வாகன இறக்குமதி தொடர்பில் வெளியான புதிய அறிவிப்பு
வாகன இறக்குமதியை அடுத்த வருடம் முதல் மீண்டும் ஆரம்பிக்க எதிர்பார்க்கப்படுவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
அநுராதபுரத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இராஜாங்க அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
அடுத்த வருடம் முதல் மீண்டும் வாகன இறக்குமதியை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களுக்கு வாகனங்களை இறக்குமதி செய்ய அரசாங்கம் அனுமதி வழங்காது.
இதுவரை வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான அனுமதி வணிகத் தேவைகளுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளதுடன், பொருளாதார பங்களிப்பிற்காக எதிர்காலத்தில் வாகன இறக்குமதிக்கான பல கட்டுப்பாடு தளர்த்தப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், நாட்டில் தற்போது பொருளாதார வேலைத்திட்டத்தை தவிர வேறு வழியில்லை எனவும் நிதி இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.