உலகம்
அமெரிக்க குடிமகனான பிரித்தானிய இளவரசர் ஹாரி – வெளியான பின்னணி
பிரித்தானிய இளவரசர் ஹாரி சொந்த நாட்டை விட்டு வெளியேறி அமெரிக்காவைச் சொந்த நாடாக அறிவித்துள்ளார்.
இளவரசர் ஹேரி தற்போது அமெரிக்க பிரஜை என்பதை இளவரசரின் பயண நிறுவனம் பிரித்தானிய அதிகாரிகளிடம் உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளது.
குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
ஹேரியும் மேகனும், அரச குடும்ப கடமைகளைக் கைவிட்டுவிட்டு ஊடகத் துறையில் ஈடுபட அமெரிக்காவுக்குச் சென்றனர்.4 ஆண்டுகளுக்கு முன்னர், இளவரசர் ஹேரி தனது மனைவி மேகனுடன் அமெரிக்காவின் தென் கலிபோர்னியாவில் (California) வசிக்க ஆரம்பித்தார்.
மேலும், ஹெரி அரச குடும்பக் கடமைகளைக் கைவிட்டதிலிருந்து அரச குடும்பத்தைக் குறைகூறி வருவதாக பல விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டிருந்தன.