இலங்கை

தியத்தலாவை கார் பந்தய விபத்து : விசாரணைக்கு 7 பேர் அடங்கிய குழு நியமிப்பு !

தியத்தலாவையில் இடம்பெற்ற கார் பந்தயத்தின் போது ஏற்பட்ட விபத்துக்கான காரணம் குறித்து விசாரணைகளை மேற்கொள்ள 7 பேர் அடங்கிய குழு நியமிக்கப்பட்டுள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

மேஜர் ஜெனரல் தலைமையிலான 7 பேர் அடங்கிய குழுவினர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை தியத்தலாவையில் இடம்பெற்ற “Fox Hill Super Cross 2024” கார் பந்தயத்தின் போது ஏற்பட்ட விபத்தில் 7 பேர் உயிரிழந்ததுடன் 21 பேர் காயமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.