம் இனப்படுகொலை நடக்கவில்லை அல்லது மிகைப்படுத்தப்பட்டதாக கூறுவதற்குப் பயன்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலைமையானது யூத எதிர்ப்புக்கு வழிவகுக்கும் எனவும் 20 ஆம் நூற்றாண்டின் வரலாற்றில் ஒரு முக்கிய தருணத்தைப் பற்றிய தவறான புரிதலுக்கு வழிவகுக்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

AI தொழில்நுட்பத்தை பொறுப்பற்ற முறையில் பயன்படுத்துவதன் மூலம் இனப்படுகொலையின் கொடூரமான உண்மைகளை நீர்த்துப்போகவோ அல்லது பொய்யாக்கவோ அனுமதிப்போமானால் யூத விரோதம் வெடிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், AI தொழில்நுட்பத்தின் வளர்ச்சி மற்றும் பயன்பாட்டிற்கான நெறிமுறை விதிகளை நிறுவுவதற்கும், நம்பகத்தன்மையற்ற தகவல்களின் வாய்ப்புகளைக் குறைப்பதற்கும், வன்முறை மற்றும் இனப்படுகொலை பற்றிய உண்மைக்கு புறம்பான தகவல்களை பரப்புவதனை தடுப்பதற்கும் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு யுனெஸ்கோ அழைப்பு விடுத்துள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button