கனடாவில் இருந்து நாடு கடத்தலை எதிர்நோக்கியுள்ள இந்திய மாணவர்கள்?
கனடாவின் பிரின்ஸ் எட்வர்ட் தீவு மாகாணத்தில் சமீபத்தில் குடியேற்றவாசிகளின் எண்ணிக்கையை குறைப்பதற்காக குடியேற்ற விதிகளில் சில திருத்தங்களை செய்தது. அவ்விதியின்படி எட்வர்ட் தீவு மாகாணத்தில் வசிக்கும் இந்திய மாணவர்கள் மற்றும் பணியாற்றுபவர்கள் கனடாவில் இருந்து வெளியேற வேண்டும்.
ஆனால், இந்திய மாணவர்கள் திடீரென அமல்படுத்தியுள்ள இம்முடிவிற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த இரு வாரங்களாக போராடி வருகின்றனர். வரும் 23ல் எட்வர்ட் தீவின் சார்லட் டவுனில் போராட்டம் தொடர்பாக கூட்டதிற்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
குடியேற்ற விதிகுறித்து மாணவர்கள் கூறுகையில், இந்த குடியேற்ற விதி அமல்படுத்துவதற்கு முன்பாகவே நாங்கள் ஏற்கனவே முறையான அனுமதியுடன் இங்கே பணியாற்றி வருகிறோம். ஆகையால் எங்களையும் மாகாண நியமனத்திட்டத்தில் சேர்க்கவேண்டும் என மாகாண அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். மேலும் இங்கு பணிபுரிபவர்களின் பணி அனுமதியையும் நீட்டித்து மற்றும் புதுப்பித்து தரவேண்டும் எனவும் கோரிக்கையாக வைத்துள்ளனர்.
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் இதுகுறித்து கூறியதாவது: கனடாவில் எட்வர்ட் தீவு மாகாணத்தில் வசிக்கும் மாணவர்கள் போராட்டம் குறித்து முறையான அறிவிப்புகள் இதுவரை எங்களுக்கு தெரிவிக்கவில்லை என்று கூறியுள்ளது.