முச்சந்தி

சிங்களவர்களும் தமிழர்களும் ஒன்றிணைய வேண்டும்! …. ஏலையா க.முருகதாசன்.

 இலங்கை இனித் தனிநாடல்ல சிங்களவர்களும் தமிழர்களும் ஒன்றுபடாவிட்டால் இலங்கையை இழப்பார்கள்

இலங்கை கட்டுநாயக்கா விமான நிலையத்தில் விசா வழங்கும் பணியை இந்திய தனியார் நிறுவனத்திற்கு விற்றதன் மூலம் இலங்கை வெட்கம்கெட்ட நாடாகிப் போய்விட்டது.

ஒரு நாட்டினுடைய பூரணக் கட்டுப்பாட்டிலும் அதிகாரத்துக்கு உட்பட்டு இருக்க வேண்டியவைகளில் முக்கியமானவை விமான நிலையங்களும் துறைமுகங்களுமாகும்.

அவற்றின் எந்தவொரு பணியும் எக்காரணம் கொண்டும் இன்னொரு நாட்டின் கட்டுப்பாட்டில் கொண்டு வரவே கூடாது.இப்படி எல்லாவற்றையும் விற்றுக் கொண்டிருக்கும் இலங்கை ஒரு மானமுள்ள நாடா?.

கேவலம் மிகக் கேவலம்.இந்தியாவுடன் நட்பு இருக்க வேண்டியதுதான்.ஆனால் இலங்கை இந்தியாவுக்கு அடிமையாக வேண்டுமா.

இதனைச் சிங்களவர்களும் தமிழர்களும் ஒருங்கிணைந்து எதிர்க்க வேண்டும்.நாமெல்லொரும் நினைத்துக் கொண்டிருக்கிறோம் நடந்து முடிந்த தமிழீழ விடுதலைப் போராட்டம் தமிழரின் தனிநாட்டுக்கான போராட்டம் என்று அது கிடையவே கிடையாது.

அது இலங்கையை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருதற்காக புலிகளைப் பகடைக்காய்களாக பயன்படுத்தி புலிகளைப் பலியாக்கி இந்தியாவால் நடத்தப்பட்ட போர் என்பதை நாம் எப்போதுதான் உணரப் போகின்றோம்.

சில விடயங்களை உவத்தல் காய்த்தல் இன்றிச் சிந்திக்க வேண்டும்.இலங்கை நிலவரத்தை தமிழர் சார்பு நிலைக் கண்ணோட்டத்துடன் பார்த்தால் எமது பகுத்தறிவை ஏமாற்றி தமிழுணர்வு மட்டுமே முன்னணி வகிக்கும்..தவறுகளை ஏற்றுக் கொள்ளாத மனப் பக்குவத்துடன் எங்கை சுற்றியும் தவறுகளை நியாயப்படுத்தலில் கொண்டு வந்து நிறுத்துவோம். ஏனெனில் தமிழர்கள் தாம் எந்தத் தவறுமே விடாதவர்கள் என்ற நினைப்புடனேதான் இருக்கிறார்கள்.அவர்கள் அதனை தமது சித்தாந்தமாகவே வரித்து வைத்திருக்கிறார்கள்.

சிங்கள மக்களும் தமிழ் மக்களும் ஒன்றிணைந்து இலங்கையை கபளீகரம் செய்யும் நாட்டினைத் தடுத்து நிறுத்த வேண்டும்.

சிங்களவர்களும் தமிழர்களும் ஒற்றுமையில்லாமலிருப்பதே இந்தியா தனது ஆதிக்கத்தில் இலங்கையைக் கொண்டுவர நினைப்பதாகும்.

ஒரு நாட்டில் துறைசார்ந்த அறிஞர்கள் மட்டுமே அந்நாட்டின் கட்டமைப்புகளுக்குப் பொறுப்பானவர்கள் அல்ல.ஒவ்வொரு குடிமகனும் தனது நாடு எத்தகையது அதனுடைய பொருளாதார நிலைகள் என்ன சமூக வாழ்வியல் என்ன என்பதை அறிந்து வைத்திருக்க வேண்டும்.

அவ்வாறு அறிந்து வைத்திருக்கும் போதுதான, அமைச்சர்கள் அதிகாரிகள்,அந்தத்த துறைசார்ந்தவர்கள் பொருளாதாரச் சுரண்டல் ஊழல்களைச் செய்யும் போது பொதுமக்களால் அதனைது; தட்டிக் கேட்க முடியும்

நட்பு வேறு வணிக நிலைமை வேறு ஆனால் இன்னொரு நாடு இலங்கையை தனது ஆளுமைக்குட்படுத்தலை சீரணிக்க முடியவில்லை.

திரும்பத் திரும்ப ஒரு விடயத்தையே சுற்றிவரவேண்டிய நிலைமையை இலங்கை நிலவரம் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.

எதையுமே மீளக் கொண்டுவர முடியாத அளவிற்கு இலங்கை தன்னை சீனாவுக்கும் இந்தியாவுக்கும் தாரை வார்த்துக்; கொடுத்து விட்டது என்றே சொல்லலாம்.

தமிழீழ விடுதலைப் போராட்டம் தமிழருக்கான போராட்டம் என்ற போர்வையில் இந்தியா இலங்கையில் கால் ஊன்றுவதற்காக நடத்தப்பட்ட போராட்டம் என்பதை போராட்ட வரலாற்று ஆய்வாளர்கள் அறிந்தாலும் அதனை வெளிப்படையாகச் சொல்லத் தயங்குகிறார்கள்..

சாட்சிகள், நிரூபணங்கள் இல்லாத உண்மைகள் பல இருக்கின்றன,சம்பவங்கள் பல நடந்திருக்கிளன்றன.

இன்று இந்தியா இலங்கை மண்ணில் கால் பதிப்பதற்கு முதல் இட்ட தீப்பொறி தமிழ்பு; போராளிக் குழுக்களுக்கு தனது நாட்டில் ஆயுதப் பயிற்சி கொடுத்ததேயாகும்.

இந்தியாவின் அணுகுமுறை இயற்பியல் பொறிமுறைக்குச் சமனானது.ஆகவே அகவே எனச் சமன்பாடு கண்டு விடையில் முடியும் அலஜிபிரா கணிதத்திற்குச் சமனானது.

எனவே எனவே எனத் தர்க்கத்தை முன் வைத்து நிரூபிக்கின்ற தர்க்கவாதத்திற்குச் சமனானது.

பலம்பொருந்திய ஐரோப்பிய நாடுகள் தமது எதிர்காலத் திட்டத்தை நூறுவருடத் திட்டமாகக் கொண்டு,ஒவ்வொரு வருடமும் கழியும் போது ஒவ்வொரு வருடத்தையும் இணைத்து நூறு வருடத்திட்டத்தை நூற வருடமாகவே நீட்டிக் கொண்டு இருப்பார்கள்.

ஒவ்வொரு ஆண்டும் புதுப்புதுப் பிரச்சினைகளை இத்தகு நாடுகள் சந்திக்கும.; அதற்கான தீர்வும் அதற்கான திட்டங்களும் தொடர்ச்சியாக திட்டமிடப்பட்டுக் கொண்டேயிருக்கும்.

இத்தகு நாடுகளின் அறிஞர்களின் சிந்தனை தொடர்ந்து இயங்கிக் கொண்டேயிருக்கும்.அதற்கு ஓய்வு கிடையாது.

வேறு வேறு நாடுகளின் தொழில்நுட்ப உதவிகளோ,வணிக நிறுவனங்களோ எல்லாமே வெளிநாட்டுக் கொள்கை ரீதியிலும் பண்டமாற்று முறையிலும் அந்நாடுகளில் நிலை கொள்வதை அனுமதிப்பினும் அவற்றினைக் கண்காணிப்பதற்கென்றே தனித் திணைக்களம் இயங்கிக் கொண்டிருக்கும்.

ஆனால் இலங்கை போன்ற நாடுகளில் இனமுரண்பாடுகள் வளருமாயின் மற்றைய நாடுகள் தமது ஆதிக்கத்தைச் செலுத்த வாய்ப்புண்டு.

இலங்கையில் இனவாதம் இணமுரண்பாடாகவும்,பௌத்தசமயம் பௌத்ததீவிரவாதமுமமாக வளர்ந்து இலங்கையை எடுப்பார் கைப்பிள்ளையாக்கிவிட்டது.மீட்சியில்லை என்ற போதிலும் எழுதாமல் இருக்க முடியவில்லை.

சில செய்திகள் படிமமுறையில் சிந்திக்க வைக்கின்றன.அப்படி ஒன்றுமில்லை அது ஒரு வதந்தி என்று ஆரம்பத்தில் சொன்னாலும் அது உண்மையாகிவடுவதும் உண்டு.

தமிழகத்திலிருந்து எண்ணையைக் கிழக்கு மாகாணத்திற்கு கொண்டு போவதற்கு கடலுக்குள்ளாலும் பின்பு தரைவழியாகவும் கொண்டு செல்லும் திட்டத்தை இந்தியா நடைமுறைப்படுத்தவிருக்கின்றது என்பது இலங்கைக்கான உதவி என்று போதிலும்,மன்னார் வளைகுடாவில் காணப்படும் வட்ஜ்பாங் எண்ண வளத்தையும் சேர்த்துச் சிந்திக்க வைக்கின்றது.

இலங்கைக்குச் சொந்தமான எண்ணையை இலங்கைக்கே விற்கும் தந்திரந்தான் என யோசிக்க வேண்டியுள்ளது.ஆனால் வட்ஜ்பாங் திடல் கச்சதீவுக்கு மாற்றாக ஒப்பந்தமிடப்பட்டு இந்தியாவிடம் தாரைவார்த்துக் கொடுத்தாகிவிட்டது.

போதியளவு எண்ணை வளம் பேசாலை மன்னார் வளைகுடாவில் இல்லையென்ற செய்தியை கசிய விடுதலும்,இலங்கையர்களுக்கு அதன் மீதான அக்கறை நீர்த்துப் போவதுமான திட்டத்தை முதலில் இந்தியா செய்துவிட்டது.

வட்ஜ்பாங் கனிம வளத்தின் உண்மை நிலவரம் இந்திய கனிமவள அறிஞர்களைத் தவிர விபரமாக எவருக்கும் தெரியாது.

அமெரிக்கா நெடுந்தீவுக் கடலிலும், ரஷ்யா பேசாலையிலும் எண்ணபை;படிவ ஆய்வு செய்ததுடன் அத்திட்டத்தையே கைவிட்டுவிட்டனர்.

ஆனால் மூடிமறைப்புக்களாலும்,அதிகாரிகளைக் கைக்குள் போட்டுக் கொள்வதாலும் இலங்கை வளங்கள் சூறையாடப்படுகின்றன என்ற சந்தேகங்களை நிராகரிக்க முடியவில்லை.ஊகங்களையும்,நிரூபிக்க முடியாதவற்றையும் புறந்தள்ளிவிட்டு கைகள் இரண்டையும் தட்டித் துடைத்துவிட்டுச் செல்வது புத்திசாலித்தனமல்ல.

இலங்கை வளங்கள் தொடர்பாக ஒவ்வொன்றிலும் ஆழமான பார்வையும்,சந்தேகங்களும் இருந்தே ஆக வேண்டும்.

இலங்கையின் கனிம வளங்களை இலங்கையின் பொருளாதார மூலப்பொருளாக நிலைநிறுத்த வேண்டுமெனில் அதற்கு உகந்த தொழில்நுட்பங்களை காலப்போக்கில் இலங்கையே கொண்டு வரவேண்டும்.

ஒரு சின்னத் தீவில் இவையெல்லாம் எவ்வாறு சாத்தியமாகும் என்ற தொடர் கேள்விகள் இலங்கையை மேலும் மேலும் கீழ்நோக்கியே கொண்டு செல்லும்.

நான் படிக்கிற காலத்தில் இலங்கையைப் பற்றி ஆசிரியர் கூறும் போது (1960களில்) இலங்கையை வளமான உலக நாடுகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கையில் 300 வருடங்கள் பின்தங்கி நிற்கின்றது என்றார்.அப்படியானால் இன்று இலங்கை எத்தனை ஆயிரம் வருடங்கள் பின்தங்கி நிற்கின்றது என்பதை யோசிக்கும் போது மலைப்பாக இருக்கின்றது.

எமது நாட்டின் இயலாமை,எமது மக்கள் நாளாந்த வாழ்க்கைக்கு தேவையாக பொருட்களுடன் வாழ்ந்தாலே போதும் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம்.

கையாகலாத நாடாக இலங்கை தனக்குத்தானே கழிவிரக்கம் கொள்ள வேண்டியதுதான்.எதை எவுருக்குக் கொடுக்க வேண்டும் என்று பகுத்துணர முடியாதவாறு எதுவாக இருந்தாலும் கொடுப்பம் என்ற பரிதாப நிலையை இலங்கை எட்டியுள்ளது.

இலங்கை ஒரு பல்லினம் வாழுகின்ற நாடு.சிங்களவர்கள் தமிழர்களைப் பற்றி அக்கறைப்படுவதும் இல்லை.தமிழர்களும்; சிங்களவர்கள் பெரும்பான்மை இனம் கொஞ்சம் கவனமாக அரசியலை அணுக வேண்டும் என்ற எண்ணமே இல்லாதவர்களாக இருக்கிறார்கள்.

சிங்கள இனத்திலும் புத்திசீவிகள் இருக்கிறார்கள் அவர்களும் தமது இனத்தைப் பற்றிச் சிந்திப்பார்கள் என்பதை தமிழர்கள் யோசிப்பதாக இல்லை.எங்களுடைய ஆட்கள் அந்தத் திணைக்களத்தில் அதிகாரிகளாக இருந்தார்கள்,இந்தத் திணைக்களத்தில் அதிகாரிகளாக இருந்தார்கள் என பெருமைபேசி ஜம்பம் அடிக்கிறார்கள்.

இப்பொழுது உள்ள இலங்கை நிலவரமோ அரசியல் நிலவரமோ அவர்களக்குப் பெரிதாகத் தெரியவில்லை அதைப் பற்றிப் பெரும்பான்மையானவர்கள் சிந்திப்பதே இல்லை.

சிங்களவர்களைக் கண்டால் தமிழர்களுக்கு வெறுப்பு,தமிழர்களைக் கண்டால் சிங்களவர்களுக்கு வெறுப்பு.இந்த வெறுப்பே இந்தியாவின் மூலதனம்.

இந்த வெறுப்பை வளரவிடுவதற்கே போராளிக்குழுக்களுக்கு ஆயுதப் பயிற்சி கொடுத்து அனுப்பி வைத்தார்கள்.இந்தியாதான் புலிகளைக் வைத்து இலங்கையை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது என்பதை சீரணிக்க கஸ்டமெனினும் அதுவே உண்மை.

தர்க்கவியல,கணிதவியல்,இயற்பியல்;,வேதியல்,உளவியல் என்பனவற்றை உதாரணங்களாகக் கொண்டு சூழ்ச்சி,சதி என்பவற்றின் ஊடாகவும், உதவி செய்து அடிபணிய வைக்கும் தந்திரங்களில் பெரும்பாண்டியத்தியம் பெற்ற

இராஜதந்திரிகளால் பின்னப்பட்ட வலையே இலங்கை மீது போர்த்தப்பட்ட இலங்கையைத் தனது ஆளுமைக்குட்படுத்திய சதி வலை.

சிலந்தி வலைக்குள் சிக்குப்பட்ட நிலைதான் இலங்கையின் நிலைமை.ஜனாதிபதி,அமைச்சர்கள்,நாடாளுமன்ற உறுப்பினர்கள் என எல்லாம் கொண்ட நாடாகத் தோற்றமளிப்பினும் இலங்கை தனக்கான ஒரு தனிநாடல்ல.

முன்பு இந்திய ரூபாயின் தோற்றத்தை ஆர் என்ற ஆங்கில எழுத்தினைக் கொண்டு வெளிப்படுத்தினார்கள்.

அனைவுரும் இதனைக் கவனித்திருப்பீர்கள் ஆர் என்று ஆங்கில எழுத்தின் மேலிருந்து கீழான கால் நீக்கப்பட்டு யூரோ பணத்துக்கு உள்ளது போல இரண்டு கோடுகள் இடப்பட்டுள்ளன.

இந்தியா இலங்கையிலும்,வெகுவிரைவில்மாலைதீவிலும் தனது பணத்தை புழக்கத்திற்கு கொண்டு வரும்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.