இஸ்ரேலை தாக்கியதும் ஈரான் மறைமுக யுத்தத்தை நேரடி மோதலாக மாற்றியுள்ளதும்! … சங்கர சுப்பிரமணியன்.
1991 வளைகுடா யுத்தத்தைத் தொடர்ந்து மேற்கு ஆசியாவில் முதல் நாடாக இஸ்ரேலை தாக்கியதால் எல்லை மீறியிருப்பதை ஈரான் உணர்ந்துள்ளது. அதாவது தன் திறமையை காட்டுவதே இத்தாக்குதலின் நோக்கமாகும். இஸ்ரேல் திரும்பத் தாக்கும் என்பதும் ஈரானுக்கு
தெரியும்.
இஸ்ரேல் நேரடியாகத் தாக்கினால் அது எளிதாக யுத்தத்திலிருந்து விலகிச் செல்ல முடியாது. சமீபத்திய தாக்குதல் ஈரானின் தாக்குதல் முறை எப்படி இருக்கும் என்பதை இஸ்ரேலுக்கு காட்டவும் நேரடி மோதலுக்கு தயார் என்பதைச் சொல்வதுமாகும்.
டமஸ்கஸில் ஏப்ரல் முதல் தேதி ஈரான் தூதரக வளாகத்தின்மேல் தொடுக்கப்பட்ட வான் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் முகமாக ஞாயிறு இரவன்று சரமாரியாக ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் ஈரான் தாக்குதல் நடத்தியது. 99 சதவீதம் ட்ரோன்களும் ஏவுகனைகளும் நடுவானில் தடுக்கப்பட்டதாக இஸ்ரேல் கூறுகிறது.
இதில் இஸ்ரேல் வான் படைக்கு உதவிய அமெரிக்கா இஸ்ரேலை பாராட்டியதோடு அமெரிக்க இஸ்ரேல் பாதுகாப்புக்கு இரும்பு கவசமாக இருந்து செயல்படும் என்பதையும் வலியுறுத்தியுள்ளது. ஈரானைப் பொருத்தவரை இது இத்தோடு முடிந்தது என்றும் ஆனால் இஸ்ரேல் திருப்பித் தாக்கினால் ஈரான் முழுப்பலத்துடன் தாக்குதலை நடத்தும் என்றும் சபதம் பூண்டுள்ளது.
நிலைமை மிகவும் துரிதமாக மாறும் நிலையில், 2003 மேற்கு ஆசியாவில் அமெரிக்காவின் ஈராக் படையெடுப்பைத் தொடர்ந்ததில் இருந்து குறைந்த பட்சம் மூன்று விதமான நடவடிக்ககளை இப்பெரும் பிரச்சினை வெளிக்கொண்டு வந்திருக்குறது.
ஒன்று:
அமெரிக்காஅதிபர் ஜோ பைடனின் திட்டமான மேற்கு ஆசிய பிரச்சினையை தடுக்கலாம் என்பது கதைக்கு உதவவில்லை. இஸ்ரேலில் அக்டோபர் 7, 2023 ஹமாஸ் தாக்குதல் நடத்தியதில் இருந்து தன் விருப்பம்போல் இஸ்ரேல் அப்பகுதியில் இராணுவ நடவடிக்கை எடுக்க உதவுவதற்கு ஒரு திட்டம் வகுத்திருந்தார்.
அதேசமயம் இஸ்ரேல் நடவடிக்கையால் அப்பகுதியில் போர் மூள்வதைத் தடுக்க பேச்சுவார்த்தை மூலமும் முயன்று கொண்டிருந்தார். இஸ்ரேல் கோபத்தோடு ஆற்றிய செயல் கட்டிடங்களை தரைமட்டமாக்கியதுடன் காசா பகுதியின் 23 லட்சம் மக்கள் தொகையில் 90 சதவிகிதத்தினரை புலம்பெயர வைத்துள்ளது.
இதில் 33000 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளார்கள். இதில் அதிகமாக கொல்லப்பட்டவர்கள் பெண்களும் குழந்தைகளும் ஆவார்கள். ஆனால் இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கை காசாவுடன் நின்றுவிடவில்லை. இது வான் தாக்குதலை சிரியா மற்றும் லெபனான் மீது மட்டுமின்றி குறிப்பாக ஈரான் மற்றும் அதன் பினாமிகள் மீதும் நடந்துள்ளது.
ஈரான் பல மூத்த தளபதிகளை இஸ்ரேல் சிரியா மீது நடத்திய தாக்குதலில் இழந்துள்ளது. இதில் முகம்மது ரேசா சகேடி என்ற தளபதி டமஸ்கஸ் தூதரக குண்டு வீச்சில் கொல்லப்பட்டார்.
இந்த போர் முழுக்க அமெரிக்கா தொடர்ந்து இஸ்ரேலுக்கு ஆயுதங்களை வழங்கிக் கொண்டிருந்ததுடன் யேமன் கௌதிஸுக்கு எதிரான இராணுவ பரப்புரையையும் செய்து வந்தது. இந்த கௌதிஸ் செங்கடலில் பாலஸ்தீனியருடன் இணந்து கப்பல்களை குறிவைத்தனர். அதிபர் பைடன் இஸ்ரேலுக்கு வழங்கும் ஆதரவுக்கு தடை ஏற்படாமல் அப்பகுதியின் சூட்டை தணிக்க முயன்று கொண்டிருந்தார்.
அபடோபர், 7 தாக்குதல் நடந்து ஆறு மாதங்களுக்குப் பின்னும் காசா போர் முடிந்தபாடில்லை. ஈரான் இஸரேலைத் தாக்கியதைத் தொடர்ந்து மற்ற பகுதிகளுக்பும் போர் சென்றடைந்திருக்கிறது.
இரண்டு:
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெடனியாகு ஒரு சிக்கலில் இருக்கிறார். இஸரேலின் பாதுகாப்புக்கு உறுதிகூறித்தான் தன் அரசியல் வாழ்ககையை நிலைப்படுத்தினார். இருப்பினும் இஸ்ரேல் வரலாற்றில் ஏற்பட்ட அக்டோபர், 7 அன்று நடந்த பெரிய தாக்குதல் அவரது பார்வையை வெளிக்கொண்டு வந்துள்ளது. காசா சென்றவர் ஹமாஸை அகற்றிவிடுவதாக
உறுதியளித்தார்.
ஹமாஸை கலைப்பதென்பது அருகாமையில் இல்லாதபோதும் இன்னும் அக்டோபர் 7ல் சிறை பிடித்த 140 பேரை போர்க்கைதிகளாக வைத்திருக்கிறார்கள். பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் இஸ்ரேல் மீது இன அழிப்பு வழக்கு இருப்பதால் ஹமாஸுடன்
பேச்சுவார்த்தை மூலம் ஒரு ஒப்பந்தம் செய்து குறைந்தபட்சம் சில போர்க் கைதிகளையாவது விடுவிக்க நடவடிக்கை எடுக்கும்படி உள்நாட்டு அழுத்தம் அதிகரித்துக் கொண்டிருக்கிறது.
இப்போது நெடனியாகு ஈரான் தாக்குதலையும் சேர்த்து கையாள வேண்டியுள்ளது. ஈரான் தாக்குதலை நெடனியாகு தான் விரும்பியதை நிறைவேற்ற ஒரு வாய்ப்பாக பயன்படுத்தலாம் என்று பலர் சொல்கிறார்கள். ஈரானை பலமாக தாக்கி அமெரிக்காவின் கவனத்தை போரில் திருப்புவதுடன் பிராந்திய மற்றும் உலகின் ஆதரவைப் பெறலாம் என்றும் எண்ணுவதாக சொல்கிறார்கள்.
இஸ்ரேல் திரும்பவும் ஆட்டத்தை தொடரலாம். ஆனால் அவரது நாடு ஆறு மாதங்களுக்கும் மேலாக காசாவுடன் போரில் இருக்கிறது. ஈரானுடன் நேரடி யுத்தம் வடக்கு எல்லையில் ஹெஸ்பொல்லலாவுடன் முழுமையான யுத்தமாக மாறுவதுடன் மேல் கலிலி பகுதியிலிருந்து ஏற்கனவே 60000 இஸ்ரேலியர்கள் இடம்பெயர்ந்துள்ளார்கள்.
அதிபர் நெடினியாகுவை எதிர் நோக்கி இருக்கும் கேள்வி இஸ்ரேலும் அதன் மக்களும் அத்தப்பகுதியில் நாட்டின் மிகவும் பலம் வாய்ந்த எதிரியுடன் நீண்டகால யுத்தம் செய்ய தயாராக இருக்கிறோமா என்பதாகும். அமெரிக்க அதிபர் பிராந்திய யுத்தத்தை தடுப்பதற்காக ஏற்கனவே மறு தீர்வாக இராஜதந்திர நடவடிக்கைக்கு முயன்று கொண்டிருக்கிறார்.
ஈரானின் ஏவுகணைகள் இஸ்ரேலிய மண்ணைத் தாக்கியபிறகு நெடனியாகு பதிலடி கொடுக்காவிட்டால் அவர் மேலும் நம்பகத்தன்மையை இழப்பதுடன் ஈரான் வெற்றியுடன் செல்லும். பதிலடி கொடுத்தால் தொடர்ந்த யுத்தத்துக்கு வழிவகுக்கும். ஆதலால் அவர் கடினமான முடிவை எடுக்க வேண்டும்.
மூன்று:
ஈரான் யுத்தத்தை நீட்டிக்க தயார் என்று சரியான தகவலை கொடுத்துள்ளது. ஜனவரி 2020ல் குவாசிம் சொலைமனி அமெரிக்காவால் ஈராக்கில் கொல்லப்பட்டபோது அமெரிக்கர்களுக்கு தாக்குதலுக்கு தயாராக வேண்டிய அவகாசத்தை கொடுத்தபின் ஈராக்கிலுள்ள அமெரிக்க இராணுவ தளங்கள் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதலை நடத்தியது.
ஜெனரல் சய்யத் ரேசா மௌசவி டிசம்பரில் சிரியாவில் கொல்லப்பட்டபோது ஈரான் எரிபிலில் உள்ள ஒரு கட்டிடத்தின் மீதும் ஈராக்கின் குர்திஸ்தான் மீதும் தாக்குதலை நடத்தியது. இந்த தடவை 300 ட்ரோன்களையும் டஜன் கணக்கில் சீர்வேக ஏவுகணைகளயும் மற்றும் பெருந் தொலைவிற்கு பாயும் ஏவுகணைகளையும் தம் நாட்டிலிருந்து சரியாக இஸ்ரேலை குறிவைத்து பெரிய தாக்குதலை தேர்ந்தெடுத்தார்கள். இஸ்ரேலின் கூற்றுப்படி பல ஈரானின் ஏவுகணைகள் நெகேவிலுள்ள வான்படைத் தளத்தை தாக்கியுள்ளது.
இதுதான் முதல் தடவையாக ஈரான் நேரடியாக இஸ்ரேலை தாக்கியுள்ளது. 1991 வளைகுடா போருக்குப்பின் முதல் தடவையாக இந்தப் பகுதியிலுள்ள ஒரு நாடு இஸ்ரேல் மீது தாக்குதலை நடத்தியது. ஈரானின் ஒரு குறிக்கோள் அதன் திறனை நிரூபிக்க வேண்டும் என்பதுதான். ஆனால் இஸ்ரேல் மீது நேரடி தாக்குதல் நடத்தியதன் மூலம் ஈரான் எல்லை மீறியுள்ளது என்பதை தெரிந்திருக்க வேண்டும்.இஸ்ரேல் அநேககமாக திருப்பித் தாக்கும் என்பதையும் அறிவார்கள்.
இஸ்ரேல் ஈரானை நேரடியாகத் தாக்கினால் அது அப்போரிலிருந்து எளிதில் கடந்து செல்ல முடியாது. ஆகையால் நள்ளிரவில்
இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியதன் மூலம் ஈரான் அவர்களின் எதிரிகளுக்கு மறைமுகமாக நடக்கும் போரை நேரடிப் போராக அதிகப்படுத்த தயாராக இருப்பதாக கூறுகிறார்கள்.
-சங்கர சுப்பிரமணியன்.