இலங்கை
சிவப்பு பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த “மன்னா ரமேஷ்” நாட்டுக்கு அழைத்து வரப்பட்டார்!
டுபாயில் கைது செய்யப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலின் தலைவனாகக் கருதப்படும் ‘மன்னா ரமேஷ்’ எனப்படும் ரமேஷ் பிரியஜனக நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் விசேட பொலிஸ் குழுவொன்று சந்தேக நபரை இன்று (செவ்வாய்கிழமை) காலை டுபாயில் இருந்து நாட்டுக்கு அழைத்து வந்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்தார்.
சர்வதேச பொலிஸாரால் சிவப்பு பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த மன்னா ரமேஷ் அண்மையில் துபாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
கொலை, போதைப்பொருள் கடத்தல், கப்பம் பெறுதல் உள்ளிட்ட பல குற்றங்கள் மன்னா ரமேஷ் மீது சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.