இலங்கை

விசா வழங்கல் தொடர்பான சூழ்நிலை குறித்து அமைச்சர் டிரான் அலஸ் விளக்கம்!

வருகை (On Arrival) விசா வசதி தொடர்பான சர்ச்சைக்குரிய சூழ்நிலை குறித்து பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் விளக்கமளித்துள்ளார்.

இன்று அமைச்சில் இடம்பெற்ற ஊடவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இது தொடர்பாக விளக்கமளித்துள்ளார்.

இதன்போது மேலும் கருத்துத் தெரிவித்த பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ்,

புதிய விசா முறை தொடர்பான யோசனை பாராளுமன்றத்தில் விவாதம் இன்றி கடந்த ஆண்டு நவம்பர் 23ஆம் திகதி ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

அத்துடன், விசா கட்டண விவகாரமும் நிறைவேற்றப்பட்ட யோசானையின் ஒரு பகுதியாகும்

இவ்வாறு நவம்பர் மாதம் யோசனை நிறைவேற்றப்பட்டாலும் ETA எனப்படும் Electronic Travel Authorization முறைமை மூலம் மாற்றத்தை ஏற்படுத்த முடியாமல் போனது எனத் தெரிவித்தார்.

எனவே, VFS முறைமை மூலம் அதைச் செய்வதற்கு கடந்த ஏப்ரல் மாதம் 17ஆம் திகதி வரை காத்திருக்க வேண்டி இருந்ததாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

அதன்படி, ETA முறைமையில் உள்ள குறைபாடுகள் காரணமாகவே இந்த முறைமையை மாற்றுவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் விளக்கமளித்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.