கட்டுரைகள்

ஈரானின் புதிய ஜனாதிபதி முகமது மொக்பர்: அணு ஏவுகணைத் திட்டத்தால் மேற்குலகை திரும்பிப்பார்க்க வைத்தவர்! … ஐங்கரன் விக்கினேஸ்வரா.

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் கொல்லப்பட்டதன் பின்னர், அயதுல்லா அலி கமேனியால், முகமது மொக்பர் (Mohammad Mokhber) இடைக்கால ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டு உள்ளார்.
ஈரானில் அரசியலமைப்புச் சட்டத்தின்படி, 50 நாட்களுக்குள் புதிய ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கான நடவடிக்கைகளை அமைக்க வேண்டும். அதுவரை மொக்பர் இடைக்கால அதிபராக இருப்பார். எந்தவித இடையூறும் இல்லாமல் ஒப்படைக்கப்பட்ட கடமைகளை செய்வதில் நாங்கள் ரைசியின் வழியைப் பின்பற்றுவோம், என்று அவர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
அணு ஏவுகணைத் திட்டத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்:
ஈரானின் அணு மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணைத் திட்டங்கள் தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டதற்காக 2010 இல் ஐரோப்பிய ஒன்றியத்தால் பயணத் தடை விதிக்கப்பட்ட பட்டியலில் இவர் இருந்தார். ஆயினும் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, அவரின் தடை பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது.
ஈரானில் ஒரே நேரத்தில் பல நியமிக்கப்பட்ட துணை ஜனாதிபதிகள் உள்ளனர். ஒவ்வொருவரும் நிர்வாக விவகாரங்களின் வெவ்வேறு துறைகளில் பணியாற்றிக் கொள்கிறார்கள். ஆனால் பெரும்பாலும் அமைச்சரவையைப் போலவே செயல்படுகிறார்கள்.
ஈரானின் முதல் துணைத் தலைவர் பதவி 1989 இல் நீக்கப்பட்டது. அதன் பின்னர் பிரதமரின் சில அதிகாரங்களை ஏற்றுக்கொண்ட ஒரு நியமிக்கப்பட்ட பதவியாக விளங்குகிறது.
ஆயினும் துணைத் தலைவர்களில் மொக்பரின் பதவி முதன்மையானது. மறைந்த ஜனாதிபதி மற்றும் இஸ்லாமிய புரட்சிகர காவலர் படை (IRGC) போன்ற உச்ச தலைவரின் அலுவலகத்துடன் அவருக்கு வலுவான தொடர்பு இருந்ததால் அவர் முக்கியமானவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அத்துடன் அவர் பாரிய அளவிலான நிர்வாக விவகாரங்களை நிர்வகிப்பதில் நீண்டகால அனுபவத்துடன் செயல்பட்ட ஆளுமை மிக்கவராகவும் காணப்பட்டார்.
ஈரான் அணுசக்தி திட்டம் :
தற்போது அமெரிக்காவை அச்சுறுத்தும்
ஈரானின் அணுசக்தி திட்டம் (Nuclear program of Iran) என்பது பல ஆராய்ச்சி தளங்கள், இரண்டு யுரேனியம் சுரங்கங்கள், ஒரு ஆராய்ச்சி அணு உலை மற்றும் மூன்று அறியப்பட்ட யுரேனிய செறிவூட்டல் நிலையங்கள் உள்ளிட்ட யுரேனியம் செயலாக்க வசதிகள் ஆகியவற்றை கொண்டது ஆகும்.
சர்வதேச அணுசக்தி அமைப்பின் (IAEA) சரிபார்ப்புக்கு உட்பட்டு அதன் அணுசக்தித் திட்டத்தை உருவாக்கியது. 1970 ஆம் ஆண்டில் ஈரான் அணு ஆயுத பரவல் தடை உடன்படிக்கையை ஒப்புக்கொண்டது.
அமெரிக்காவின் உதவியுடன் 1950 களில் சமாதான திட்டத்திற்கான அணுக்களின் பகுதியாக ஈரானின் அணுசக்தி திட்டம் பல ஆராய்ச்சி தொடங்கப்பட்டது. இதில் இரண்டு யுரேனியம் சுரங்கங்கள், ஒரு ஆராய்ச்சி அணுசக்தி மற்றும் யுரேனியம் செயலாக்க வசதிகள் ஆகியவை அடங்கும், இதில் மூன்று அறியப்பட்ட யுரேனிய செறிவூட்டல் நிலையங்கள் உள்ளன.
யார் இந்த முகமது மொக்பர்?
செப்டம்பர் 1, 1955ல் பிறந்த முகமது மொக்பர் நாட்டின் உச்ச தலைவர் அலி கமேனியுடன் நெருங்கிய தொடர்பில் எப்போதும் இருப்பதுடன், அரசியல் அனுபவமிக்கவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மறைந்த இப்ராஹிம் ரைசி ஜனாதிபதியாக பதவியேற்ற பிறகு முகமது மொக்பர் 2021ம் ஆண்டு முதல் துணை ஜனாதிபதியாக பொறுப்பேற்றார். அத்துடன்
முகமது மொக்பர் ரஷ்யாவுடன் பல முக்கிய பேச்சுவார்த்தைகளுக்கு தலைமை தாங்கியுள்ளார்.
அத்துடன் 1979 இஸ்லாமிய புரட்சிக்குப் பிறகு கைவிடப்பட்ட சொத்துக்களை நிர்வகிக்கும், முதன்மை தலைவருடன் இணைந்த முதலீட்டு நிதியமான Setad நிறுவனத்திற்குக முகமது மொக்பர் தலைமை தாங்கினார்.
அதேவேளை முகமது மொக்பர், 2013இல் அணுசக்தி மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணை சோதனை ஆகியவற்றில் ஈடுபட்டதாக கூறி ஐரோப்பிய ஒன்றியம் (EU) தடைகளை எதிர்கொண்டார். ஆனால் பின்னர் 2012ம் ஆண்டு இந்த பட்டியலில் இருந்து முகமது மொக்பர் நீக்கப்பட்டார்.
மிக செல்வாக்குள்ள மின் பொறியியலாளர் :
தென்மேற்கு மாகாணமான குசேயிஷ்தான் (Khuzestan) இல் உள்ள டீயிஷவுள் (Dezful) இல் பிறந்த 68 வயதான இவர் மின் பொறியியலில் கல்வி கற்று, சர்வதேச சட்டத்தில் PhD பட்டமும் பெற்றவர்.
அவர் தனது வாழ்க்கையின் தொடக்கத்தில் வங்கி மற்றும் தகவல்தொடர்புகளில் தீவிரமாக இருந்தார். குசேயிஷ்தான்
தொலைத்தொடர்பு ஆணையத்தின் தலைவராக செயல்பட்டார்.
பின்னர் 1990 களில் மாகாணத்தின் துணை ஆளுநராக பதவி உயர்வு பெற்றார்.
ஆகஸ்ட் 2021 இல் ரைசியால் முதல் துணைத் தலைவராக மொக்பர் நியமிக்கப்பட்டார். 1989 இல் அரசியலமைப்பின் திருத்தத்திற்குப் பிறகு அந்தப் பதவியுல்்பணியாற்றும் ஏழாவது நபர் – மற்றும் மிகவும் செல்வாக்கு மிக்கவர்.
முதல் துணைத் தலைவராக, மொக்பர் பல்வேறு அரசாங்க வளர்ச்சித் திட்டங்களைத் துவக்கி வைப்பதற்காக ஈரான் நாடு முழுவதும் பயணம் செய்தார். மேலும் ரைசியு பல வெளிநாட்டுப் பயணங்களில் பிரதிநிதிகளை வழிநடத்தினார். ஆயுத பரிமாற்றம் குறித்து ஆலோசிப்பதற்காக மூத்த ராணுவ மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளுடன் அவர் ரஷ்யாவுக்கு சென்றதாக கூறப்படுகிறது.
செட்டாட் தொண்டர் அமைப்பு:
துணை ஜனாதிபதி பதவிக்கு நியமிக்கப்படுவதற்கு முன்பு, மொக்பர் ஈரானின் செட்டாட் அல்லது இமாம் கொமேனியின் உத்தரவை நிறைவேற்றுவதற்கான தொண்டு அமைப்பின் தலைவராக 14 ஆண்டுகள் பணியாற்றினார்.
செட்டாட் என்பது ஈரானின் உச்ச தலைவரான அயதுல்லா ருஹோல்லா கொமேனியின் கீழ், தொண்டு விவகாரங்களில் கவனம் செலுத்துவதற்காக நிறுவப்பட்ட மிகவும் சக்திவாய்ந்த பொருளாதாரக் குழுமமாகும்.
இது இப்போது பல்லாயிரம் பில்லியன் டாலர்கள் மதிப்புடையதாக நம்பப்படுகிறது. ஈரானிய உச்ச தலைவரின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ளது.
கொரோனா தடுப்பூசியான COVIranஐ உருவாக்கம் :
கோவிட்-19 இன் தொடக்கத்தின் போது, ​​மத்திய கிழக்கில் தொற்றுநோயால் ஈரான் மிக மோசமாக பாதிக்கப்பட்டிருந்த நேரத்தில், மொக்பர் செட்டாட்டின் தலைவராக இருந்தார். உத்தியோகபூர்வ புள்ளிவிவரங்களின்படி, கிட்டத்தட்ட 150,000 பேர் ஈரானில் கோவிட் நோயால் இறந்தனர்.
 உண்மையான எண்ணிக்கை மிகவும் அதிகமாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.
அவரது கண்காணிப்பின் கீழ், செட்டாட் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட முக்கிய கொரோனா வைரஸ் தடுப்பூசியான COVIran Barekat ஐ உருவாக்கியதில் முன்னின்றவர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.