“பெண்கள் குளிப்பதை மறைந்திருது பார்த்து” … கவிதை …. முல்லைஅமுதன்.
வீட்டுக்கருகாமையில்
குளம் இருந்தது.
கல்லெறிந்தோ,உடல் முழுக்க சேறுகளைப் பூசியபடி
குளித்தோம்.
சில சமயங்களில்
பெண்கள் குளிப்பதை மறைந்திருது பார்த்து
பின்
பிடிபட்டு அடிவாங்கியபின்
அப்பா வெளியில் செல்லாதே ..
கண்டித்தார்.
அம்மாவின் திட்டுக்குப் பயந்து
பின் வளவு
மரவெள்ளிச் செடிகளுக்கிடையில் ஒளிந்திருந்தேன்
பல நாளாய்..
இவ்வளவிற்குப் பிறகும்
குளம் அமைதியாகவே இருந்தது.
ஆனாலும்
அடிக்கடி பெய்த மழையால்
தொந்தரவிற்குள்ளானதாகப் பேசிக்கொண்டார்கள்.
இன்று காலையிலிருந்து
குளத்தடி பரபரப்பாகியது..
குளிக்க வந்த சிறுமியை யாரோ
கொன்று குளத்தில் வீசிவிட்டார்களாம்.
கடைசியாக நான் தான் குளித்துவெளியேறியிருந்தேன்.
யாரோ சொல்லி கைது செய்தனர்..
அப்பவின் கோபம்,
அம்மாவின் அழுகை..
சிறுவன் என்று பாராமல் சிறையில்
அடைத்தனர்.
மறு நாள் பூசாரி மீதான சந்தேகம் வலுக்க
கொலைசெய்யப்படுகிறார்.
நான் இப்போதும் சிறுவனாய் சிறையில்..
முல்லைஅமுதன்.