ஈரானின் அணு உலைகளை இலக்கு வைக்கும் இஸ்ரேல் – ஈரான் கடும் எச்சரிக்கை
இராணுவ மோதல்களின் போது அணுசக்தி நிலையங்கள் ஒருபோதும் இலக்காக கருதப்படக்கூடாது என ஐ.நா அமைப்பு தெரிவித்துள்ளது.
இஸ்ரேலின் தாக்குதல் காரணமாக ஈரானின் அணு உலைகள் எவற்றிற்கும் பாதிப்பு ஏற்படவில்லை என சர்வதேச அணுசக்தி முகவர் அமைப்பு தெரிவித்துள்ளது.
நிலைமையை உன்னிப்பாக அவதானித்து வருவதாக தெரிவித்துள்ள அந்த அமைப்பு அனைத்து தரப்பினரும் கடும் நிதானத்தையும் பொறுமையையும் கடைப்பிடிக்கவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளது.இந்த தாக்குதலுக்கு இடையில்தான் தங்களின் அணு ஆயுத கொள்கையை மறுபரிசீலனை செய்ய போவதாக ஈரான் தெரிவித்துள்ளது.
அணு ஆயுதம் இல்லை என்ற கொள்கையை அந்த நாடு மறுபரிசீலனை செய்யும் என்று அறிவித்துள்ளது.
இந்நிலையில், நேற்று மத்திய ஈரானில் உள்ள இஸ்பஹான் மாகாணத்தில் ஏவுகணை தாக்குதல்கள் பதிவாகியுள்ளன. ஈரானுக்குள் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதை அமெரிக்க வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் உறுதிப்படுத்தி உள்ளார்.
ஈரானிய அரசுடன் தொடர்புடைய ஊடகங்கள் இஸ்பஹானில் வெடித்ததை உறுதிப்படுத்துகின்றன. ஈரானிய வான்வெளியின் முக்கிய பகுதிகள் மூடப்பட்டு உள்ளன.
அமெரிக்காவின் ஆலோசனையை மீறி ஈரான் மீது இஸ்ரேல் பதிலடி தாக்குதல் நடத்தியுள்ளது.