அரசியலில் இருந்து ஒதுங்குங்கள் : முன்னாள் அதிபர்களுக்கு பகிரங்க அறிவிப்பு
தீவிர அரசியலில் ஈடுபட்டுள்ள நான்கு முன்னாள் அதிபர்களும் தமது சொந்த நலனுக்காகவும், மக்களுக்காகவும் தீவிர அரசியலில் இருந்து ஒதுங்க வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.
முன்னாள் அதிபர்களான மகிந்த ராஜபக்ச, சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, மைத்திரிபால சிறிசேன மற்றும் கோட்டாபய ராஜபக்ச ஆகியோர் தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்க வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.
மக்களின் நலனுக்கு நல்லது
“அரசியலில் இருந்து விலகி இருப்பது அவர்களின் சொந்த ஆரோக்கியத்திற்கும், மக்களின் நலனுக்கும் நல்லது. அவர்களுக்காக செலவிடப்படும் பொது நிதியை எந்த அரசியல் விஷயத்திற்கும் பயன்படுத்தக்கூடாது” என்று அவர் குறிப்பிட்டார்.
அமெரிக்காவில் ஒருவர் மட்டுமே
“அமெரிக்க அதிபர் ஜோன் குயின்சி அடம்ஸ் ஒரே ஒரு முறை அமெரிக்க காங்கிரஸுக்கு போட்டியிட்டார். பதவியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகும் அரசியலில் இருக்கும் ஒரே வெளிநாட்டு தலைவர் அவர் தான்,” என்று அவர் மேலும் கூறினார்.