உலகம்
காசா மீது போர்: இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகுவுக்கு மந்திரி திடீர் எதிர்ப்பு
பாலஸ்தீனத்தின் காசா மீது இஸ்ரேல் நடத்தி வரும் போர் 7 மாதங்களுக்கு மேலாக நீடித்து கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகுவுக்கு இஸ்ரேலின் அமைச்சரவை மந்திரி பென்னி காண்ட்ஸ் திடீரென்று எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
காசாவின் ஹமாசுக்கு எதிரான போர் திட்டத்திற்கு பிரதமர் நேதன்யாகு வகுத்த இறுதி எச்சரிக்கை இஸ்ரேலுக்கு தீங்கு விளைவிக்கும் என்று கூறியுள்ள பென்னி காண்ட்ஸ், அரசாங்கத்தை விட்டு வெளியேறுவேன் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் போருக்குப் பிந்தைய திட்டத்தை உருவாக்க பிரதமர் நேதன்யாகுவுக்கு ஜூன் 8-ந்தேதி வரை காலக்கெடுவை நிர்ணயித்துள்ளார். இதற்கிடையே காண்ட்சின் இறுதி எச்சரிக்கையை இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் நிராகரித்துள்ளது.