நரகத்தில் வீழ்ந்த நாட்டை என்னால் மீட்க முடியும் -ஜனாதிபதி!
நரகத்தில் வீழ்ந்த நாட்டை மீட்க முடியும் என்ற நம்பிக்கை தமக்கு இருந்ததாலேயே தாம் நாட்டைக் காப்பற்றியதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (வியாழக்கிழமை) நாடாளுமன்றத்திற்கு விஜயம் செய்து விசேட அறிக்கையொன்றை விடுத்துள்ளார்.
அத்துடன் மூன்று முதன்மைத் துறைகளின் ஊடாக கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டதாகத் தெரிவித்த ஜனாதிபதி, முதலாவது உள்நாட்டுக் கடனை மறுசீரமைப்பதாகவும் தெரிவித்தார்.
இப்பணிகள் 2023 இல் நிறைவடையும் என்றும் ,இரண்டாவதாக, வெளிநாடுகளுடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தங்கள் மூலம் உத்தியோகபூர்வமாக பெறப்பட்ட கடனை மறுசீரமைப்பது, 2023 நவம்பருக்குள் இது தொடர்பான கொள்கை உடன்பாட்டை எட்டியதாக ஜனாதிபதி கூறினார்.
கடன் வழங்கும் நாடுகளுடன் புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திடுவது மாத்திரமே இந்த விடயத்தில் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.
உத்தியோகபூர்வ கடனாளிகள் குழுவுடன் வரைவுகள் குறித்து இலங்கை அரசாங்கம் கலந்துரையாடி வருவதாகவும் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
மேலும் வர்த்தகக் கடன் மறுசீரமைப்பு மூன்றாவது துறை எனவும் ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டார்.