இலங்கை

வடக்கில் ஆளுநரின் அடாவடி: ரணிலுக்கு பறந்த கடிதம்

வடக்கில் அரசாங்க அதிபர்கள் மற்றும் அமைச்சுக்களுக்கான செயலாளர்கள் நியமனம் அரசியல் காரணமாக பின்னடிப்புச் செய்யக் கூடாதென அதிபர் ரணில் விக்ரமசிங்கவுக்கு (Ranil Wickramasinghe) நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் (C. V. Vigneswaran) கடிதம் அனுப்பியுள்ளார்.

இது தொடர்பாக குறித்த கடிதத்தில் அவர் மேலும் தெரிவிக்கையில், “யாழ்ப்பாணம் (Jaffna) மற்றும் கிளிநொச்சி (Kilinochchi) ஆகிய இரண்டு மாவட்டங்களிலுமுள்ள நிரந்தர அரசாங்க அதிபர்கள் ஓய்வு பெற்று சுமார் மூன்று மாதங்களாகியும் நிரந்தர அரச அதிகாரிகள் நியமிக்கப்படவில்லை.

மேலதிக மாவட்ட அரசாங்க அதிபர்கள் அந்த கடமைகளை உள்ளடக்கி உள்ளதுடன் தகுதியான தமிழ் சிறப்பு தர  இலங்கை (Sri Lanka)  நிர்வாக சேவை அதிகாரிகள் நியமனத்திற்கு தகுதி இருந்தும் முக்கியமான பொதுப் பதவிகளுக்கு இந்த மூத்த அதிகாரிகளின் நியமனங்களை அரசியல் தடுக்கக் கூடாது.

அரசாங்க அதிபர்

கல்வி அமைச்சு, மகளிர் விவகார அமைச்சு மற்றும் ஆளுநர் அலுவலகத்தில் கடமையாற்றுகின்ற அதேவேளை விவசாய அமைச்சின் செயலாளர் சுகாதார அமைச்சின் செயலாளராக செயற்படுகின்றார்.

குகநாதன், எலிலரசி மற்றும்அருள்ராஜ் போன்ற மூத்த சிறப்பு அதிகாரிகளும், அரசியல் காரணங்களுக்காக அரசாங்க அதிபர்கள் மற்றும் அமைச்சுக்களின் செயலாளர்கள் பதவியில் இருந்து புறக்கணிக்கப்பட்டு பறிக்கப்படுகிறார்கள்.

முக்கியமான நிர்வாகப் பதவிகளுக்கு மூத்த  இலங்கை நிர்வாக சேவை அதிகாரிகளை நியமிப்பதை ஆளுநர் வெறுக்கிறார்.

இளைய கூட்டாளி

அதற்கு பதிலாக அவர் அந்த பதவிகளை நிர்வகிக்கும் இளைய கூட்டாளிகளை விரும்புவதாக தெரிகிறது.

இதனால் இந்த சிரேஷ்ட இலங்கை நிர்வாக சேவை அதிகாரிகளின் பெறுமதியான சேவைகளை பொதுமக்கள் இழக்கின்றனர்.

நிரந்தர உத்தியோகத்தர்களை அரசாங்க அதிபர்கள் மற்றும் செயலாளர்களாக விரைவில் நியமிக்க மாண்புமிகு உங்களது உடனடி நடவடிக்கை எடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்” என அவர் தெரிவித்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.