இலங்கையில் இருந்து ஜெனீவாவுக்கு அனுப்பப்பட்ட கண்டன கடிதம்
ஜெனீவா மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் வோல்கர் டர்க்கிற்கு(Volker Turk) ஜெனீவாவுக்கான இலங்கையின் தூதர் ஹிமாலி அருணதிலக கண்டனக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
இலங்கையின் மனித உரிமைகள் பதிவு குறித்து அவரது அலுவலகம் கடந்த 17ஆம் திகதி வெளியிட்ட அறிக்கை, ஒரு தேவையற்ற மற்றும் ஒருதலைப்பட்ச முன்முயற்சி என்று ஹிமாலி தமது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த அறிக்கைக்கு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையகத்தின் எந்த ஒப்புதலும் இல்லை என்று ஹிமாலி சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தநிலையில் தொடர்ச்சியான நல்லிணக்க முயற்சிகளில் இலங்கை அரசாங்கம் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் நேரத்தில், உயர்ஸ்தானிகரின் அறிக்கை, பக்கச்சார்பானது, அரசியல்மயமாக்கப்பட்டது மற்றும் சுயமாக உருவாக்கப்பட்டது என்று ஜெனீவாவுக்கான இலங்கையின் தூதர் ஹிமாலி அருணாதிலக்கவின் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
2009 ஆம் ஆண்டில் இலங்கையில் ஆயுதக் மோதல் முடிவடைந்த 15ஆம் ஆண்டு நிறைவின்போது இந்த அறிக்கை வெளியிடப்பட்டமை குறித்து ஹிமாலி கேள்வி எழுப்பியுள்ளார்.
இத்துடன்;, கடுமையான பொருளாதார நெருக்கடியின் பின்னணியில் இலங்கை அரசாங்கம் செய்த பணிகளையும் ஹிமாலி அருணதிலக கோடிட்டுக் காட்டியுள்ளார்.