விமானப்படை வீரர்களின் எண்ணிக்கையை குறைக்க தீர்மானம்
2030 ஆம் ஆண்டளவில் சிறிலங்கா விமானப்படையில் சேவையாற்றும் 35,000 விமானப்படை வீரர்களின் எண்ணிக்கை 18,000 ஆக குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ச (R. A. U. P. Rajapaksa) தெரிவித்துள்ளார்.
இதேவேளை குறைக்கப்பட்ட விமானப்படையினரின் எண்ணிக்கைக்கு பதிலாக நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்த நம்புவதாகவும் விமானப்படை தளபதி மேலும் கூறியுள்ளார்.
அக்குரகொட விமானப்படைத் தலைமையகத்தில் நேற்று (10) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் விமானப்படைத் தளபதி இதனை குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்
“நாங்கள் ஏற்கனவே விமானப்படையைக் குறைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறோம், தொழில்நுட்பம் அவ்வப்போது மாறுவதால், விலையும் குறைகிறது.
சிசிடிவி நமக்கு புதிதல்ல. அத்தகைய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதன் மூலம், விமானப்படையை ஓரளவு குறைக்கும் திறன் நம்மிடம் உள்ளது
உயர்தொழில்நுட்ப கமெரா தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தினால் படையினரின் எண்ணிக்கையைக் குறைக்கலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.