கட்டுரைகள்

வியட்நாம் அதிபர் ஊழலால் பதவி விலகல் ! வியத்தகு பொருளாதார வளர்ச்சி வீழ்ச்சியுறுமா? … ஐங்கரன் விக்கினேஸ்வரா.

(தென் ஆசியாவில் ஆச்சரியம் ஊட்டும் வகையில் பொருளாதார வளர்ச்சியில் முன்னேறிய வியட்நாமில், கம்யூனிஷ்ட் கட்சியின் ஊழலால் அதிபர்
பதவி விலகி உள்ளார். வியக்க வைக்கும் வியட்நாம் என பேசப்பட்ட தேசத்தின் அபிவிருத்தி வீழ்ச்சியடைவதை தற்போது காணலாம்)
ஆசியாவில் இரண்டாம் உலகப் போருக்குப் பின் பாரிய
தடைகளைத் தாண்டி பொருளாதார, அபிவிருத்தி வளர்ச்சியில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய நாடுகளைத் தான் ஆசியாவின் அதிசயம் (Asian miracles) என்று அழைப்பார்கள்.
வியக்க வைக்கும் வியட்நாம் பொருளாதாரம்:
இந்த வகையில் இரண்டாம் உலகப் போருக்குப் பின் முதலாவதாக ஜப்பான், தாய்வான், அதன் பின்பு தென்கொரியா, சமீபத்தில் சீனா ஆகிய நாடுகள் தங்கள் நாட்டில் இருக்கும் பிரச்சனைகளைக் கடந்து உற்பத்தியில் மட்டும் அல்லாமல் ஏற்றுமதி சந்தையிலும் வளர்ச்சி பெற்றுள்ளன.
போரின் பின்னரான ஏழ்மையில் இருந்து 90 சதவீதம் வரை மீண்டு அபிவிருத்தியில் பெரிய சாதனை படைத்துள்ளன. போருக்குப் பின் உலகமயமாக்கல், வர்த்தக வளர்ச்சி, முதலீடுகள் என உலக நாடுகளின் பொருளாதாரம் வேகமாக வளர்ந்து. குறிப்பாக ஆசிய நாடுகளில் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி ஆகியவற்றை வைத்து மிகப்பெரிய வளர்ச்சி கண்டது.
ஒவ்வொரு வருடமும் சராசரியாக ஆசியச்சந்தையின் ஏற்றுமதி வர்த்தகம் இருபது சதவீதம் வளர்ச்சி கண்டது வரலாற்று உண்மை. இவ்வகையில் வியட்நாமின் பொருளாதாரம் கடந்த தசாப்தத்தில் வெளிநாட்டு முதலீடுகள் பல குவிந்தன. பெய்ஜிங்கிற்கும் வாஷிங்டனுக்கும் இடையே உறவுகள் முறிவடைந்ததால், சீனாவிற்கு மாற்றான நாடாக மாறியது.
ஊழலால் அதிபர் பதவி விலகல்:
ஆனால் தற்போது தென்னாசியாவில் வேகமாக வளர்ந்து வரும் வியட்நாமின் பொருளாதாரத்தை உலுக்கிய ஊழல் சர்ச்சையில் வியட்நாமின் அதிபர் பதவி விலகி உள்ளார். வியட்நாமின் அரசியல் ஸ்திரத்தன்மை குறித்து உயர் ஆளும் தலைவர்களிடையே கொந்தளிப்பும் கேள்விகளையும் எழுப்பியுள்ளது.
வியட்நாம் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் ஊழல் சர்ச்சையில் வியட்நாமின் ஜனாதிபதி வோ வான் தொங் (Vo Van Thuong) ராஜினாமா செய்தார். அதன் பின் துணை ஜனாதிபதி வோ தி அன் சுவான் (Võ Thị Ánh Xuân ) செயல் தலைவராக நியமிக்கப்பட்டார்.
வியட்நாம் நாடு ஏற்றுமதிகள் மற்றும் வெளிநாட்டு முதலீட்டை பெரிதும் சார்ந்துள்ளது. ஆனால் அதன் ஆளும் தலைவர்கள் அதிகாரத்தின் மீதான கட்சியின் பிடியை இறுக்கி, பரவலான ஊழலை நடாத்தி வருகின்றனர் என்ற குற்றச்சாட்டும் உள்ளது.
கம்யூனிச பொருளாதார மறுசீரமைப்பு:
குறிப்பாக இலத்திரனியல் மற்றும் கம்ப்யூட்டர்கள் போன்ற உயர் தொழில்நுட்ப தயாரிப்புகளின் உற்பத்தியில் அந்நிய முதலீட்டில், மற்றொரு “ஆசியப் புலி” பொருளாதாரமாக மாறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. வியட்நாமின் உற்பத்தியில் கிட்டத்தட்ட பாதி பன்னாட்டு நிறுவனங்களை உள்ளடக்கியதால், முதலீட்டாளர்களின் நம்பிக்கை உயர்ந்தது. கம்யூனிச ஆட்சியில் அதேவேளை ஊழலுக்கு எதிரான பிரச்சாரம் உள்நாட்டு வணிகங்களுக்கான சட்டவிரோத கட்டணங்கள் மற்றும் பிறசெலவுகளைத் தடுப்பதில் சில பலன்களை வழங்கியதாக பொருளாதார ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
ஆனால் தற்போதய அரசியல் ஊழல்களால், சலசலப்பைக் கொண்டு வந்ததுடன் அரசியல் நிச்சயமற்ற தன்மையை உயர்த்தியது. அத்துடன்
ஏற்றுமதி குறைந்ததால், பொருளாதார வளர்ச்சி 2022ல் 8% ஆகஇருந்த நிலையில் கடந்த ஆண்டு 5.1% ஆக சரிந்தது.
தற்போது ஆளும் கட்சிக்குள் நிலவும் போட்டிகளாலும், ஊழல் தொடர்புடைய தலைமையின் அதிகார துஷ்பிரயோகத்தாலும், வியட்நாமின் அரசியலில் இரண்டு ஆண்டுகளில் இரண்டாவது தலைவர் அதிபர் பதவியை ராஜினாமா செய்துள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
வியட்நாமின் பாரிய மோசடி வழக்கு:
வியட்நாமின் மிகப்பெரிய மோசடி வழக்கில் மரணதண்டனை விதிக்கப்பட்ட ரியல் எஸ்டேட் அதிபரின் தீர்ப்பு வியட்நாமின் ஊழல் எதிர்ப்பு பிரச்சாரத்தில் ஒரு திருப்புமுனையாகும். வணிகப் பெண் முகவரான ட்ரூங் மை லான், வியட்நாமின்ஹோ சி மின் நகரில் ஏப்ரல் 11, 2024 இல் நடந்த வழக்கு விசாரணையில் மரண தண்டனை விதிக்கப்பட்டார்.
ரியல் எஸ்டேட் அதிபர் 12.5 பில்லியன் டாலர்களை, கிட்டத்தட்ட $12.5 பில்லியனைப் கையாடியதாகக் குற்றம்சாட்டப்பட்டதால், அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
இதுவே வியட்நாமின் 2022 ஜிடிபியில் 3 சதவீதம், அதன்மிகப்பெரிய நிதி மோசடி வழக்காகும்.
வியட்நாமின் எதிர்காலத் தலைமை
அதிபர் வோ வான் தொங் விலகலை அறிவிப்பதில், கம்யூனிஸ்ட் கட்சியின் நற்பெயருக்கு ஒரு மோசமான முத்திரையை குத்தி விட்டன என்று அரச ஊடகங்கள் தெரிவித்தன.
தொங் 2011 முதல் கட்சிக்கு தலைமை தாங்கி 79 வயதாகும் கட்சியின் தீவிர ஆதரவாளராக இருந்தார். மேலும் இந்த மாற்றம் வியட்நாமின் எதிர்காலத் தலைமை எப்படி இருக்கும் என்பது தெளிவாகத் தெரியவில்லை.
வியட்நாமின் தலைவர்கள் நாட்டில் கருத்து வேறுபாட்டிற்கான வாய்ப்பை வெகுவாகக் குறைத்துள்ளனர். பல எரிசக்தி நிபுணர்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களை சிறையில் அடைத்தனர். இதற்கிடையில், “எரியும் உலை” என்று விவரிக்கப்பட்ட ஊழல் எதிர்ப்பு பிரச்சாரம் ஆயிரக்கணக்கான வணிகர்களையும் அதிகாரிகளையும் எரிச்சலடைய வைத்துள்ளது.
புதிய அதிகார மையம் :
வியட்நாமின் தலைவர்கள் 2026 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டைக் கூட்டவுள்ளனர். அதுவரை, அரசியல் வல்லுநர்கள் கூறுகையில், ஆதிக்கத்திற்காக வோ வான் தொங் இடத்தைப் பிடிக்க போட்டியாளர்கள் மத்தியில் அதிக கொந்தளிப்பு இருக்கலாம்.
சிங்கப்பூரின் ஐஎஸ்ஏஎஸ் – அரசியல் ஆய்வு நிலைய அறிக்கையின்படி, ஊழல் எதிர்ப்பு இயக்கம் வியட்நாமின் அதிகாரத்துவத்தை மிகவும் எச்சரிக்கையாக ஆக்கியுள்ளது.
புதிய ஜனாதிபதி தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகும், தெளிவான தலைமை திட்டம் அறிவிக்கப்படாவிட்டால், அரசியல் உட்பூசல்கள் 2026 வரைநீடிக்கும் என்று சிங்கப்பூரில் உள்ள ஐஎஸ்ஏஎஸ் ஒரு அறிக்கையில் கூறிப்பிட்டுள்ளது.
இதற்கிடையில், முதலீட்டாளர்கள் மற்றும் வியட்நாமின் பொருளாதார பங்காளிகள் நாட்டின் புதிய அரசியல் யதார்த்தங்களுடன் மாறி வாழ வேண்டும் என்றும் கோரியுள்ளனர்.
ஆயினும் நாட்டின் அதிபர் பதவி விலகலுக்கு வியட்நாமிய கம்யூனிஷ்ட் கட்சியின் ஊழலும், அதிகார துஷ்பிரயோகமுமே காரணம் என கூறப்படுகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.