இலங்கை
விகாரைகளை சுற்றும் ராஜபக்சக்கள்! நாட்டுக்கு பேராபத்து என்கிறார் சாணக்கியன்

சிறிலங்கா அதிபர் தேர்தல் நெருங்கிவரும் காலத்தில் ராஜபக்சர்கள் விகாரைகளை சுற்றிதிரிந்தால் அது இந்த நாட்டுக்கு ஒரு ஆபத்தான நிலைமை என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
மேலும், சிறிலங்காவில் அதிபர் தேர்தல் நடைபெற்றால் இந்த நாட்டின் அதிபரை தீர்மானிப்பவர்களாக தமிழர்கள் இருக்கவேண்டும் எனவும் கூறியுள்ளார்.
மட்டக்களப்பில் நேற்று (08) மாலை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை கூறியுள்ளார். இதன்போது கருத்து தெரிவித்த அவர்,
கிளிநொச்சிக்குள்ளேயே செல்லமுடியாத அமைச்சர் ஒருவரின் ஆதரவினை கொண்டு சிறிலங்கா அதிபர் தேர்தலில் ரணில் விக்ரமசிங்க வெற்றிபெறுவார் என நினைத்தால் அது ஒரு சவாலான விடயம் என கூறினார்.