கட்டுரைகள்

“வசப்படுதலும்” ….. “வசப்படுத்தலும்” ….. ஏலையா க.முருகதாசன்.

ஒரு விடயத்தில் வசப்படுத்தல் நடைபெறுகையில் வசப்படுதல் நடைபெற்றுவிடுகிறது.

இந்த இரண்டு விடயங்களும் உலகில் எல்லா இடங்களிலும் எல்லாத் துறைகளிலும் இருந்து வருவது மட்டுமல்ல மனிதர்களின் குணங்களோடும் அவை சம்பந்தப்பட்டவையாகவே இருக்கின்றது.

ஓன்றின் மீதான விருப்பத்தை ஏற்படுத்துவதும் அதை தமது நலனுக்காக பயன்படுத்துவதும் வசப்படுத்தலுக்குள் அடங்கும்.

அரசியல் சித்தாத்தங்களாகட்டும் கோட்பாடுகளாகட்டும் அதனூடாகவே அரசியலைக் கொண்டு செல்கின்ற அரசியல்வாதிகள் தமக்கான ஒரு கூட்டத்தை சேர்க்க வேண்டிய நிலை இருப்பதால் மக்களை அணிதிரட்;டுவதற்கும் தனித்தனி மனிதர்களை தமது கொள்கைளை நோக்கி வரவைப்பதற்கும்அதன்மீது அவர்களை இசைவாக்கம் கொள்ள வைப்பதற்குமாக எடுக்கப்படும் தீவிர நடவடிக்கைக்கு மூளைச்சலவை என்று பெயர் உண்டு.மூளைச்சலையின் அடுத்த ஈர்ப்பு வசப்படுத்தலேயாகும்.

சிலர் தமது கட்சியின் மீது தன்னைவிட, தன் குடும்பத்தைவிட, ஏன் தனது மனைவியை விடவும் வெறித்தனமான பற்றுக் கொண்டவர்களாக இருப்பார்கள்.

அரசியல் கட்சித் தொண்டர்கள் உட்பட கட்சியைச் சார்ந்த சாதாரண பொதுமக்களையும் தம்மை நோக்கி கவர்ந்திழுக்கத்தக்க வகையில் தமது அரசியல் கொள்கைகள் பற்றி கவர்ச்சிகரமாகவும்,மற்றைய கட்சிகளைவிட தமது கட்சிக் கொள்கைகளே மக்களுக்கு மிக மகிழ்ச்சியான வாழ்வை ஈட்டித்தரும் என அரசியல்வாதிகள் சொல்வார்கள்.

அரசியல் கல்வியை மேற் கொள்ளும் மாணவர்களுக்கு எவ்வாறு மக்களை அழகான உரைவீச்சு மூலமும் கலந்துரையாடல் மூலம் கவர்ந்திழுக்கலாம் என்பது பற்றியும் சொல்லிக் கொடுப்பதுண்டு.

மக்களைத் தம்பக்க வசப்படுத்தலுக்காக எது சமகாலத்தில் மக்களின் வாழ்க்கைக்கு பாரமாகவும் எந்த நேரமும் அதைப்பற்றியே வீட்டிலும்,வெளியிலும் பணியிடங்களில் அவர்களின் மனதையம் மூளைனயயும் போட்டுக் குழப்புகின்றதோ இந்தக் குழப்பத்தின் பயனாக,பணி முடிந்து வீட்டுக்குச் செல்லும் ஒருவர,; அங்கு மனைவி பிள்:ளைகளுடன் மகிழ்ச்சியாக நிம்மதியாக நேரத்தைச் செலவழிக்க வேண்டிய ஒய்வுச் சூழலில் வீட்டிலேயே எடுத்ததற்கெல்லாம் எரிந்து விழுகின்ற விடயத்தை அரசியல்வாதிகள் கையிலெடுத்து தாம் தேர்தலில் வெற்றிபெற்றால்,வீட்டிலும் சரி வெளியிலும் சரி பணியிடங்களிலும் சரி செல்லும் இடங்கள் எங்கும் நீங்கள் மகிழ்ச்சிப் பிரவாகத்தில் மிதப்பீர்கள் எனச் சொல்லி தம் கட்சிக் கொள்கைப் பக்கம் வசப்படுத்திவிடுவார்கள்.

வசப்படுதல்,வசப்படுத்தல்,மூளைச்சலவை,இசைவாக்கம் இவை நான்கும் ஒன்றுக்கொன்று தொடர்புள்ளவை.இவற்றைச் சகோதரத்தன்மை உடையவை

என்றும் சொல்லலாம்.தர்க்கக் கல்வியைக் கற்றவர்களின் வசப்படுத்தல் வெளிப்பாடு நுணுக்கமானதாக இருக்கும்.

தனக்கு முன்னால் நின்று ஒரு விடயத்தை விளங்கப்படுத்துபவர் உண்மை சொல்கிறாரா பொய் சொல்கிறாரா என்பதைத் தீர்மானிக்க கால அவகாசம் கொடுக்காதவாறு தனது பேச்சினால் வசப்படுத்திக் கொண்டிருப்பவர்,கேட்பவர் எந்தந்த கோணங்களில் கேள்விகளை மனதில் தயார் பண்ணினாலும் கொள்கை விளக்கம் கொடுக்கும் அரசியல்வாதி கேட்பவரின் மூளைக்குள் தனது தர்க்க நுண்ணறிவின் மூலம் போய் அமர்ந்து கேள்விக் கதவுகளை அடைத்தடைத்து பதில் சொல்லிக் கொண்டிருப்பார்.

உதாரணமாக ஒரு குடும்பத் தலைவன் தனது மாதாந்த வருவாய்க்கும் மாதாந்த செலவுக்குமிடையில்,செலவு அதிகரித்து வட்டிக்கு கடன் வாங்கி தனது வாழ்க்கையை நடத்திய போதும் அந்தக் குடும்பத் தலைவனுடைய செலவை கட்டுப்படுத்த மூடியாத நிலையில் வட்டிக்கு மேல் வட்டி வளர்ந்து அதுவே அக்குடும்பத் தலைவனையும் குடும்பத்தில் உள்ள மற்றவர்களையும் நிம்மதியிழக்கச் செய்து விடுகிறது.

அத்தகையவர்களை நோக்கி தனது பிரசாரத்தை மேற்கொள்ளம் அரசியல்வாதி உங்களுக்கு இந்த நிலைமைக்குக் காரணம் இப்ப இருக்கிற அரசாங்கம் தாறுமாறாக வரியை உயர்த்தி உங்களுடைய வருவாயிலிருந்து பெரும்பகுதியை வெட்டிவிடுகின்றது.

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இப்பொழுது நீங்கள் செலுத்தும் வரியைவிட அரைவாசிக்கும் கீழேதான் வரியை அறவிடுவோம்,எம்மிடம் இன்னொரு திட்டமும் உண்டு நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இரண்டு வருடங்களுக்கு வரியே அறவிட மாட்டோம் என்று சொல்ல குடும்பத்தலைவன் அக்கட்சி மீது வசப்பட்டுவிடுவான்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.