உலகம்

யேமன் – ஹவுதி மோதல்: 45 ஊடகவியலாளர்கள் பலி

2015 ஆம் ஆண்டு சர்வதேச அங்கீகாரம் பெற்ற யேமன் அரசாங்கத்திற்கும்(Yemen) ஹவுதி குழுவிற்கும் இடையில் வெடித்த சண்டையில் இருந்து யேமனில் 45 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

அத்தோடு, 165 பத்திரிகை தளங்கள் வேலை செய்வதை நிறுத்திவிட்டதாகவும், 2015 முதல் 200 உள்ளூர் மற்றும் அரேபிய செய்தி இணையதளங்கள் முடக்கப்பட்டுள்ளதாகவும் உலக பத்திரிகை சுதந்திர தினத்தில் யேமன் பத்திரிபையாளர் சிண்டிகேட் (Yemeni Journalists Syndicate) தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், பத்திரிகையாளர்கள் மீதான தாக்குதல்கள் மற்றும் அத்துமீறல்களுக்குப் பின்னணியில் எந்தக் கட்சியும் இருப்பதாக சிண்டிகேட் குற்றம் சாட்டவில்லை.

பத்திரிகை சுதந்திரம்

அதேவேளை, நாட்டில் ஊடகவியலாளர்கள் மற்றும் பத்திரிகை சுதந்திரத்திற்கு எதிரான மீறல்களை நிறுத்துமாறு அனைத்து தரப்பினரையும் வலியுறுத்தியுள்ளது.

யேமன் மூன்று செல்வாக்கு மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது, சவூதி அரேபியாவால் ஆதரிக்கப்படும் சட்டபூர்வமான அரசாங்கம், ஈரானால் ஆதரிக்கப்படும் ஹவுதிகள் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE) ஆதரிக்கும் தெற்கு இடைநிலை கவுன்சில் (STC).

2015 ஆம் ஆண்டு மார்ச் மாதம் தலைநகர் சனாவை ஹவுதிகள் கைப்பற்றியதைத் தொடர்ந்து சவூதி தலைமையிலான அரபுக் கூட்டணியின் இராணுவத் தலையீட்டிலிருந்து ஏமன் மோதலில் சிக்கியுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.