இலங்கை
முன்னாள் இராணுவ தளபதிக்கு மீண்டும் அழைப்பு விடுத்துள்ள அரசாங்கம்
இலங்கையின் முன்னாள் பாதுகாப்புப் படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கு (Shavendra Silva) அரசாங்கம் மீண்டும் அழைப்பு விடுத்துள்ளது.
சிவில் கடமைகளில் இருந்து விலகியதன் பின்னர் டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்காக அவர் மீள அழைக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
அதிபர் செயலகத்தில் நேற்று(20) இடம்பெற்ற டெங்கு நோய் கட்டுப்பாடு தொடர்பான மீளாய்வு கூட்டத்திற்கு அவர் அழைக்கப்பட்டிருந்தார்.
கலந்துரையாடல்
குறித்த கூட்டமானது அதிபரின் தேசிய பாதுகாப்பு ஆலோசகரும், தலைமை அதிகாரியுமான சாகல ரத்நாயக்க(Sagala Ratnayaka) தலைமையில் கலந்துரையாடல் இடம்பெற்றிருந்தது.
இம்மாதம் 25ஆம் திகதி முதல் ஜூன் மாதம் 01ஆம் திகதி வரை டெங்கு தடுப்பு வாரத்தை நடைமுறைப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.