சீரற்ற வானிலையால் பல பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கின

சீரற்ற காலநிலை காரணமாக களனி, கடுவலை, பியகம, வெல்லம்பிட்டிய உள்ளிட்ட நகரங்களின் பிரதான வீதிகள் வெள்ள நீரில் மூழ்கின.

நாட்டில் கடந்த சில தினங்களாக நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக சுமார் பல மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக இரத்தினபுரி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் அதிகளவான மரணங்களும் பதிவாகியுள்ளன. முதலாம் மற்றும் இரண்டாம் திகதிகளில் 9 மரணங்கள் பதிவாகியிருந்த நிலையில் இன்று திங்கட்கிழமை காலை 6 மணி வரை அந்த எண்ணிக்கை 16ஆக உயர்வடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button