கதைகள்

“சிறுகதைஓடுகாலி” ….. சிறுகதை …. இரண்டாம் விசுவாமித்திரன்.

கோயில்ல பள்ளி எழுச்சி தோங்கிட்டுது. தேவாலயத்தில இருந்து மணியோச கேக்குது.

கொஞ்ச நேத்தைக்கு முந்தித்தான் பக்கத்து ஊர்ப் பள்ளில பாங்கு பறிஞ்ச. சாமக் கோழி

கூவுது. காகக் கூட்டம் கரயிது. ஊரு சனம் மௌ;ள மௌ;ள கண் முழிக்கிற நேரம்.

நித்திர உட்டு எழும்பி கண்ண ரெண்டு கையாலயும் கசக்கி உடுப்ப செரி செஞ்சி தலமுடிய ஒரு

சுத்துச் சுத்தி கொண்ட போட்ட பொறகு கட்டிலால எறங்கி கண்ணாடில அவட மொகத்தப் பாக்கா.

அவ ன்னம் கொஞ்ச நேத்தயால ஊட்ட உட்டு ரகசியமா காதலிச்சவனோட ஓடப் போறா. அத

நெனச்சிக்கிட்டு கதவத் தொறந்து வெட்டல எட்டிப் பாக்கா. ஆரு தெரியுமா? அவதான் நம்முட

சீனி வாத்தியார்ர பேத்தி.

வாத்தியார்ர மகளுக்கு ஒரு பொண்ணும் ஒரு பொடியனும். பொடிச்சிக்கி ப்ப இருபத்தி மூணு

வயசு நடக்குது. கழுவிப் போட்டுக் கை வெய்க்கனும். அப்பிடியான அழகு செற. தயிரு வெள்ள

நெறம். பேரு அனாமிகா. அனு ண்டுதான் எல்லாரும் அவவ கூப்பிர்ர. அப்பன்

அம்மைக்குத் தெரியாம அவ ஊட்ட உட்டுக் கௌம்புறா.

உடுப்ப மாத்திக்கிட்டு வந்து மண்டபத்த நோட்டம் போட்டா. பக்கத்து அறயில அம்மாவும்

அப்பாவும் நெல்ல தூக்கம். சாறனால போத்திக்கிட்டு தம்பி வெறாந்தயில

குப்புறப்படுக்கிறது தெரியிது.

சத்தம் வெராம கதவத் தொறந்து மௌ;ளவா மண்டபத்துக்க வந்து வாசலப் பாக்கா. நெலம் ன்னம்

வெளிக்கல்ல.

தாழ்வாரத்தில சுருண்டு படுத்துக் கெடந்த நாய் தலய ஒசத்திப் பாக்கிது. ராவு குளிச்சிட்டு

ரூடவ்ரத்தோடப் போட்ட பாவாட மாதாளஞ்செடில காயிது. ன்னம் ஒரு சொட்டு நேத்தயால

சனநடமாட்டம் தோங்கிரும். அதுக்குள்ள வெட்டக்கெறங்கிரணும் ண்டு அவட மனம் நெனைக்கிது.

கிடுகு வேலி.அந்த வேலிர ஓட்டைக்குள்ளால எட்டிப் பாத்தா. ரகசியமா அவவ வெளியூருக்குக்

கூட்டிக்கிட்டுப் போய் கலியாணம் செய்யிர ண்டு மொதல் நாள் ராவு சென்ன அரவிந்தன்

ன்னம் வெரக் காணல்ல. ஊட்டாக்கள் முழிச்சா என்ன நடக்கும் ண்ட பயத்தில திரும்பி அறைக்கு

வந்தா.

போண்;ல வெளிச்சம் தெரிஞ்சிச்சி. படிச்சிப் பாத்தா. அரவிந்தன் கேத்தடிலயாம்.

உடுப்பு கழுத்துச் சங்கிலிஇ ஒரு சோடி மோதிரம். எல்லாத்தயும் தோள் பேக்கில போட்டு

எடுத்துக்கிட்டா. வெட்டல வந்து மௌ;ளவா கதவச் சாத்தினா. நாய் எழும்பி நிண்டு அண்ணாந்து

பாக்கிது. மாதாளஞ் செடில காஞ்ச பாவாட தரயில உழுந்து கெடக்கிது. கெணத்தச் சுத்தி நிண்ட

வாழமரத்திர சருகுகள் சரசரக்குது. தூரத்தில வாகனம் போற சத்தமொண்டு கேக்குதுரூபவ் நெஞ்சி

படபடக்குது. கேத்தடிக்கு வாறா.

வாகனத்தில ஏறின ஒடன அரவிந்தனோட உசுப்பாம ஓர்ற அவட பயணம் தோங்கிட்டுது.

அவனோட அவக்கு மூணு வருசமா தொடுப்பு. எப்பிடிண்டான கலியாணம் முடிப்பன் ண்டு வாக்குத்

தந்தவன். அவனோடதான் ஊர உட்டு ஓடிப்போறா.

தேவையான சாமானெல்லாம் இரிக்கா?

அரவிந்தன் அவள்ர காதுக்குள்ள கேட்டான். ஓம் ண்டு தல

அசஞ்சிச்சி.

றைவரு ஒண்டும் பேசாம அவக சென்ன மாதிரி வாகனத்த கொண்டு போறான்.

அரவிந்தன் மௌ;ளவா அவட கையப் புடிச்சான். அவக்கு அது புதுசில்ல. அவனோடப் பழகின

காலத்தில கனக்கத் தெரம் ப்பிடி நடந்திரிக்கான். அவட அப்பா ஊர்ல ல்லாத நெலமயாப்

பாத்து ஊட்ட நடுச்சாமத்தில அம்மாக்குத் தெரியாம சந்திச்சிரிக்காக. செல நேரத்தில தப்பு

நடக்கப் பாத்தும் இரிக்கி. ஆனா ப்ப கைய வெலக்கி எடுத்திட்டா.

கடக்கரப் பக்கமா வண்டி போகுது. மோடு பள்ளமான கெறவல் ரோட்டு. அடம்பன்

கொடிகளுக்குள்ள சோடி சோடியா மொயல் கூட்டம் தெரியிது. ரோட்டு ஓரத்துல தொட்டம்

தொட்டமா குருத்து மணல் குவிஞ்சி கெடக்குது. ரெண்டொரு ஆக்கள் நடந்து போறதும் வெளங்குது.

ன்னம் தூரம் போகணுமா? அவட லேசான கொரல்.

ல்ல. பக்கத்து ஊரா?

ஓம் ண்டு தலய அசச்சான்;.

எங்க ஆர்ர ஊட்ட போறம் ண்ட வெசயம் றைவருக்கு தெரிஞ்சிரப் பொடா ண்டு ரெண்டு

பேரும் நெல்ல கவனம்.

நெனச்ச எடத்தில வாகனத்தில இருந்து எறங்கி காசக் குடுத்து றைவர அனுப்பினாக.

அரவிந்தன்ர கூட்டாளிர ஊடு தெரியிது.

அங்க பத்திரமா வந்து சேந்தாக.

அனாமிகாவோட அரவிந்தன் வாற வெசயம் மொதல்நாளே அவகளுக்குத் தெரியுமென்டதால

ஆரவாரமில்லாம வேலவெட்டி நடக்கிது.

அனாமிகாவுக்கு பொறம்பான தனி அற. அரவிந்தனுக்கு வேற அற. அனாமிகா குளிச்சி

வெளிக்கிட்டு சாடயா அலங்கரிச்சி வெட்டல வந்தா.

ஒண்டா இருந்து எல்லாரும் காலச்சாப்பாடு சாப்பிட்டாக. அனாமிகாக்கு சாப்பாடு

எறங்கல்ல. அரவிந்தனுக்கிட்ட செல்லிப் போட்டு அறைக்குள்ள போய் கட்டிலில்ல

கெளிஞ்சா. தூக்கம் வெரல்ல. ஊட்டு நெனப்புத்தான் வந்திச்சி.

அப்பாவி அம்மாவும் கறார்த்தனமான அப்பாவும் ஒடஞ்சிபோய் செவர்ல சாஞ்சிக்கிட்டு

கொளர்ரது வெளங்கிச்சி.

பொள செஞ்சிட்டம் ண்டு அவட மனசி குத்திச்சி. சலிப்பு வந்திச்சி. தலவாணிக்குள்ள

மொகத்தப் பொதச்சிக் கொளறினா.

அரவிந்தனப் பத்தி அம்மாவோட கதச்சது அவக்கு ஞாபகம் வந்திச்சி..

அப்பா கடசி வெரயும் எணங்க மாட்டாரு. அம்மா

திட்டவட்டமாச் சென்னா.

நாமளாத் தேடி நல்லதாப் பாத்து கட்டிவெய்கிற வெரைக்கும் பொறுமயா இரிக்கட்டும்.

அப்பா சென்னாராம்.

அப்பாவப் பத்தி அம்மாக்கு நெல்லாத் தெரியும். ஆள் செரியான உடும்புப் புடி. பாவம்

அம்மா. என்ன பாடோ ண்டு அனாமிகா கவலப் பட்டா.

ஆனாமிகா ல்லாத ஊடு அவ கண் முன்னால வந்து நிண்டது.

அனாமிகாட அறக் கதவு தொறந்து கெடந்திச்சி. தாய்க்காரிக்கி சின்னொரு ஐமிச்சம். அனு

ண்டு கூப்பிட்டுக்கிட்டு உள்ளுக்குப் போனா. மகளக் காணல்ல. தல சுத்திச்சி.

பதறியடிச்சிக்கிட்டு ஊடு முழுக்கத் தேடினா. வெட்டல வந்து பொளக்கடப் பக்கம் போய் பாத்தா.

கிணத்துக்கயும் எட்டிப் பாத்தா. புள்ள ஒரு எடத்திலயும் ல்ல.

அவக்கு மௌ;ள மௌ;ள வெளங்கத் தோங்கிச்சி.

கண்ணால தண்ணி வந்திச்சி. ஒரு சொட்டுக் கொளறினா. முந்தானையால மொகத்தத் தொடச்சா.

ஒருத்தருக்கொருத்தர் விரும்பினா கட்டிக் குடுத்துட்டு வேலயப் பாக்கணும். புரிசன்ல

கொற சென்னா. வயசிக்கி வந்த கொமருப்

புள்ள. தாய்தான் கவனமாக இரிக்கணும் புரிசன் மறுகத கதச்சாரு. .

அனாமிகாட ஊட்டுக்கு அரவிந்தன் ராவயில அடிக்கடி வாற. அப்பிடி ரகசியமா வந்து

போறதப்பத்தி சாட மாடயா தாய்க்குத் தெரியிம்.

பொம்புளப் புள்ளகளோட தொடர்பு இருந்தா இதெல்லாம் நடக்கிற வளம. அல்லயல்ல

இரிக்கிற பொம்புளகளும் தாய்க்கார மனுசிக்கிட்ட இதப்பத்தி ஒழிச்சி மறச்சி

கதச்சிரிக்காக. பொறுப்பான செல பொம்புளகள் அனாமிகா ஓடுகாலி ண்டு பேரு வாங்குவா

ண்டு தாய்ர மொகத்தில அடிச்சாப்போல செல்லியும் இரிக்காளுகள்.

மகளுக்கிட்ட இதயெல்லாம் அவ செல்லல்ல. மகள்ர கொணம் எப்பிடிண்டு அவக்கு நெல்லாத்

தெரியிம். ஏடாகூடமா என்னயும் நடந்தா வந்திருமா ண்டு கவலப்பட்டா. ரெண்டொரு நாளக்கிப்

பாப்பம் பொறகு செல்லுவம் ண்டு முடிவெடுத்தா. அதுக்கெடயில மாறி உழுந்திட்டு.

அரவிந்தனோட ஒறவா இரிக்கிற வெசயம் அப்பாக்குத் தெரிஞ்சா என்ன நடக்கும் ண்டு

வெளங்கி அந்தப் பயத்திலதான் வெட்டைக்கெறங்கிப்; போயிருக்கா ண்டுதான் தாய் நெனச்சா.

நடந்தது நடந்து முடிஞ்சி. இனி மத்த வேலயப் பாப்பம் ண்டு முடிவெடுத்தா.

அரவிந்தன்ர சொந்தக்காரப் பொட்ட ஒண்டு மலநாட்டுப் பக்கம் இருந்து அனாமிகாவோட

இருந்திருந்து கதைக்கிறது அவக்குத் தெரியிம்.

நேத்து அந்தப் பொட்டயோட போண்ல மகள் கதச்சது நெனப்பு வந்திச்சி.

எல்லாம் செரி. நாளைக்கு வாற திட்டம் இரிக்கி.

ப்பிடி மகள் கதச்சது அங்க ஓடிப் போறதுக்குத்தான் ண்டு அவட மனம் செல்லிச்சி. அங்கான்

போயிரிக்கணும்.

அவட சின்னம்மாட மகளும் அந்தப் பகுதிலதான் இரிக்கா. அவவ போண்ல கூப்பிட்டு வெசயத்தச்

சென்னா. பொடியன்ட பேரயும் கொஞ்சம் வெளக்கமா எடத்தயும் செல்லி அங்க போய்

வெசயத்தப் பாக்கச் சென்னா.

அவ நெனச்சது செரி. மகள் இரிக்கிற எடத்தக் கண்டு புடிச்சாச்சி.

புரிசனோட கலந்து பேசினா.

நான் மகனோட மலநாட்டுல சின்னம்மாட ஊட்ட போய் நெலம என்னெண்டு பாத்திட்டு வாறன்.

பொறகு மத்த வெளக்கத்தப் பாப்பம்.

புரிசன் எல்லாத்துக்கும் ஒத்துக்கிட்டாரு.

மகனோட பெரயாணம். மனசெல்லாம் மகள்ர கவல.

டவுண்ல எறங்கி சின்னச் சின்ன கெறவல் ரோட்டால நடந்து போறா. முந்தி யொருக்கா

சின்னம்மாட ஊட்ட வந்திரிக்கா. அங்கதான் ப்ப போய்ச் சேந்திரிக்கா.

வெப்பிசாரம் தாங்க ஏலாம முந்தானயால மொகத்தத் தொடச்சா. நடந்த எல்லாத்தயும்

கொளறிக் கொளறிக் கொட்டினா. புள்ள இரிக்கிற எடத்த தெரிஞ்சதால கொஞ்சம் நிம்மதி.

ஊட்ட கோள் எடுத்து புரிசனோட வெவரமா சென்னா.

இனி ஒண்டும் செய்ய ஏலா. நடந்தது நடந்ததுதான். ஞ்ச வந்து வெசயத்த கொளப்பி உட்ராதீங்க.

ஒண்டயும் ஆருக்கிட்டயும் செல்லிரயும் போடா. அக்கச்சாட ஊட்ட இருந்து ஒங்களுக்குச்

சாப்பாடு வெரும்.

குசினி மூலைக்க குறுனல் இரிக்கி. அத எடுத்து தண்ணிய தவுட்டோடக் கலந்து கூட்டுக்குள்ள

நிக்கிற கோழிக் குஞ்சுகளுக்கு சாப்பாடு வெய்க்க மறந்திராதீங்க..

புரிசன் ஒண்டும் பேசல்ல. எல்லாத்தயும் கவனமா கேட்டுக்கிருந்தாரு.

என்ன சென்னாலும் மறுவாட்டி எதுத்துக் கதைக்கிறவரு ஒண்டும் பேசாம கேட்டுக்கிருந்தது

அவக்குப் பெரிய புதினமா இரிந்திச்சி.அதுகள ப்ப நெனச்சிப் பாக்கிறதுக்கு அவக்கு

நேரமா இரிக்கி.

கெதியா வெளிக்கிட்டு மகளப் பாக்கப் போறா.

தாயும் மகளும் ஒருத்தர ஒருத்தர் கண்டுக்கிட்டாக. கட்டிப் புடிச்சிக் கொளறினாக. ஒரு வாத்த

செல்லிட்டு வந்திரிக்கலாம் ண்டு மனச மனசாக்கி தாய் சென்னா.

வெள்ளம் தலைக்கி மேலால பெய்த்து. இனி; என்ன செய்ர.

எல்லாரும் சேந்து ஒரு முடிவெடுத்தாக. கோயிலுக்குப் போய் மாலமாத்தி தாலி கட்டி

கலியாணத்த முடிச்சாக.

பக்கத்தில ஊடொண்ட வாடகைக்கு எடுத்து புதுச் சோடிய தங்க வெச்சாக. படுக்க குளிப்பு சமயல் ண்டு

நெல்ல வசதியான ஊடு.

ஓடுகாலி ண்டு பட்டம் சூட்றதும் ஊரால வெலக்கி வெய்க்கிறதும் பழய காலம். மொலப்பால்ல

குளிச கரச்சிக் குடிச்ச காலம் பெய்த்து. ப்ப அதெல்லாம் செரிப்பட்டு வெராது ண்டு

ஓடிப்போன மகளுக்கு தைரியமா தாய்க்காரி கலியாணம் செஞ்சி வெய்க்கா. அந்த வெசயம்

ஊர்ல பரவுது.

ஆனா அவக்கு ஒரு பெரச்சின. ஊர்ல என்ன மொகத்தோட போய் முழிக்கிற?. ஓடுகாலி ண்டு

பேர மாத்த ஏலுமா? அந்தக் கவலயும் மனுசிட மனசில ல்லாம ல்ல.

மகனோட ஊருக்குப் போறா.

வாகனத்தில அவக்குப் பக்கத்தில இருந்த மகன் திரும்பித் திரும்பி அம்மாவப் பாக்கிறத அவ

கவனிக்கா.

அக்கா ஊருக்குத் துரோகியாம். ஓடுகாலியாம். போண்ல கெடக்கிது

மகன் சென்னத காதில வாங்கினாலும் அவ ஒண்டும் பேசல்ல.

ஊருக்குள்ள பலதும் பத்தும் கதைக்கிறாக. பத்திரமா வந்து சேருங்க ண்டு புரிசனுக்கிட்ட இருந்து

வந்த கததான் அவவ தூக்கி வாரிப் போட்டிச்சி.

ஒரு மாதிரியா ஊட்ட வந்து சேந்தா.

ஊடு பரிதாபமா இருந்திச்சி. கண்ணாடி ஜன்னல்கள ஆரோ கல்லால எறிஞ்சி ஒடச்சிரிக்காக.

ராவு கொஞ்சப் பொடியனுகள் வந்து செஞ்ச வேல

புரிசனுக்கிட்டயிருந்து வெளக்கம் கெடைக்கிது.

வாப்பா வாத்தித் தொழில் செஞ்சி பென்சன் எடுத்தாலும் நான் வசதியில்லாமதான் இருந்த.

எனக்கி முப்பது வயசி தாண்டியும் ஒருத்தனும் கட்ட வந்தானில்ல. ஆனா ந்த மனிசன் வந்துதான்

என்னப் பாரமெடுத்தாரு.

அத நெனச்சிப் பாக்கா.

ஓடுகாலி ண்டு பட்டம் வாங்கிறது பொம்புளப் புள்ளகள். அவளுகள்ர ஊட்ட கல்லெறிஞ்சி

கண்ணாடிய ஒடைக்கிறது எளந்தாரிமாரு.

என்ன ஒலகம்டா இது.

ரோட்டோரத்தில நிண்ட நாயொண்டு செவரு மூலயில ஒரு கால ஒசத்தி மூத்திரம்

புஞ்சிட்டு போகுது.

 

;.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.