புளகாங்கிதக் கற்பனையும் அறிவியலும்! …. ஏலையா க.முருகதாசன்.
திங்களொடும் செழும்பரிதி தன்னோடும்
விண்ணோடும் உடுக்களோடும்
மங்குல் கடல் இவற்றோடும் பிறந்த தமிழுடன்
பிறந்தோம் நாங்கள்.
எவ்வாறு கல்தோன்றி மண் தோன்றாக் காலத்து என்று தொடங்கும் பலவர் ஐயனாரிதனாரின் அறிவியலுக்கு ஒத்து வராத வரிகள் போன்று இருந்ததோ அது போல இதுவும் இருப்பதாக கருதுகிறேன்.தமிழ் இனம் எந்த இனத்துக்கும் கீழானவர்கள் அல்ல என்பதை உகிற்கும் தமிழர்களை இழிவாக நினைப்பவர்களுக்கும் கூறுவதற்காக பாரதிதாசன் அவர்கள் இத்தகு பாடலை எழுதியிருக்கிறார் என்பது உண்மை
பாரதிதாசன் ஒரு புரட்சிக்கர தமிழ் உணர்வாளராகக் தமிழ் உலகம் போற்றுகின்றது என்பதும் உண்மை.ஆனால் இலக்கியம்,தமிழுணர்வு வேறு அறிவியல் வேறு என்பதும் உண்மை.
இந்தியாவைப் பொறுத்தவரை பல்வேறுபட்ட இனக்குழுமங்கள்,பல்வேறுபட்ட மொழிகள்,பல்வேறுபட்ட கலை பண்பாடு எனக் கொண்டாலும,; வேறு எந்த நாடுகளிலுமே காணப்படாத ஒத்திசைவான ஆட்சி நடைபெறுகின்ற நாடாக இந்தியா இருந்து வருகின்றது.
தமிழர்,தெலுங்கர்,கன்னடக்காரர்,கேரளக்காரர் என எல்லோரையும் திராவிடர்கள் என்ற ஒரு இனக்குழுமத்துக்குள் கொண்டுவர ஆரம்ப காலங்களில் திராவிட முன்னேற்றக் கழகம் பெரும்முயற்சிகளைச் செய்த போதும் அது காலப் போக்கில் திராவிடர்கள் என்ற பின்னல் இழைகள் நெகிழ்ந்து தனித்தனி இழைகளாக வெளியே வந்துவிட்டன.
தமிழர்களல்லாத மற்றைய திராவிட இனக்குழுமங்களும் தமிழர்களை ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை.அதிலும் மலையாளிகள் தமிழர்களை எள்ளலாகவே பார்க்கிறார்கள்
திரைப்பட மேடைகளிலும்,பொது மேடைகளிலும் நாமெல்லாம் ஒன்று என்று பேசுவார்களே தவிர அது இதயத்தில்; இருந்து வருபவை அல்ல.
இந்த அனுபவத்தை நான் ஜேர்மனியில் பெற்று இருக்கிறேன்.தமிழர்களில் இலங்கைத் தமிழர்களை மலையாளிகள் ஒரு பொருட்டாகவே அவர்கள் கருதுவதில்லை.
மலையாள தமிழ் – நண்பர்களாக இருப்போரை வைத்துக் கொண்டு இதைக் கணிக்க முடியாது.
இதைவிட வட இந்தியர்களில் மிகப்பெரும்பான்மையானவர்கள் தமிழர்களை மதிப்பதே இல்லை.
இந்த நிலையில் தமிழர்களை வெறுக்கின்ற அனைவருக்குமாக நாங்கள் யார் தெரியமா சூரியனோடும்,சந்திரனோடும்,நட்சத்திரங்களோடும்,மேகங்களோடும் பிறந்தவரடா நாங்கள்,எங்களுக்குததான் அவை சொந்தம் என்பது போலவும் அவற்றுக்கும் தமிழுக்கும் தொடர்பு உண்டென்பது போலவும் ஆக்ரோசமாகத் தமிழர்களை உணர்ச்சிவசப்பட வைக்கவே பாரதிதாசன் அவர்கள் பாடியுள்ளார்.
இப்பாடலை வாசித்தறிந்து கொள்ளும் வடநாட்டவர்கள் அதை ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ளவில்லை.சூரியனும்,,சந்திரனும்,நட்சத்திரங்களும்,மேகங்களும் ஏன் நிலம்,நீர்,நெருப்பு,காற்று ஆகாயம் என்ற இயக்கசக்திகள்கூட தமிழர்களுக்கு மட்டுமல்ல உலகிற்கே அது பொதுச் சொத்து.
எமது என்று பாடி மகிழலாம்,கூட்டமாகச் சொல்லி மகிழலாம்,ஆகாயத்தை நோக்கி கையை உயர்த்தி உணர்ச்சிவசப்படலாம் ஆனால் அறிவியல் ரீதியாக,சிந்தித்தால் அது ஏற்புடையதல்ல.
மொழியின் தோற்றமே ஒலிதான்.அந்த ஒலிக்கு வடிவம் கண்டமையும்,கண்ட போது தமிழ்மொழியின் எழுத்துருவம் இருந்தது போல இன்றிருக்கும் எழுத்துரு இல்லை,ஏன் உச்சரிப்போ தொனியோ எழுத்துருப் பயணத்தில் வாழையடி வாழையாக ஒன்றாகவே இல்லவே இல்லை.
ஒவ்வொரு இனக்குழுமமும் ஒருவரோடு ஒருவர் தொடர்பை ஏற்படுத்திக் கொள்ளவும்,பார்க்கும்; பொருட்களை சுட்டிடவும் ஒலியெழுப்பியவை காலப் போக்கில் பொருட்களுக்கான பெயராக மாறின.ஒரு மனித கூட்டம் தாம் தமிழர்கள் என அவர்களே பெயர் வைத்தார்களா? ….. அல்லது இன்னொரு மனிதகூட்டம் வேற்று ஒலியெழுப்பும் மனிதர்களைப் பார்த்து தமிழர்கள் என்று பெயர் வைத்தார்களா? என்பது இன்னொரு விரிவான ஆய்வு.
ஓலியை ஒரு உருவகப்படுத்தலுக்குள் கொண்டு வந்து அது மொழியாகத் தோன்றுவதற்கு சுவாசப்பைகள்,குரல் நாண்கள்,எமது வாய்க்குள் இருக்கும் பற்கள்,,நாக்கு மேலன்னம்,கீழன்னம்,முரசுகள்,கன்னத்தின் உள்பகுதிகள்,இதழ்கள் என,சுவாசைப் பையின் காற்றினால் குரல் நாண்கள் அதிர அந்த அதிர்வை அவை மொழிக்கான ஒலியாக வெளியே வருகின்றது.
ஒரு உற்பத்திப் பொருளுக்கான மூலப்பொருளாக மேலே குறிப்பிட்ட உறுப்புக்கள் செயல்படுகின்றன.மொழி பேசுவதற்கு தொனி உறுதிக்கு பற்கள் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன.அதனால்தான் பல்லுப் போனால் சொல்லுப் போச்சு என்று சொல்லுதல் வழக்கத்தில் உள்ளது.
மொழி உருவானது அந்த மொழிக்கான இலக்கியத்தால் அல்ல.அது உடலின் செயல்பாடுகளில் ஒன்றாகும்.சிந்தித்தால் அதன் அறிவியல் தோன்றும்.
தமிழர்கள் தமது வாய்வழி ஒலியெழுப்பி சுட்டிய பொருட்கள் அதற்கான பெயரானது போல மற்றைய இனங்கள் சுட்டிய பொருட்கள் அதற்கான பெயரானது.அவர்ளின் ஒலியெழுப்பல் அவர்களின் மொழியாகியது.
தமிழர்கள் மரம் என்போம் ஆங்கிலேயர் றீ என்பார்கள,ஜேர்மனியர்கள் பவும் என்பார்கள்.உதாரணமாகக் கூறப்பட்ட மூன்று மொழிக்காரர்களின சுட்டல் அவரவர்களின் சுட்டல் பெயரானது.
எனவே பாரதிதாசன் அவர்கள் ஐயனாரிதனார் போல ஆரியர்களுக்கெதிராக தமிழர்களைத் தூண்டிவிடவே பொதுவானவற்றை தமிழர்களுக்கு மட்டுமே அவை உரித்தானவை போல தமிழர்கள் மகிழ்ச்சி கொள்ள வைப்பதற்காக பாடிய பாடலே இது.
தமிழர்களை அறிவியல் ரீதியாக வழிநடத்துவதைத் தவிர்த்து இவ்வாறு புளகாங்கித திசையில் வழிநடத்தியமை மன்னர் காலத்திலிருந்தே தொடர்கின்றது.
எனவேபாரதிதாசன் அவர்களின் இக்குறிப்பிட்ட வரிகள் அறிவியலுக்கு ஒரு போதும் ஒத்து வராததே.