இலங்கை

தடை செய்யப்பட்ட ஈரான் விமான சேவையுடன் இணையும் இலங்கை…! அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலகம் கடும் எதிர்ப்பு

ஈரானுக்கு (Iran) விமான நிறுவனமான  Mahan-Air விமானங்களை இலங்கையில் அனுமதிப்பது தொடர்பில் மேற்குலகநாடுகளிலிருந்து கடுமையான எதிர்ப்பு கிளம்பி உள்ளதாக  இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

1991 ஆம் ஆண்டு நிறுவப்பட்டு, தற்போது 32 விமானங்களுடன் இயங்கும் Mahan-Air ஈரானில் பயங்கரவாதத்திற்கு பொருட்கள் மற்றும் போக்குவரத்து வசதிகளை வழங்கும் நிறுவனமாக 2011 ஆம் ஆண்டு அமெரிக்காவால் பெயரிடப்பட்டுள்ளது.

மேலும், ஜெர்மனி, பிரான்ஸ் (france), சிரியா, இத்தாலி, ஸ்பெயின் மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் இருந்தும் Mahan-Air தடை செய்யப்பட்டுள்ளது.

அமைச்சரவை யோசனை

இந்நிலையில் தான், ஈரானுக்கு சொந்தமான தனியார் விமான நிறுவனமான Mahan-Air விமானங்களை இலங்கையில் (srilanka) வான்வழிச் செயற்பாட்டுக்கு அனுமதிப்பது தொடர்பாக அமைச்சரவையில் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்த யோசனைக்கு அமெரிக்கா (united states of america) தலைமையிலான மேற்குலக நாடுகள் கடும் எதிர்ப்பை வெளியிட்டதாக இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

எப்படியிருப்பினும் தற்போது ஈரானுக்கு நட்பாக 10 நாடுகளில் உள்ள 44 இடங்களுக்கு போக்குவரத்து செய்யும் Mahan-Air நிறுவனம் அண்மையில் இலங்கையில் போக்குவரத்து நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு அனுமதி கோரியது

அதற்கமைய, இது தொடர்பான யோசனை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.