கவிதைகள்
“தேர்தல் வருகிறது. தேர்தல் வருகிறது” …. கவிதை …. முல்லைஅமுதன்.
தேர்தல் வருகிறது.
தேர்தல் வருகிறது.
கட்சிகள் உன் வாசல் வருவர்.
அவர்களுள் யாரோ உன்னவன் ஒருவன்
மறைந்திருக்கலாம்.தாங்களே எல்லாம் எனு கூறலாம்.
நம்பிவிடாதே.
எல்லாம் நான்கு
அல்லது ஐந்து வருடங்கள் மட்டும் தான்.
பிறகு மறந்துவிடுவர்..
நான்,நீ
அல்லது
நிங்கள் அல்லது நாங்கள்
எல்லாம் மறந்துவிடலாம்.
பிறகு இப்படியே சுழற்சிகள் நிகழலாம்.
நம் இருப்பு பத்திரம்..
முல்லைஅமுதன்.