உலகம்
ஐரோப்பா கண்டம் மிக வேகமாக வெப்பமடையும் நிலையில் உள்ளதாக தகவல்!
உலகிலேயே ஐரோப்பா மிக வேகமாக வெப்பமடையும் கண்டமாக மாறிவருவதாக ஆய்வறிக்கை ஒன்று தெரிவிக்கப்பட்டுள்ளது
ஐ.நா.வின் உலக வானிலை மையம் (WMO) மற்றும் ஐரோப்பிய யூனியனில் காலநிலை முகமை இணைந்து வெளியிட்ட கூட்டறிக்கையில் இவை வெளிவந்துள்ளது
ஐரோப்பிய கண்டத்தின் வெப்பம் சர்வதேச சராசரியைவிட இரண்டு மடங்கு வேகமாக அதிகரித்துவருவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளதுடன் இது மனிதர்களின் உடல்நலன், பனிப்பாறை உருகுதல், பொருளாதார நடவடிக்கைகளின் கடும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் அந்த அறிக்கை எச்சரிக்கின்றது
மேலும் ஐரோப்பிய கண்டம் கடந்த ஆண்டு தனது தேவையில் 43 சதவீத மின்சாரத்தை புதுப்பிக்கித்தக்க எரிசக்தி மூலம் உருவாக்கியுள்ளது. இது அதற்கு முந்தைய ஆண்டில் 36 சதவீதமாகவே இருந்தது என்ற தகவலும் அறிக்கையில் இடம்பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.