படைப்பாளிகள்

“முல்லைஅமுதன்” …. படைப்பாளி …. லண்டன்.

 

ஈழத்து வடபுலம் யாழ்ப்பாணத்தில்(கல்வியங்காடு) 27/08.1954இல் பிறந்தவரான முல்லைஅமுதனின் இயற்பெயர் இரத்தினசபாபதி.மகேந்திரன் ஆகும்.ஆரம்பக் கல்வியை திருகோணமலை மரிய சேவியர் பாடசாலை,பெருந்தெரு தமிழ்க் கலவன் பாடசாலை,யாழ்/கோப்பாய் அரசினர் தமிழ் அரசினர் தமிழ்மகாவித்தியாலயம்,கல்வியங்காடு/செங்குந்தா இந்துக்கல்லூரி,யாழ்/கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலயம்(ஸ்டான்லி கல்லூரி),மானிப்பாய் இந்துக்கல்லூரி ஆகியவற்றில் தன் கல்வியை மேற்கொண்டிந்தார்.கால,களச் சூழல் ஏற்படுத்திய அச்சுறுத்தலினால் மத்தியகிழக்கு நாடொன்றிற்கு தொழில் நிமித்தம் பயணமாகினார்.
பாடசாலை,கல்லூரி மன்றங்களிலும்,கிராம சனசமூகநிலயங்களின் நாடக,கவியரங்க நிகழ்வுகளில் பங்குபற்றியிருந்த போதே சிரித்திரன் ஆசிரியரின் அறிமுகத்தை கவிஞரும்,ஊடகவியலாளருமான ராதையன் ஏற்படுத்தித்தந்திருந்தார்.இருவரின் வழிகாட்டுதலில் ‘நித்யகல்யானி’ எனும் கவிதைநூலை வெளியிட்டதும்தொடர்ச்சியாக எழுத்தாளரும்,மேகம் சஞ்சிகையின் இதழாசிரியருமான கணபதி கணேசனின் நட்புக்கிடைத்தது.அவர் வெளியிட்ட மேகம் இதழுடன் இணைந்தெழுதவும்,பல இலக்கிய நண்பர்களின்(காவலூர்.எஸ்.ஜெகநாதன்,தாவையூர்.காண்டீபன்,ஊடகவியலாளர்,ஐயா சச்சிதானந்தன்,செம்பியன் செல்வன்,முத்து இராசரத்திரனம்,நெல்லை.க.பேரன்,செங்கையாழியான்,செ.யோகநாதன்,பா.சத்தியசீலன்,அப்பச்சி மகாலிங்கம்,சொக்கன்,மதுபாலன்,’அண்ணை றைட்’கே.எஸ்.பாலச்சந்திரன்,மல்லிகை ஆசிரியர்.டொமினிக் ஜீவா போன்றபலர்)தோழமை கிடைக்கப்பெற்றமை வாழ்வில் மறக்கமுடியாதது எனக் குறிப்பிடுகின்றார்.
கூடவே,
கல்லூரி,சனசமூகநிலைய நாடகவிழாக்களில் பல இயக்குனர்களின் இயக்கத்தில் பிரதான பாத்திரங்களில் நடிக்கும் பாக்கியமும் கிடைக்கபெற்றிருந்தார்.
குறிப்பிடத்தக்க நாடகங்களாக வில்லியம் தெல்(தி/பெருந்தெரு கனிஷ்ட தமிழ்க்கலவன் பாடசாலை),மனக்கோயில்(கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலயம்), மூன்று துளிகள்(மானிப்பாய் இந்துக்கல்லூரி),சந்தியில் நில்லாதே,சந்தி சிரிக்கிறது,நல்லமுடிவு,கனவுக்கிளி,மலராத வாழ்வு,தாகம்,நெஞ்சிருந்தால் நினைவிருக்கும்(சன்சமூக நிலைய நாடகங்கள்)குறிப்பிடத்தக்கன.
இளவயதிலிலிருந்தே நாடகம்,நடிப்பு எனவும் விரிந்த இவரின் திரைப்பட ஆர்வம் நண்பர்களுடன் இணைந்து தயாரிப்பு திரைப்பட தயாரிப்பு முயற்சியிலும் ஆர்வமாயிருந்தார்.ஈழத்தில் தயாரிக்கப்பட்ட நெஞ்சுக்குத் தெரியும்’-திரைப்பட ஆரம்ப முயறிகளிலும் ஈடுபாடுமிருந்தார்.
மத்திய கிழக்கில் பணியிலிருந்த போது ‘அம்பு’ எனும் கையெழுத்துப்பிரதியினையும் வெளியிட்டிருந்தார்.
இவரின் படைப்புகளை சிரித்திரன்,மேகம்(யாழ்ப்பாணம்),தினக்குரல்,வீரகேசரி,கிழக்கு,இலக்கு,மகாகவி,இனிய நந்தவனம்,பொதியவெற்பன் மலர்,தாரகை(இலங்கை),நான்காவது பரிமாணம்(கனடா),கண்ணில் தெரியுது வானம்(தொகுப்பு),இன்னுமொரு காலடி(தொகுப்பு),யுகம் மாறும்(தொகுப்பு), கவிதை(யாழ்ப்பாணம்), ஈழநாடு(பிரான்ஸ்), ஈழமுரசு(பிரான்ஸ்). புதினம்(லண்டன்),ஈழகேசரி(லண்டன்), நவமணி(இலங்கை),தாய்வீடு(கனடா),மண், ஜீவநதி, ஞானம், மேகம்(லண்டன்), அருவி,மகாகவி,கோடுகள்,இணையங்களாக திண்ணை,பதிவுகள், அக்கினிக்குஞ்சு, வணக்கம் லண்டன், தமிழ்விசை, வார்ப்பு, வல்லமை,சிறுகதை.கொம் ஆகியன வெளியிட்டிருந்தன.
ஈழத்து படைப்புக்கள் மீதான அதீத ஆர்வமே காற்றுவெளி கலை இலக்கிய இதழை ஆரம்பித்ததும் அவ்விதழ் இன்றுவரை உலகின் பல பாங்களிலிருந்தும் படைப்பாளர்கள் பங்குபற்றும் இதழாக விரிவடைந்துமுள்ளமை குறிப்பிடத்தத்தக்கது.கவிதைகாக ‘நெய்தல்’ எனும் இதழின் 5 இதழ்களை அச்சிதழாகவும் கொண்டுவந்துமுள்ளார்.
ஈழத்து நூல்களின் கண்காட்சியினை தொடர்ச்சியாக நடத்தியும் வந்துள்ளார்.ஈழத்து தமிழ் நூல்களடங்கிய நூலகம் ஒன்றை இங்கிலாந்தில் அமைக்கபாட்டுபட்டும் முடியாது போயிற்றும்.இக்கனவு ஒரு நாள் நிறைவேறும் என இன்னமும் நம்புகிறார்.
இவரின் நூல்களுடன் பிறரின் நூல்களுடன்,ஈழத்து மறைந்த படைப்பாளர்களின் நினைவுகளைச் சுமந்து கட்டுரைகளாக இரண்டு தொகுப்புக்களையும்(இலக்கியப்பூக்கள்)வெளியிட்டுள்ளார்.பிறரின் நூல்களாக மொழிநூறு(தாமரைத்தீனின் கவிதைகள்) சுதந்திரன் கவிதைகள் என இரு நூல்களையும்,ம.கார்த்திகாவின் ‘A pilgrimage to the Holy Land'(by kaarthika.mahendran) (ஓவியா பதிப்பகம்),Subramaniya Bharathi and other Legends of Carnatic music’ (by kaarthika.mahendran) நூல்களையும் வெளிட்டுள்ளார்.இவரின் நூல்களாக நித்திய கல்யாணி (1981),புதிய அடிமைகள் (1983),விடியத்துடிக்கும் ராத்திரிகள் (1984),யுத்தகாண்டம் (1989),விழுதுகள் மண்ணைத் தொடும் (1993),ஆத்மா (1994),விமோசனம் நாளை (1995),ஸ்நேகம் (1998),பட்டங்கள் சுமக்கிறான் (1999),முடிந்த கதை தொடர்வதில்லை (1999),யாகம் (2000),இசைக்குள் அடங்காத பாடல்கள் (2002),எழுத்தாளர் விபரத் திரட்டு(2015),இன்று என் வீடு அழகாய் இல்லை’ (2020)ஆகியனவாகும்.கவிஞரும்,மொழிபெயர்ப்பாளருமான அநாமிகா ரிஷி அவர்கள் முல்லைஅமுதனின் கவிதைகளை தொகுத்து நூலாக வானம் திடீரெனக் கதவைத் தட்டியது.2020 ( Kindle Edition) வெளியிட்டிருந்தார்.
ஆவணக்காப்பாளர்ஐரோப்பிய தமிழ் அறிஞர்கள்,எழுத்தாளர்கள்,கலைஞர்கள் வளர்ச்சி சம்மேளனம்-பிரான்ஸ்(2006),பைந்தமிழ்க்காவலர்(இங்கிலாந்து டூட்டிங் முத்துமாரியம்மன் கோவில் அறக்கட்டளை (14/04/2012),
தமிழினி (இங்கிலாந்து)விருது 2013,வாழ்நாள் சாதனையாளர்(லண்டன் தமிழ் இலக்கிய நிறுவகம்/வைரமுத்து தம்பிராசா ஞாபகார்த்த விருது)அகியன இவரின் கலை இலக்கிய முயற்சிகளுக்காக வழங்கப்பட்ட விருதுகளும்,கௌரவங்களுமாகும்.
இவ்வாண்டு(2024) காற்றுவெளி கதைகள்,இங்கிலாந்து படைப்பாளர்களின் கதைத்தொகுதி என நூல்களை வெளியிடவுமுள்ளார்.
இவரின் இலக்கியப்பணி சிறக்க அக்கினிக்குஞ்சு இணையமும் வாழ்த்துகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.