உலகம்
கடந்த ஒரு வாரத்தில் நைஜீரியாவில் 192 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் சமீப காலமாக பயங்கரவாதிகளின் தாக்குதல்கள் அதிகரித்து வருகிறது. அவர்கள் அப்பாவி பொதுமக்களை பணய கைதிகளாக கடத்திச் சென்றும் மிரட்டல் விடுக்கின்றனர். எனவே பயங்கரவாதிகளை கட்டுப்படுத்த ராணுவ வீரர்கள் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்தவகையில் நைஜீரியாவின் வடகிழக்கு பிராந்தியத்தில் பயங்கரவாதிகள் முகாமிட்டு சதித்திட்டம் தீட்டுவதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அங்கு விரைந்த ராணுவ வீரர்கள் அவர்களது முகாமை குறிவைத்து தாக்குதல் நடத்தினர். இதில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 192 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். மேலும் 340 பேரை ராணுவம் கைது செய்தது. இதனையடுத்து அவர்களது கட்டுப்பாட்டில் இருந்த 62 பணய கைதிகளையும் ராணுவத்தினர் பத்திரமாக மீட்டனர்.