முச்சந்தி

மோடியின் தொடர் வெற்றி உறுதி ! மூன்றாவது தடவை மோடி ஆட்சி !! …. ஐங்கரன் விக்கினேஸ்வரா.

( ஜூன் 4, இந்திய தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ளன. கருத்துக் கணிப்புகளின் படி பிரதமர் மோடியின் தொடர் வெற்றி உறுதி என தென்படுகிறது. மூன்றாவது தடவை மோடி ஆட்சியினை கைப்பற்றுவார் என கருத்துக் கணிப்புகளின் முடிவுகள் தெரிவிக்கின்றன)
தமிழகத்தின் தெற்கே கன்னியாகுமரி கடலில் அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபத்தில், பிரதமர் மோடி தன் மூன்று நாள் தியானத்தை மே 30இல் தொடக்கினார்.
காவி உடையணிந்து சூரிய நமஸ்காரம்:
விவேகானந்தர் மண்டபத்தில் பிரதமர் மோடி 2வது நாளாக தியானத்தில் ஈடுபட்டார். முன்னதாக அதிகாலையில் காவி உடையணிந்து சூரிய உதயத்தை கண்டு ரசித்ததுடன், சூரிய நமஸ்காரமும் செய்தார்.
தெற்கே பாஜகவின் வாக்கு வங்கி வளர்ந்திருப்பினும், தமிழகத்தில் வெற்றிக்கான வாய்ப்புக்கள் அரிது என்றே கணிப்புகள் தெரிவிக்கின்றன. ஆயினும் பரந்த இந்தியாவில்
மோடி மீண்டும் பிரதமராக 64% ஆதரவெனஇணைய கருத்துக் கணிப்பில் தகவல் வெளியாகி உள்ளது.
ஏறத்தாழ 97 கோடி இந்திய மக்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ள இந்த தேர்தல் வரலாற்றில் இதுவரை இல்லாத மிகப் பெரிய தேர்தலாகும். கடந்த மாதம் ஏப்ரல் 19 முதல் 2024 ஜூன் 1 வரை இந்தியாவில் ஏழு கட்டங்களாக நடைபெற்ற இத்தேர்தலின் முடிவுகள் 2024 ஜூன் 4 அன்று அறிவிக்கப்படும்.
2024 இந்தியப் பொதுத் தேர்தல்:
இந்தியாவின் பதினெட்டாவது மக்களவை உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக 2024 பொதுத் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் ஒவ்வொரு கட்சியின் மொத்த வாக்குப் பங்கின் விகிதாச்சாரத்தில் மொத்த இடங்கள் தீர்மானிக்கப்படுவதில்லை, மாறாக ஒவ்வொரு தொகுதியிலும் அந்த கட்சியின் வேட்பாளர் பெரும் வாக்குகளைக் கொண்டு வெற்றி தீர்மானிக்கப்படுகிறது.
ஏறத்தாழ 10 இலட்சம் வாக்குச் சாவடிகளில் 5.5 இலட்சம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன. அதேவேளை
ஏறத்தாழ ஒன்றரை கோடி தேர்தல் பணியாளர்கள் மற்றும் பாதுகாப்புப் படை வீரர்கள் தேர்தல் நடத்தையை நிர்வகிக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
ஆந்திரப் பிரதேசம், அருணாச்சலப் பிரதேசம், ஒடிசா மற்றும் சிக்கிம் ஆகிய மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல்கள் இந்தப் பொதுத் தேர்தலுடன் ஒரே நேரத்தில் நடத்தப்பட்டது.
கருத்துக் கணிப்பில் மோடி வெற்றி:
இன்னும் சில நாட்களில் தேர்தல் முடிவுகள் வரும் வேளையில்
நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக 64% வீதமும், ராகுல் காந்தி பிரதமராக 21.8% வீதமும் ஆதரவு தெரிவித்துள்ளதாக, டெய்லிஹன்ட் நடத்திய கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது. தமிழகத்தில் ராகுல் காந்தி பிரதமராக 44.1% வீத ஆதரவு தெரிவித்துள்ளனர். மோடிக்கு 43.2% வீத ஆதரவு தெரிவித்துள்ளதாக கருத்துக் கணிப்பு முடிவுகள் கூறுகின்றன.
இந்திய மக்களவைத் தேர்தல் 2024 தொடர்பாக டெய்லிஹன்ட் நிறுவனம், கருத்துக் கணிப்புகளை நடத்தியது. இதில், பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டிருந்தன. இந்த கருத்துக் கணிப்புகள் ஆங்கிலம், இந்தி, தமிழ் உள்பட 11 மொழிகளில் நடத்தப்பட்டுள்ளன. இதில், 18 வயதுக்கு மேற்பட்ட பல்வேறு வயது வித்தியாசங்கள் கொண்ட வாக்காளர்கள் 77 லட்சம் பேர் பங்கேற்று பதில் அளித்துள்ளனர்.
மோடி தொடர் வெற்றி:
முந்தைய பொதுத் தேர்தல் 2019
தேர்தலுக்குப் பிறகு, பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி, தொடர்ந்து இரண்டாவது முறையாக நரேந்திர மோதி தலைமையில் நடுவண் அரசை அமைத்தது.
ஆயினும் தற்போதய கருத்துக்கணிப்புகளின் படி
நரேந்திர மோடி தலைமையிலான தற்போதைய மத்திய அரசின் செயல்பாடு திருப்தி அளிப்பதாக 61% வீதம் தெரிவித்துள்ளனர். பாஜக தலைமையிலான அரசுதான் மீண்டும் மத்தியில் அமையும் என்று 63% வீதம் தெரிவித்துள்ளனர். நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக 64% வீதம் ஆதரவு தெரிவித்துள்ளனர். ராகுல் காந்தி பிரதமராக 21.8% வீதம் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இதேவேளை மோடி மீண்டும் பிரதமராக டெல்லி வாக்காளர்களில் 57.7% பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். இவர்களில் 24.2% பேர் ராகுல் காந்திக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். உத்தரப் பிரதேசத்தில் மோடிக்கு 78.2% பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். ராகுல் காந்திக்கு 10% பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். மேற்கு வங்கத்தில் பிரதமர் மோடிக்கு 62.6% ஆதரவும், ராகுல் காந்திக்கு 19.6% ஆதரவும் உள்ளது.
தமிழகத்தில் ராகுல் காந்திக்கு ஆதரவு:
தமிழகத்தில் ராகுல் காந்தி பிரதமராக 44.1% பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். மோடிக்கு 43.2% பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். கேரளாவில் மோடிக்கு 40.8% ஆதரவும், ராகுல் காந்திக்கு 40.5% ஆதரவும் உள்ளது. தெலுங்கானாவில் மோடிக்கு 60.1% ஆதரவும், ராகுல் காந்திக்கு 26.5% ஆதரவும் உள்ளது. ஆந்திராவில் மோடிக்கு 71.8% ஆதரவும், ராகுல் காந்திக்கு 17.9% ஆதரவும் உள்ளது.
மோடி அரசின் நிர்வாக செயல்பாடு குறித்த கேள்விக்கு, 61% பேர் திருப்தி தெரிவித்துள்ளனர். 21% பேர் அதிருப்தி தெரிவித்துள்ளனர். பொருளாதார செயல்பாடு குறித்த கேள்விக்கு 53.3% பேர் திருப்தி தெரிவித்துள்ளனர். 20.9% பேர் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
பிரதமர் மோடி அரசின் ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகள் மீது 52.6% பேர் திருப்தியும், 28.1% பேர் அதிருப்தியும் தெரிவித்துள்ளனர்
நாட்டின் வெளியுறவுக் கொள்கை விஷயத்தில் மோடி அரசின் செயல்பாடு திருப்தி அளிப்பதாக 64% பேரும், அதிருப்தி அளிப்பதாக 14.5% பேரும் தெரிவித்துள்ளனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.