உலகம்

முன்னாள் ஜனாதிபதி டுடெர்டேவை சர்வதேச நீதிமன்றத்தில் ஒப்படைக்க மாட்டேன் – பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி மார்கோஸ்

பிலிப்­பைன்ஸின் முன்னாள் ஜனா­தி­பதி ரொட்­ரிகோ டுடெர்­டேவை சர்­வ­தேச குற்­ற­வியல் நீதி­மன்­றத்­திடம் தான் ஒப்­ப­டைக்கப் போவ­தில்லை என அந்­நாட்டு ஜனா­தி­பதி பேர்­டினன்ட் மார்கோஸ் கூறி­யுள்ளார்.

2016 முதல் 2022ஆம் ஆண்டு வரை பிலிப்­பைன்ஸின் ஜனா­தி­ப­தி­யாக பதவி வகித்­தவர் ரொட்­ரிகோ டுடெர்டே. போதைப்­பொ­ருட்­களை ஒழிப்­ப­தற்­காக  டுடெர்டே நடத்­திய போராட்­டத்தின் போது பல்­லா­யி­ரக்­க­ணக்­கானோர் பொலி­ஸாரால் கொல்­லப்­பட்­டி­ருந்­தனர்.

ஐக்­கிய நாடு­களின் நீதி­மன்­ற­மான சர்­வ­தேச குற்­ற­வியல் நீதி­மன்றம் (ஐ.சி.சி) இது தொடர்­பாக விசா­ரணை நடத்­து­கி­றது.

இந்­நி­லையில், ‘டுடெர்­டேவை கைது செய்­வ­தற்கு சர்­வ­தேச நீதி­மன்றம் பிடி­வி­றாந்து பிறப்­பித்தால் அவரை அந்­நீ­தி­மன்­றத்­திடம் ஒப்­ப­டைப்­பீர்­களா’ என நேற்­று­முன்­தினம் நடை­பெற்ற, வெளி­நாட்டுச் செய்தியா­ளர்­க­ளு­ட­னான சந்­திப்­பின்­போது ஜனா­தி­பதி பேர்­டினன்ட் மார்­கோ­ஸிடம் கேட்­கப்­பட்­டது.

அப்­போது ‘இல்லை’ என மார்கோஸ் பதி­ல­ளித்தார்.

‘அவர்கள் அனுப்பும் பிடி­வி­றாந்தை நாம் அங்­கீ­க­ரிக்­க­மாட்டோம். பிலிப்­பைன்ஸில் சர்­வ­தேச நீதி­மன்­றத்தின் ஆதிக்­கத்தை நிரா­க­ரிக்­கின்­ற­போதும், சர்­வ­தேச சட்­டங்­க­ளுக்கு உட்­பட்டே இருப்போம்’ என அவர் கூறினார்.

2016ஆம் ஆண்டு போதைப்­பொ­ருட்­க­ளுக்கு எதி­ரான நட­வ­டிக்­கை­களை அப்­போ­தைய ஜனா­தி­பதி டுடெர்டே ஆரம்­பித்தார்.

மேற்­படி நட­வ­டிக்­கை­க­ளின்­போது, இடம்­பெற்ற மனித உரிமை மீறல்­களை நெதர்­லாந்தின் ஹேக் நக­ரி­லுள்ள சர்­வ­தேச குற்­ற­வியல் நீதி­மன்றம் ஆரம்­பித்­ததை அடுத்து, அந்­நீ­தி­மன்­றத்­தி­லி­ருந்து பிலிப்­பைன்ஸை 2019 ஆம் ஆண்டு டுடெர்டே விலக்­கிக்­கொண்டார்.

இவ்­வ­ழக்கின் முறை­யான விசா­ர­ணைகள் 2021 செப்­டெம்­பரில் ஆரம்­ப­மா­கின.  எனினும், போதைப்­பொ­ருட்­க­ளுக்கு எதி­ரான போரின்­போது மனித உரிமை மீறல்கள் தொடர்பில் தான் விசா­ரணை நடத்­து­வ­தாக பிலிப்பைன்ஸ் கூறி­ய­தை­ய­டுத்து, சர்­வ­தேச நீதி­மன்ற விசா­ரணை இடை­நி­றுத்­தப்­பட்­டது.

2022 ஆம் ஆண்டு பேர்­டினன்ட் மார்கோஸ் ஜனா­தி­ப­தி­யாக பத­வி­யேற்­றி­ருந்தார்.

அதன்பின், இவ்­வ­ழக்கு விசா­ர­ணையை மீண்டும் நடத்­து­மாறு ஐ.சி.சி.யின் பிர­தம வழக்­குத்­தொ­டுநர் கோரினார். அதற்கு 2023 ஜன­வ­ரியில் நீதி­ப­திகள் அனு­மதி அளித்­தனர்.

இத்­தீர்­மா­னத்­துக்கு எதி­ரான பிலிப்பைன்ஸ் மேன்­மு­றை­யீடு செய்­த­போ­திலும் அதில்  தோல்­வி­ய­டைந்­தது.

போதைப்­பொ­ருட்­க­ளுக்கு எதி­ரான டுடெர்­டேவின் நடவடிக்கைகளின்போது 6,000க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர் என பிலிப்பைன்ஸ் அரசாங்கத்தின் உத்தி யோகபூர்வ தரவுகள் தெரிவிக்கின்றன. எனினும் இந்த எண்ணிக்கை 12,000 முதல் 30,000 வரை இருக்கலாம் என ஐ.சி.சி. வழக்குத்தொடுநர்கள் கூறுகின்றனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.