“யாதொன்றும் நானறியேன் பராபரமே” ….. கவிதை …. சங்கர சுப்பிரமணியன்.
நான் வேறு நீ வேறு என்பதைப் போல
தமிழ் வேறு பக்தி வேறா
இநிலொன்றும் வேர் இல்லயா
தமிழும் சைவமும் ஒன்று என்கிறார்களே
திருவாசகத்துக்கு உருகாதார்
ஒருவாசகத்துக்கும் உருகார் என்பதென்ன
தமிழால் திருவாசகத்துக்கு பெருமையா
திருவாசகத்தால் தமிழுக்கு பெருமையா
தமிழின் செழுமையன்றோ உருகவைத்தது
இதைத்தான் செழும்பரிதி தன்னோடும்
பிறந்த தமிழுடன் பிறந்தோம் என்பதா
நக்கீரன் பாடலில் பிழையா
சிவன் தமிழில் நக்கீரனுடன் பேசினானா
பிறை சூடிய பெருமான் தமிழில் பேசினானா
இடுப்பில் புலித்தோல் கையில் உடுக்கை
வேட்டையாடிய காலத்திலேயே
எம்பெருமான் தமிழில் பேசினானா
கையில் சூலம் வைத்திருக்கும் கங்காதரன்
உலோகம் கண்டநாளான அன்று
கடவுள் கன்னித்தமிழில் பேசினானா
திங்களொடும் செழும்பரிதி தன்னோடும்
விண்ணோடும் உடுக்களோடும்
மங்குல் கடல் இவற்றோடும் பிறந்த தமிழுடன் பேசியிருப்பான்
சிவன் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்த தமிழ் பொய்யா கற்பனையா
சிவன் மகன் முருகன் பேசிய தமிழ் பொய்யா கற்பனையா?
அறிவியல் கண்ணோட்டம் தவறென்கிறதே
ஒன்று உண்டோன்றால் மற்றொன்றும் உண்டு
அது இல்லையெனில் இதுவும் இல்லை
இதைத்தான் கவிஞன் கண்ணதாசள்
உண்டென்றால் அது உண்டு
இல்லையென்றால் அது இல்லை
என்று பாடினானா
யாதொன்றும் நானறியேன் பராபரமே!
-சங்கர சுப்பிரமணியன்.