பெருந்தோட்டக் கம்பனிகளுக்கு செந்தில் தொண்டமான் எச்சரிக்கை!
பெருந்தோட்டக் கம்பனிகளுடன் எதிர்வரும் 24 ஆம் திகதி நடைபெறவுள்ள பேச்சுவார்த்தையில் மலையகப் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆதரவாகத் தீர்மானம் எட்டப்படாவிட்டால் போராட்டங்கள் வலுப்பெறும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரான ஆளுநர் செந்தில் தொண்டமான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மலையகப் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாள் சம்பளத்தை 1,700 ரூபாயாக அதிகரிக்குமாறு வலியுறுத்தி மலைய பகுதிகளில் நேற்று போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
நுவரெலியா, பதுளை, கண்டி, இரத்தினபுரி, மாத்தளை மற்றும் களுத்துறை மாவட்டங்களில் இந்தப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
இதற்கிடையில், பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பை உடனடியாக மேற்கொள்ளுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் நேரடியாக நேரடியாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இவ்வாறனதொரு நிலையில், எதிர்வரும் 24ஆம் திகதி சம்பள நிர்ணய சபை மீண்டும் கூடவுள்ளது.
இதன்போது, மலையகப் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆதரவாகத் தீர்மானம் எட்டப்படாவிட்டால் போராட்டங்கள் வலுப்பெறும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் செந்தில் தொண்டமான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.