ரணில் – பசில் பேச்சுவார்த்தை இணக்கப்பாடின்றி முடிவு
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும்(Ranil Wickremesinghe) ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஸ்தாபகர் பசில் ராஜபக்சவிற்கும்(Basil Rajapaksa) இடையில் நடைபெற்ற மற்றுமாரு சுற்று பேச்சுவார்த்தை இணக்கப்பாடின்றி முடிவடைந்துள்ளது.
ஏற்கனவே இருவருக்கும் இடையில் நான்கு சுற்று பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில் ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக நாடாளுமன்றத்தை கலைத்து பொதுத் தேர்தல் நடாத்துவது குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.
ஜனாதிபதி தேர்தல்
எனினும் அரசியல் அமைப்பின் பிரகாரம் முதலில் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
தாம் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதா இல்லையா என்பது குறித்து ஜூலை மாதம் அறிவிப்பதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
இதேவேளை, ஜனாதிபதி தேர்தலில் ரணிலுக்கு ஆதரவளிப்பது குறித்து ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணி இன்னமும் தீர்மானம் எதனையும் எடுக்கவில்லை.
ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக நாடாளுமன்றை கலைக்க வேண்டுமாயின் நாடாளுமன்றில் அது குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட முடியும் என ரணில் தரப்பு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.