கட்டுரைகள்

ரஃபா மீது இஸ்ரேல் படையெடுப்பு: கல்லறைகளாக மாறும் காசாவில் புதிய போர் நிறுத்தம் சாத்தியமா? … ஐங்கரன் விக்கினேஸ்வரா.

ஹமாஷ் உடனான போரின் பின்னர், இஸ்ரேலை பாதுகாக்க அமெரிக்கா இரும்புக் கவச உறுதிப்பாட்டை எடுத்துள்ளதாக ஜோ பைடன் தெரிவித்திருந்தார். ஆனால் தற்போது
காசா மீதான போரை இஸ்ரேல் பிரதமர் கையாளும் விதம் தவறானது என அதிபர் ஜோ பைடன் கண்டனத்துடன் விமர்சனம் செய்துள்ளார்.
ரஃபா மீது இஸ்ரேல் படையெடுப்பு:
ரஃபா மீது இஸ்ரேல் படையெடுப்பது குறித்து அமெரிக்கா தனது தெளிவான நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்திய பின்னரும், இஸ்ரேல் மீண்டும் தனது படை வலிமையை காட்டியுள்ளது,
வெள்ளை மாளிகையால் வெளியிடப்பட்ட அறிக்கையில்
பொருத்தமான மற்றும் நம்பகமான மனிதாபிமான திட்டம் இல்லாமல் ரஃபா நடவடிக்கையை ஆதரிக்க முடியாது என்று ஜோ பைடன் கூறியுள்ளார்.
ஆயினும் இதனை எல்லாம் மீறி இஸ்ரேல் எகிப்து – ரஃபா எல்லைகளை கைப்பற்றி உள்ளது. இஸ்ரேல் படையெடுப்பு நடத்துவதற்கு முன்பு அமெரிக்காவின் எண்ணங்களை கேட்க இஸ்ரேல் ஒப்புக்கொண்டது.
பணயக்கைதிகள் விடுவிக்கும் ஒப்பந்தம் குறித்து ஜோ பைடன்-நெதன்யாகு விவாதித்தனர். அதேவேளை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன்
மனிதாபிமான உதவிகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
இதற்கு முன்னதாக, இஸ்ரேலுக்கு எதிராக ஈரான் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை நடத்திய பின்னர் இஸ்ரேலை பாதுகாக்க அமெரிக்கா முழுமையான உறுதிப்பாட்டை எடுத்துள்ளதாக ஜோ பைடன் தெரிவித்திருந்தார்.
ஹமாஸ் அமைப்பின் அக்டோபர் 7 தாக்குதலுக்குப் பின்னர் காசாவில் உடனடி போர்நிறுத்தத்துடன் சில பணயக்கைதிகளை விடுவிக்க வடிவமைக்கப்பட்ட பேச்சுவார்த்தைகள் இரு தடவைகள் நிகழ்ந்தன.
இஸ்ரேல் பிரதமர் மீது ஜோ பைடன் விமர்சனம் :
காசா மீதான போரை இஸ்ரேல் தற்காலிகமாக நிறுத்த வேண்டும் என தாம் அழைப்பு விடுப்பதாகவும் இஸ்ரேல் அரசுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கோரிக்கை விடுத்துள்ளார்.
காசா பகுதிக்குள் 6 முதல் 8 வாரங்கள் நிவாரண பொருட்கள் செல்ல அனுமதிக்க வேண்டும் என்றும் கூறிய அதிபர் ஜோ பைடன், நிவாரண பொருட்கள் விநியோகத்தை இஸ்ரேல் ராணுவம் தடுக்கிறது என்றும் விமர்சித்துள்ளார்.
போர் நிறுத்தம் ஏற்பட்டால், காசாவிற்குள் புதிய குறுக்கு வழிகளைத் திறப்பதற்கான தயாரிப்புகள் உட்பட, மனிதாபிமான உதவி விநியோகங்களின் அதிகரித்த வேகம் குறித்தும் விவாதிக்கப்படுகிறது.
அதேவேளை காசா மீதான போரை இஸ்ரேல் பிரதமர் கையாளும் விதம் தவறானது என அதிபர் ஜோ பைடன் விமர்சனம் செய்ததை , இஸ்ரேலிய ஊடகங்கள் நையாண்டி செய்துள்ளன.
அத்துடன் தனியார் செய்தி நிறுவனத்திற்கு அமெரிக்க அதிபர் ஜோ அளித்த பேட்டியில், காசாவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கும் அமைப்பின் வாகனம் மீது டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டது மூர்க்கத்தனமானது என கண்டித்துள்ளார்.
ஹமாஸை வலியுறுத்தும் அமெரிக்கா
காசாவில் போா் நிறுத்தம் மேற்கொள்வது தொடா்பாக ஹமாஸிடம் அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. இஸ்ரேல் முன்வைத்துள்ள போர் நிறுத்த செயற்திட்டத்துக்கு உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும் என ஹமாஸ் அமைப்பினரிடம் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சா் ஆன்டனி பிளிங்கன் (Antony Blinken) கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்தச் சூழலில், போா் நிறுத்தத்துக்கும் காசா மக்களுக்கும் இடையே மறித்து நிற்பது ஹமாஸ் அமைப்பினா்தான். எனவே, இந்த விவகாரத்தில் ஹமாஸ் உடனடியாக முடிவெடுத்து இஸ்ரேலின் செயற்திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கவேண்டும்.
காசா போா் நிறுத்தம் தொடா்பாக ஒரு நல்ல முடிவை ஹமாஸ் அமைப்பினா் வெளியிடுவாா்கள்; அது இந்தப் போரின் போக்கில் மாற்றத்தை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கை உள்ளது“ என அவர் தெரிவித்தார்.
இதேவேளை போா் நிறுத்தம் தொடா்பான இஸ்ரேலின் செயற்திட்டத்தை ஹமாஸ் அமைப்பினா் ஏற்பாா்கள் என்று பிரிட்டன், எகிப்து ஆகிய நாடுகளும் நம்பிக்கை தெரிவித்துள்ளன.
காசாவில் 40 நாட்களுக்கு சண்டையை நிறுத்திவைப்பதற்கான செயற்திட்டத்தை இஸ்ரேல் வழங்கியுள்ளதாக பிரிட்டன் வெளியுறவுத் துறை அமைச்சா் டேவிட கேமரூன் கூறினாா்.
ஹமாஸ் அமைப்பினரை முற்றிலும் ஒழித்துக் கொள்ளவும், பிணைக் கைதிகளை மீட்பதாகவும் சூளுரைத்த இஸ்ரேல், காசாவில் வான்வழியாகவும், தரைவழியாகவும் தீவிர தாக்குதல் நடத்தி வருகிறது.
காசாவில் 6 வார போா் நிறுத்தம் :
இந்த நிலையில், சா்வதேச முயற்சியின் பலனாக இஸ்ரேல்-ஹமாஸ் இடையே கடந்த ஆண்டு நவம்பா் மாதம் மேற்கொள்ளப்பட்ட 7 நாள் போா் நிறுத்தத்தின்போது இஸ்ரேல் சிறைகளில் இருந்து 240 பலஸ்தீன கைதிகள் விடுவிக்கப்பட்டனா்.
அவா்களுக்குப் பதிலாக இஸ்ரேலில் இருந்து பிணைக் கைதிகளாகக் கடத்திச் செல்லப்பட்ட 105 பேரை ஹமாஸ் அமைப்பு விடுவித்தது. எனினும், போா் நிறுத்தத்தை மேலும் நீடிப்பதற்கான பேச்சுவாா்த்தை முறிந்ததைத் தொடா்ந்து காசா மீதான தாக்குதலை இஸ்ரேல் மீண்டும் தொடங்கியது.
அதன் பிறகு மீண்டும் போா் நிறுத்தம் மேற்கொள்வதற்காக சா்வதேச நாடுகளின் முன்னிலையில் நடைபெற்ற பலகட்ட பேச்சுவாா்த்தைகள் தோல்வியிலேயே முடிந்தன.
இந்த நிலையில், காசாவில் 6 வார போா் நிறுத்தம் மேற்கொள்ளவும் அப்போது இஸ்ரேல் சிறைகளில் உள்ள பலஸ்தீன கைதிகளுக்குப் பதிலாக 40 நோயுற்ற இஸ்ரேல் பிணைக் கைதிகளை ஹமாஸ் அமைப்பினா் விடுவிக்கவும் இரு தரப்பு ஒப்பந்தத்தை உருவாக்குவதற்காக எகிப்து தலைநகா் கெய்ரோவில் இந்த மாதம் பேச்சுவாா்த்தை தொடங்கியது.
அந்தப் பேச்சுவாா்த்தையின் ஒரு பகுதியாக இஸ்ரேல் வழங்கியுள்ள போா் நிறுத்த செயற்திட்டத்தைப் பரிசீலித்துவருவதாக ஹமாஸ் அமைப்பு தற்போது அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. ஆயினும் ரஃபா மீது இஸ்ரேல் படையெடுப்பும்,
கல்லறைகளாக மாறும் காசாவில் போர் நிறுத்தம் ஏற்பட சாத்தியங்கள் அருகிவருகின்றன.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.