முச்சந்தி

“குறுங் கச்சேரி”

கடந்த ஞாயிற்றுக் கிழமை கீஸ்பரோ மண்டபத்தில் வர்ஷா இசைப் பள்ளியின் ஆசிரியை ஶ்ரீமதி துஷாந்தி லக்ஷ்மன் அவர்களின் குறும் இசைக் கச்சேரி அரங்கம் கண்டது. ஜெயதீபனும் ஜமுணாவும் எப்போதோ எங்களுக்கு அறியத் தந்திருந்தாலும் குறுங்கச்சேரி என்ற பதத்தின் விளக்கம் இன்மையால் ஓவியாவையும் நிலவனையும் வாழ்த்த ஒரு வாழ்த்து மடல் கூட எடுத்துப் போகவில்லை. 

நிகழ்ச்சி தொடங்கவும் மெல்பேண் மேடை அறிவிப்பாளர் சத்தியா இலையுதிர் காலத்தில் இன்ப நிகழ்ச்சி என்று தொடங்க 

வர்ஷா இசைப்பள்ளியின் பரீட்சார்த்த குறுங்கச்சேரிக்கு வந்திருந்த இசை ரசிகர்களின் மனதில் ஏக்க அலை அடித்தது. அதை ஓவியாவும்,நிலவனும் மெல்ல மெல்ல இசை மழையால் அந்த ஏக்க அலையை அடக்கி மழைத்துளி விழுந்து அலை அடங்கும் கடல் போல மன ஏக்க அலையோடு இருந்தோரை மனம் அடங்கி எல்லா மன உளைச்சலும் தோழில் இருந்து இறங்கி காணாமல் போய் இசையையே மருந்தாக்கினார்கள் இரு மாணவர்களும். 

வர்ஷா இசைப் பள்ளியின் ஆசிரியை துஷாந்தி லக்ஷ்மனின் இந்தக் குறுங்கச்சேரியின் அத்திவாரம் பலமானதும் பல கேள்விகளின் விடைகளாகவும் தமிழில் என்ன இல்லை 

தமிழில் என்ன செய்யலாம் என்போரின் வரட்டு வக்காளத்துக்கு நேற்று பலரும் பாராட்டு கொடிகளால் வெற்றி கண்ட மன நிலையோடு பேசியது துஷாந்திக்கு கொடுத்த பெரிய தங்கமடல். அதற்கு ஓவியா ஜெயதீபன் நிலவனின் ஜெயதீபன் அவர்களின் அலாதியான வர்ணங்களும் லாவகமாக சாரீர சங்கீத லஜன,ரிதங்களும் தமிழில் குழைத்து தூவிய பன்னீர் செந்தாரைகள் மென்மையான காரணம் தான் 

தெரியாத மொழியானாலும் இசையை நாம் ரசிக்கிறோம்.தான் விளங்காத போது விளங்கியவர்களின் தாளமும் தலை ஆட்டலையும் பார்த்து முளிக்கும் ரசிகர்கள் மத்தியில் நேற்று நடந்த குறுங்கச்சேரி எனக்கும் திருப்தி தந்தது. ஜெயதீபன் ஜமுணா தம்பதிகள் நிகழ்ச்சியைப் பற்றிய விளக்கமும் மிகவும் எளிமையான மேடை அலங்காரங்களும் மிக அழகாக இருந்தது. அப்போது தான் பார்த்தேன் மேடையின் ஒரு பக்கம் குட்டி மேசையில் கறுப்புப் பிள்ளையார் இருக்க  அவருக்கு மாலையும் விளக்கும் ஏந்திய படி அவர் பாட்டில். எங்கிட பக்கம் அவர் பார்ததாலும் காது மட்டும் ஓவியா, நிலவனின் குரல் புலனில் அவர் மயங்கிப் போனார். 

வர்ஷா இசைப் பள்ளியின் ஆசிரியை துஷாந்தினியின் குறுங்கச்சேரியில் தெரிவு செய்த பாடல்களில் ஒரு தொடர்பும் இருந்தது. கடவுள் வாழ்த்து , கர்நாடக இசைக் கோர்வை , கிராமிய தாள லயம், இலக்கியச் சாரல் ,தனித் தமிழ் பாட்டன் பாரதியின் பாடல், கேட்கவே மனம் நிறைந்து வழியத் தொடங்க திருவாசகத்தின் அடி எடுத்துப் பாட மனம் பூரித்தி நிறைவானது 

இந்த குறுங்கச்சேரி நெஞ்சம் நிறைந்த நிகழ்வாக நிறைவானது. பாராட்டுக்கள் குரு துஷாந்தினி அவர்களே நிலவன் ,ஓவியா.இருவருக்கும் பாராட்டுக்கள். 

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.