விடுதலைப்புலிகளை ஒழிக்க ராஜபக்சாக்களுடன் இணைந்த சஜித் : காலம் கடந்து வெளிவரும் தகவல்
யுத்தம் இடம்பெற்ற காலத்தில் ராஜபக்ஸாக்கள் எடுத்த முடிவுகளோடு சஜித் பிரேமதாச(sajith premadasa) ஒத்துப் போனதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாலக்க கொடஹேவா(nalaka godahewa) தெரிவித்துள்ளார்.
நேற்று (20) கொழும்பில் தனியார் ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
ரணில், ரவி கருணாநாயக்கவின் நையாண்டிக்கு மத்தியிலும்
ரணில் விக்ரமசிங்க(ranil wickremesinghe) தொப்பிகல பற்றியும், ரவி கருணாநாயக்க(Ravi Karunanayake) கிளிநொச்சி (kilinochchi)பற்றியும் நையாண்டி செய்துகொண்டிருந்தபோது சஜித் பிரேமதாச ராஜபக்ஸர்களுடன் இணைந்து யுத்தத்தை முடிக்கவேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருந்ததாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
மொட்டுக் கட்சியில் இருந்து விலகி டளஸ் அழகப்பெருமவுடன் வெளியேறிய நிலையில் தற்போது சஜித் பிரேமதாசவுடன் இணைந்துகொண்டுள்ளார் நாலக்க கொடஹேவா.
கோட்டாபயவின் சுபீட்சத்தின் நோக்கு
கோட்டாபய(gotabaya)வின் சுபீட்சத்தின் நோக்கு கொள்கையை தயாரிக்கையில் அதில் முக்கிய பங்கு வகித்தவர் நாலக்க கொடஹேவா என்பது குறிப்பிடத்தக்கது.