இந்தியாவில் தஞ்சம் புகுந்த இலங்கைத் தமிழர் உள்ளிட்டவர்களும் இந்திய குடியுரிமைத் திருத்த சட்டமும்!
குடியுரிமைத் திருத்தச்சட்டம் முந்தைய குடியுரிமைய இழக்காமல் இரட்டைக் குடியுரிமைக்கு வழிவகுக்குறது. இரட்டைக் குடியுரிமை, குடியுரிமைச் சட்டம், 1955 மற்றும் இந்திய அரசியலமைப்பையும் மீறுகிறது. குடியுரிமைத் திருத்தச் சட்டத்தின்படி குடியுரிமைக்காக
விண்ணப்பிக்கும் வெளிநாட்டினர் அவர்கள் சொந்தநாட்டின் குடியுரிமையை இழக்க வேண்டியதில்லை.
இந்தியாவில் தஞ்சம் புகுந்துள்ள ஒடுக்கப்பட்ட சிறுபான்மையினரான
பாகிஸ்தானின் அஹ்மதியர்கள் மியாமரின் ரோஹிங்கியர்கள் மற்றும் இலங்கத் தமிழர்கள் இச்சட்டத்தில் குடியுரிமைக்கு விண்ணப்பிக்க முடியாமல் விலக்கப்பட்டுள்ளார்கள்.
குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை எதிர்த்து விண்ணப்பம் செய்துள்ள மனுதாரர்கள் இச்சட்டம் ஒடுக்கப்பட்ட சிறுபான்மையினருக்கு எந்த வகையில் உதவமுடியும் என்ற கேள்வியை வைத்து கோரிக்கை எழுப்பியதோடு உச்ச நீதிமன்றத்திலும் வாதாடுகிறார்கள்.
ஏப்ரல் 9, விசாரணைக்கு முன் மார்ச் 11ல்
அறிவிக்கப்பட் குடியுரிமைத் தடுப்பச் சட்டத்தின் மேல் தடைவிதிக்குமாறு மனுதாரர்கள் எழுத்துமூலம் வேண்டுதல் சமர்ப்பித்துள்ளார்கள். குடியுரிமைச் சட்டம் 1955ல் பிரிவு 9 மற்றும் அரசியலமைப்பு சட்டப்பகுதி இரண்டுமே முழுமையாகவும்
வெளிப்படையாகவும் இரட்டைக் குடியுரிமை பெறுவதை மறுக்கிறது என்றும் சமர்ப்பித்தலில் கூறியிருக்கிறார்கள்.
குடியுரிமைத் திருத்த சட்டத்தின் நோக்கம் சட்டத்தை மீறி குடியேறிய ஒடுக்கப்பட்ட சிறுபான்மையினருக்கு விரைவாக இந்திய குடியுரிமை வழங்குவதாகும். இதில் டிசம்பர் 31, 2014க்கு முன்வந்த ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தானைச் சார்ந்த இந்துக்கள், சமணர்கள், சீக்கியர், பௌத்தர்கள், பார்சியர்கள் மற்றும் கிறித்தவர்கள் அடக்கம்.
ஆனால் மூத்த வழக்கறிஞர் கபில் சிபில் மற்றும் வழக்கறிஞர் ஹாரிஸ் பீரன் வழக்காடும் முஸ்லிம் லீக் வழிநடத்தும் மனுதாரர்கள் 2024 சட்டத்தை குறைகள் நிறைந்ததாக சொல்கிறார்கள். மேலும் ஒரு நாட்டில் குடியுரிமை வழங்கும்போது முந்தைய குடியுரிமையை முதலில் துறப்பது முக்கியமானது என்பதையும்
விண்ணப்பதாரரின் மற்றநாட்டு குடியுரிமை,
குடியுரிமை வழங்குவதற்கு தெளிவாக இருக்கவேண்டிய தன்மையையும் கவனிக்கவில்லை.
இரட்டைக் குடியுரிமையில் ஒன்றை இந்திய குடியுரிமையாய் வழங்கும்போது விண்ணப்பதாரரின் மற்ற நாட்டுக் குடியுரிமை தெளிவுடைய தன்மையுடன் இருக்க வேண்டும் என்பதையும் மனுதாரர்கள் குறிப்பிட்டிருக்கின்றனர். குடியுரிமை திருத்தச் சட்டத்தில் மத சம்பந்தமான துன்புறுத்தலின் அனுமானம் இருப்பதாக மனுதாரர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.
அரசு மதங்களுடைய நாடுகளின் துன்புறுத்தலில் இருந்து வெளியேறிய அகதிகளுக்கு இச்சட்டம் உதவுவதாக மத்திய அரசு இதை பார்க்கிறது. ஆனால் ஒரு குறிப்பிட்ட இன மக்கள் மட்டும் இச்சட்டத்தின் பலன்களைப் பெற தகுதியானவர்களாக இருப்பதாக மனுதாரர்கள் கூறியிருக்கின்றனர்.
மற்ற அகதிகள் தொடர்ந்து சட்டவிரோதமாக குடியேறியவர்களாக கருதப்படுவதோடு எந்த வகையிலும் இந்தியக் குடியுரிமையை பெறமுடியாதபடி இச்சட்டம் தடை செய்கிறது. இச்சட்டத்தில் பாகிஸ்தானியர்களுக்கு குடியுரிமை பெறும் வாய்ப்பிருப்பினும் பாகிஸ்தானின் மிகவும் ஒடுக்கப்பட்ட இனமான அஹ்மதியருக்கு பாதுகாப்பை வழங்க இச்சட்டம் தவறியுள்ளது.
மேலும் பகுத்தறிவுவாதிகள், கடவுள் நம்பிக்கையற்றவர்கள் மற்றும் மதசம்பந்தமற்றோராக இருக்கும்
அஞ்ஞானவாதிகள் போன்றோரை இச்சட்டம் குடியுரிமை பெறவிடாமல் தடுப்பதாகவும் மனுவில் கூறியிருக்கிறார்கள்.
மியாமரிலிருந்து வந்த அகதிகளும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். 1935 வரை பிரிட்டிஷ் இந்தியாவின் ஒருபகுதியாக இருந்த மியாமர் முஸ்லிம் ரோஹின்கியா அகதிகளுக்கு எதிராக திட்டமிட்ட இனப்படுகொலை நடந்திருப்பதை பன்னாட்டு நீதிமன்றம் கண்டறிந்த பின்பும் ஒடுக்குமுறை காரணமாக தற்போது இந்தியாவில் மிகவும் இழிவானநிலையில் நாடு கடத்தப்படலாம் என்ற பயத்துடன் அவர்கள் வாழ்ந்து வருகிறார்கள்.
இத்திய குடியுரிமைத் திருத்த சட்டமும் அதன் வரைமுறைகளும் அன்மை நாடான ஶ்ரீலங்காவின் ஒடுக்கப்பட்ட தமிழினத்தின் இந்துக்களையும் தடைசெய்துள்ளது. இந்தியாவின் எல்லை நாடான சீனாவிலுள்ள ஒடுக்கப்பட்டுள்ள புத்தமதத்தினர் மற்றும் உய்குர் முஸ்லிம்களையும் இச்சட்டம் விலக்கியுள்ளது. அங்குள்ள பல சகாப்தங்களாக ஒடுக்கப்பட்டு வேறுபாட்டை அனுபவித்து வரும் யூத இனமக்களையும் விலக்கப்பட்டிருப்பதை மனுதாரர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.
பிளவு பட்டதையும் ஒன்றிணைந்த இந்தியாவாக இருந்ததையும் காரணம் காட்டி முஸ்லிம் அல்லாதவர்களை பாதுகாக்கப் படவேண்டியவர்கள் பட்டியலில் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். அறிக்கையின் பொருள் மற்றும் காரணத்தின் அடிப்படையில் ஆப்கானிஸ்தானை பிளவுபடாத இந்தியாவில் இருந்ததாக
அவர்கள் சட்டடத்தில் கூறுகிறார்கள்.
இதனால் அடிப்படைக் கோரிக்கையான குடியுரிமைத் தடுப்புச் சட்டம் குடியுரிமையின் பலன்களை ஒடுக்கப்பட்ட சிறபான்மையினருக்காக அதிகப்படுத்தியுள்ளது என்பதில்
அடிப்படையிலேயே குறைபாடுள்ளதுடன் ஒடுக்கப்பட்ட இனத்துக்கும் மற்ற வகையிருக்கும் இடையே தன்னிச்சையாக தேர்ந்தெடுத்திருப்பதால் தவறுள்ளது.
உள்ளபடி குடியுரிமை திருத்தச் சட்டத்தினால் சேர்க்கப் பட்டவர்கள் குறித்து ஒரு பிரச்சினையும் இல்லை. மாறாக சேர்க்கப்படாதவர்கள் குறிப்பிட்ட
அகதிகளுக்கான திட்டமிடலில் அறிவுசார்ந்த பங்கெடுப்பின் குறைபாடுள்ளது என்பதை தெரிவிப்பதாக எழுத்துப் பூர்வமான மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
குடியுரிமை என்பது “உரிமைகளைப் பெறுவதற்கான உரிமை” என்பதை மனுதாரர்கள் எடுத்துக் காட்டியுள்ளனர். மேலும் குடியரிமை வழங்குவதில் பாகுபாடுள்ள வழிமுறைகள் குறிப்பாக மிகவும் சிக்கலான சட்டப் பிரச்சினைகளை உருவாக்கும் என்றும் கூறியுள்ளார்கள்.
-சங்கர சுப்பிரமணியன்.