உலகம்
நான் அதிபராக இருந்திருந்தால் இது நடந்திருக்காது… இஸ்ரேல் – ஈரான் தாக்குதல் குறித்து டிரம்ப்!
நான் அதிபராக இருந்திருந்தால் இஸ்ரேல் மீதான தாக்குதல் நடந்திருக்காது என்று முன்னாள் அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.
கடந்த சில நாட்களாக இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் நேற்று திடீரென இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதாக செய்திகள் வெளியாகி உள்ளன
நள்ளிரவில் ஆளில்லா விமானங்கள் மூலம் ஈரான் தாக்குதல் நடத்தி உள்ளதாகவும் ஜெருசலேம் நகரின் சில பகுதிகளில் பயங்கர சத்தம் கேட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த தாக்குதலுக்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில் முன்னாள் அமெரிக்க அதிபர் டிரம்ப் இது குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
நான் இந்த நேரத்தில் அமெரிக்க அதிபராக இருந்திருந்தால் ஈரான் – இஸ்ரேல் இடையிலான போர் பதற்றம் ஏற்பட்டிருக்காது என்றும் கண்டிப்பாக அப்படி நடக்க அனுமதித்திருக்க மாட்டேன் என்றும் கூறியுள்ளார்
இஸ்ரேல் தாக்குதலுக்கு உள்ளாகி இருப்பது கடும் கண்டனத்திற்கு உரியது என்றும் உடனடியாக இந்த தாக்குதல் நிறுத்தப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.