“நடுகைக்காரி” …. 69 ….. ஏலையா க.முருகதாசன்.
ஸ்ராப் றூமைவிட்டு எல்லா ஆசிரிய ஆசிரியைகள் வெளியேறிக் கொண்டிருக்ககையில் மாஸ்ரர் என்று குரல் கேட்டுத் திரும்பிப் பார்க்கிறார் கறுவல் செல்லத்துரை மாஸ்ரர்.அவரை நோக்கி தர்மேஸ்வரி ரீச்சரும்,சர்வாம்ரிகை; ரீச்சரும் வந்து கொண்டிருந்தனர்.
கறுவல் செல்லத்துரை மாஸ்ரர்,ஸ்ராப் றூம் வாசலடியில் கிழக்கே போகும் விறாந்தையில் அவர்களின் வருகைக்காக காத்துக் கொண்டீருந்தார்.
அவரருகில் வந்த தர்மேஸ்வரி ரீச்சரும் சர்வாம்பிகை ரீச்சரும் மாஸ்ரர் நாங்கள் உங்களைப் பற்றிக் கதைச்சதுக்கு எங்களை மன்னியுங்கள், ஏதோ ஒரு வேகத்தில் இளம்பிள்ளைகளை பிழையாக வழிநடத்துகிறீர்கள் எனத் தப்பாக நினைச்சு கொண்டு ஸ்ராப் றூமிலை வைச்சு அப்படிக் கதைச்சுப் போட்டம், நீங்கள் திருக்குறளலிருந்தும் கம்பராமாயணத்திலிருந்தும் நாங்கள் படிப்பித்ததையே உதாரணமாக எடுத்துச் சொன்ன அந்த விளக்கம் உண்மையானதே தயவு செய்து எங்களை மன்னியுங்கள் என்று தர்மேஸ்வரி ரீச்சர் சொல்ல,ச்சாச்சா நான் அதைப் பெரிசாகவே எடுக்கவில்லை நீங்கள் றிலாக்ஸாக இருங்கள் என்று சொல்லியபடி அவர் தனது அடுத்த பாடத்திற்கான வகுப்பறையை நோக்கி நடக்க அவர்கூடவே சர்வாம்பிகை ரீச்சரும்,தர்மேஸ்வரி ரீச்சரும் நடந்து தத்தமது வகுப்புகளுக்கு போய்க் கொண்டிருந்தனர்.
மங்களேஸ்வரியை வருத்தம் பார்க்கப் போவதாகப் பொய் சொல்லிவிட்டுப் புஸ்பகலா ஞானத்தை வருத்தப் பார்க்கப் பன்னாலைக்குப் போனதும்,அங்கு அவளுக்கு மாதவிடாய் வந்ததும் மெல்ல மெல்ல வகுப்பில் பரவத் தொடங்கிவிட்டது.
புஸ்பகலா ஞானத்தின் வீட்டுக்கு போனது தனபாலசிங்கத்தக்கும் மங்களேஸ்வரிக்கு மட்டுமே தெரிஞ்ச விடயம்.
மங்களேஸ்வரி புஸ்பகலாவின் சினேகிதியாகவிருந்தாலும் ஒரு இரகசியம் நீண்ட நாளைக்கு இரகசியமாக இருக்காது என்றபடியால், மங்களேஸ்வரி இன்னொரு சினேகிதியான நாகேஸ்வரிக்கு மெதுவாகச் சொல்ல, அதை நாகேஸ்வரி நீலலோஜினிக்குச் சொல்லிவுpடுகிறாள்.புஸ்பகலாமீது நீலலோஜினக்கு இரண்டுவிதமான கோபங்கள் இருந்தன.
அந்த வகுப்பில் படித்துக் கொண்டிருந்த புஸ்பகலா,நீலலோஜினி,மங்களேஸ்வரி,அருந்ததி,சொர்ணாம்பாள் ,சந்திரகுமாரி,நாகேஸ்வரி,குணபூபதி என எல்லாரும் வாட்டசாட்டமான அழகுள்ளவர்கள்தான்.
ஆனால் அவர்களுக்குள் கம்பீரமான அழகுள்ளவர்களாக இருந்தவர்கள் புஸ்பகலாவும் நீலலோஜினியும்.
லோவர் பிறப் எஸ்.எஸ்.சியில் ஞானம் நீலலோஜினியின் தலையில் ரோஜாப்பூ வைச்சுவிட்டதை நீலலேஜினியால் மறக்க முடியவில்லை.அவன்
விளையாட்டுத்தனமாக வைச்சானா விருப்பத்துடன் வைச்சானா என்பதை நீலலோஜினயால் தீர்மானிக்க முடியவில்லை.
தான் விளையாட்டுப் பிள்ளையா அல்லது பற்றுதி கொண்டவனா என்பதை அவனாலும் தீர்மானிக்கு முடியவில்லை:
பிறப் எஸ்.எஸ்.சியில் நீலலோஜினியின் தலையில் ரோஜாப்பூவைச் செருகும் பொது அடுத்த நிமிடம் அவளின் பிரதிபலிப்பு எப்படியிருக்குமோ என்றுகூட அவன் யோசிக்கவில்லை.
ஆனால் பொம்பிளைப்பிள்ளைகள் இத்தகைய சூழ்நிலையில் பெரும்பிரச்சினைகளை உருவாக்கக்கூடாது என்பதற்காக அதைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்தி விடுவார்கள்,அல்லது எதுவுமே நடக்காதது போல இருந்துவிடுவார்கள்.
நீலலோஜினிக்கும் ஞானத்தின் மீது ஒரு ஈர்ப்பு இருந்ததால் ரோஜாப்பூ வைச்சதை பெரிதுபடுத்தாமல் பேசாமலிருந்தாள்.அதனால் அவளின் தலையில் ரோஜாப்பூ இருந்ததைக் கண்ட பாடமெடுக்கும் ஆசிரியை கேட்ட போது எங்கள் வீட்டு ரோஜாச் செடியிலிருந்து அம்மா கிள்ளி வைச்சவா எனப் பொய் சொன்னாள்.
ஞானந்தான், தனது தலையில் ரோஜாப்பூவை செருகியவன் என்று சொன்னால் அது என்னென்ன பிரச்சிரனகளை கொண்டு வரும் என்பதை நீலலோஜினி உணர்ந்திருந்தாள்.ஆனால் பின்னாட்களில் சுந்தரராஜன் ரீச்சர் எப்படியோ அதை மோப்பம் பிடிச்சு கண்டுபிடித்துவிட்டார்.
சுடச்சுட விசயங்கள் வெளிக்கிளப்பினால்தான் அதைப்பற்றிப் பேசுவதும் விவாதிப்பதும் இயல்பு.நாட் சென்ற விடயங்களின் சூடு தணிந்து போய்விடும்.
கோவில் திருவிழாக்களின் போது இளைஞர்களும் யுவதிகளும் கோவிலுக்குப் போவது சுவாமி கும்பிடுவதற்கு மட்டுமல்ல தோழிகளுடன் உல்லாசமாகப் பொழுது போக்கி கடைகளைச் சுற்றிப் பார்ப்பதற்காகவும், தாம் தாம் விரும்பும் இளைஞர்களுடன் முடிந்தளவக்கு கதைப்பதற்கும் அது முடியாதவர்கள் கண்ணால் கதைப்பதற்குந்தான்.
தாம் விரும்பும் யுவதிக்கு ஐஸ்பழம் வாங்கிக் கொடுப்பதும்,கடலைப் பை வாங்கிக் கொடுப்பதும் சனத்தோடு சனமாhக சனச் சந்தடிக்குள் தான் விரும்புவளுக்கு அருகில் போய் யாரோ ஒருத்தியோடு அக்கறையில்லாது கதைப்பது போல உங்கடை காப்பு அளவு என்ன என்று கேட்க அவளும் தான் போட்டிருந்த காப்பில் ஒன்றை கழட்டிக் கொடுத்துவிட்டு எதுவுமே நடக்காதது போல தன்னை விரும்புகிறவனை விலத்திச் செல்ல,அவள் கொடுத்த காப்பை மிகக் கவனமாகக் கொண்டு போய் காப்புக் கடையிலை குடுத்து விதம் விதமான காப்புகளை வாங்கிக் கொண்டு போய் அவனுக்காகவே காத்திருப்பதைக் காட்டிக் கொள்ளாது நடந்து நடந்து கால் உiளையுது இதிலை கொஞ்ச நேரம் நிற்பம் என்று சொல்லி அவள் தோழிகளுடன் நிற்க அவனும் அந்த இடத்துக்கு காப்புடன் வந்து சேர்ந்து காப்புகளை மட்டுமல்ல தான் வாங்கிக் கொண்டு வந்த கடலைப் பையையும் அவளிடம் குடுப்பான்.
இதுக்குத்தான் கால் உளைஞ்சது என்று சொன்னனியோ என்று தோழிகள் கிண்டல் பண்ணுவார்கள்.சில இளசுகள் போகிற போக்கில் பொம்பிளைப் பிள்ளையளின் தலைமயிரை இழுப்பதும் கோபப்படும் யுவதிகள் நாய்,சனியன் காவாலி என்று திட்டுவதும் நடக்கும்.
இன்னும் சில மோசமான இளசுகள் யுவதிகளைத் தொடாத இடங்களில் தொடுவதும் அதை யாராவது இளைஞர்கள் கண்டுவிட்டாலோ அல்லது அந்த யுவதியின் அண்ணன் தம்பியோ கண்டுவிட்டாலோ பெரும் சண்டையும் வந்துவிடும்.
யுவதிகளில் சிலர் ஐஸ்பழம் சூப்பிக் கொண்டு போகும் போது தனக்கு முன்னால் போகும் இளைஞனின் சேர்ட்டின் பின்புறத்தில் ஐஸ்பழத்தால் கோடு போல் கீறிவிட்டு சிரிப்பை அடக்கிக் கொண்டு அந்த இளைஞனைக் கடந்து செல்வதும் உண்டு.
இப்படியெல்லாம் திருவிழாக்களில் நடக்கும் போது அதையே யுவதிகள் பெரும் பிரச்சனையாக்க மாட்டார்கள்.ஏதோ போகட்டும் என்று பேசாமலிருந்துவிடுவார்கள்.
அது போலத்தான் நீலலோஜினியும் ஞானம் தனது தலையில் விளையாட்டாக வைச்சுவிடும் ரோஜாப்பூ விசயத்தை பெரிய பிரச்சனையாக எடுக்கவில்லையாயினும் ஞானத்தின் மீது அவளுக்கு கொஞ்சம் கொஞ்சமாக ஈர்ப்பு ஏற்பட்டாலும் அவள் அதனை காட்டிக் கொள்ளவே இல்லை.ஞானமும் நீலலோஜினி மீது ஈர்ப்பெதையும் காட்டாதிருந்தான்.
ஆனால் எஸ்.எஸ்.சி யில் ஞானம் புஸ்பகலாவின் மீது காதல் கொண்டதும்,ஆரம்பத்தில் நீலலோஜினி ஞானம் புஸ்பகலாவை விரும்புகிறான் என்பது தெரியாத போது அமைதியாக இருந்தவள்,ஞானம் புஸ்பகஈலாவை விரும்புகிறான் என்பதை முடிவாகத் தெரிஞ்ச போது புஸ்பகலா மீது பொறமைப்படத்: தொடங்கினாள்.
மங்களேஸ்வரி புஸ்பகலாவின் உயிர்த்தோழியென்றாலும்கூட மங்களேஸ்வரியாலும் புஸ்பகலா சொல்லும் இரகசியங்களை காப்பாற்ற முடியவில்லை.
தன்னை வருத்தம் பார்ப்பதாக புஸ்பகலா தனது வீட்டில் பொய் சொல்லிவிட்டு ஞானத்தின் வீட்டுக்குத் தனபாலசிங்கத்துடன் போய் வருத்தம் பார்த்ததும்,அங்கு சாப்பிட்டதையும்,அங்கு அவளுக்கு மாதவிடாய் வந்ததையம் அருந்ததிக்குச் சொல்ல,அருந்ததி நீலலோஜினிக்குச் சொல்லிவிடுகிறாள்.
நீலலோஜினி அமைதியான சுபாவம் உள்ளவள் என்றாலும்,புஸ்பகலாவை பழிவாங்க வேண்டும் அவளை அழ வைக்க வேண்டும் எனக் காத்திருந்தாள்.
ஆசிரியர்கள் வகுப்புக்குள் வரும்வரைக்கும் வகுப்பில் மாணவ மாணவிகள் கதைப்பது இயல்பான ஒன்றுதான் அப்பொழுது மாணவிகளை சில மாணவர்கள் கிண்டல் செய்வார்கள்,மாணவிகளும் மாணவர்களைக் கிண்டல் செய்வார்கள்.
ஞானம் அதைப் பார்த்து இரசிப்பான்,சில வேளைகளில் வாழைப்பழத்தில் ஊசி எற்றுவது போல அவனும் அவர்களை நோகடிக்காதவாறு கிண்டலடிப்பான்.
நீலலோஜினியின் கீழுதட்டின் கீழே நாடியில் ஒரு திரட்சியான கறுப்பு மச்சம் இருக்கிறது.அதை அவன் என்ன உங்களுடைய நாடியில் நாயுண்ணி ஒட்டிக் கொண்டிருக்கிறது என்று கேட்க அவளும் அலட்சியமாக, எப்போ ஒருநாளைக்கு அதைக் கிட்டப் பார்ப்பியள்தானே அப்ப நான் கதைச்சுக் கொள்வன் என்றாள்.அவள் அப்படிச் சொன்னதைப் பெரிதாக எடுக்கவில்லை.
நீலலோஜினிக்கும் ஞானத்திற்குமிடையில் ஏதோ இருப்பதாக மாணவ மாணவிகளுக்கு தெரிந்த போது புஸ்பகலாவும் அதை கவனித்திருந்தாள்.
ஆனால் திடீரென்று புஸ்பகலா ஞானத்தின் மிது விருப்பம் கொள்ளத் தொடங்கிய போதும்கூட ஞானம் அதைபற்றி எந்தவிதமான விருப்பமோ அக்கறையோ கொள்ளவில்லை.
கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும் என்பது போல புஸ்பகலாவின் தொடர்ச்சியான, அவன் மீதான காதல் பார்வையாலும் உதவி செய்யும் இயல்பாலும் அவளை நோக்கி அவன் கவனம் சென்று இன்று அது இருவரையும் காதலர்களாக்கி,தாய்க்குப் பொய் சொல்லிவிட்டு அவனை வருத்தம் பார்க்க போகுமளவிற்கு இருவரின் காதலும் கொண்டு வந்துவிட்டது.
தன்னை ஒதுக்கிவிட்டு புஸ்பகலாவின் மீது ஞானம் நாட்டம் கொள்வதை நீலலோஜினி விரும்பாததால்,அவளைப் பழிவாங்க வேண்டும் என்ற எண்ணம் அவள் மனதில் வளரத் தொடங்கியது.
ஞானத்தைப் புஸ்பகலா வருத்தம் பார்க்கப் போனதை வைத்து ,புஸ்பகலாவிற்கு பாடம் படிப்பிக்க வேண்டும் என்று நீலலோஜினி தீர்மானித்தாள்.
(தொடரும்)