உலகம்

சீன நிறுவனங்களுக்கு பொருளாதார தடை விதித்த அமெரிக்கா: வெளியான காரணம்

3 சீன நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

பாகிஸ்தானுக்கு ஏவுகணை தொழிநுட்பங்களை இரகசியமாக வழங்கியமைக்காக இந்த தடையை அமெரிக்கா விதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பாகிஸ்தானின் நட்பு நாடான சீனா பிரதானமாக ஆயுதங்கள் மற்றும் பாதுகாப்பு பொருட்களையும் வழங்கி வருகின்றது.

பொருளாதார தடை

இந்நிலையில், குறித்த நிறுவனங்கள் பாகிஸ்தானுக்கு நீண்ட தூர ஏவுகணைகளை வழங்கியுள்ளதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.

அதன்படி, சீனாவைச் சேர்ந்த Xi’an Longde Technology Development, Tianjin Creative Source International Trade மற்றும் Granpect Co. Ltd ஆகிய 3 நிறுவனங்களுக்கு எதிராகவே அமெரிக்கா பொருளாதார தடைகளை விதித்துள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.