புற்றுநோயுடன் போராடும் மன்னர் சார்லஸ்!

பிரித்தானிய அரச குடும்பத்தில் தற்போது இளவரசி பீட்ரைஸ் அதிக கவனிப்பைப் பெற்றுவருவதாக தகவல் கசிந்துள்ளது. எதிர்வரும் மாதங்களில் சார்லஸ் மன்னருக்கும் மூத்த குடும்ப உறுப்பினர்களுக்கும் இளவரசி பீட்ரைஸ் உதவிகள் செய்ய முன்வருவார் என்றும், ஆனால் இது உத்தியோகப்பூர்வ பணியாக இருக்காது என்றும், அதனால் அவர்ருக்கு சம்பளமும் வழங்கப்பட்ட வாய்ப்பில்லை என்றும் கூறப்படுகிறது.

74 வயதான சார்லஸ் மன்னர் புற்றுநோய் சிகிச்சையை முன்னெடுத்துவரும் நிலையிலும் தமது அன்றாடப்பணிகளை கொஞ்சம் கொஞ்சமாக முன்னெடுத்து வருகிறார்.

இதனிடையே, கேட் மிடில்டன் சிகிச்சையில் இருப்பதால், பொது நிகழ்ச்சிகள் அனைத்தில் இருந்தும் விடுபட்டுள்ளார். அத்துடன் இளவரசர் வில்லியம் தமது மனைவியை கவனிக்கும் பொருட்டு, பொது நிகழ்ச்சிகளில் அதிகமாக தென்பட வாய்ப்பில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையிலேயே இளவரசி பீட்ரைஸ் சமீப நாட்களாக பல்வேறு பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். வியாழக்கிழமை பாடசாலை நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட பீட்ரைஸ், செவ்வாய்க்கிழமை பக்கிங்ஹாம் அரண்மனையில் இளவரசர் வில்லியம் ஏற்பாடு செய்திருந்த விருந்து ஒன்றில் கலந்துகொண்டுள்ளார்.

அந்த விருந்தில், குடும்ப உறுப்பினர்கள் பலர் முகம் காட்டியுள்ளனர். இதனிடையே, இளவரசி பீட்ரைஸ் உட்பட இளம் வயது உறவினர்கள் அனைவரும் விருந்தில் கலந்துகொள்ள வேண்டும் என்று இளவரசர் வில்லியம் விரும்பியதாகவும்,

குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஒன்று கூடுவது மகிழ்ச்சியான அனுபவம் என அவர் குறிப்பிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும், Royal Ascot நிகழ்ச்சியில் சார்லச் மன்னருடன் இளவரசி பீட்ரைசும் கலந்துகொள்ள வாய்ப்பிருப்பதாக உறுதி செய்யப்படாத தகவல் வெளியாகியுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *